பந்தைக் கையால் விடாமல் தட்டிக் கொண்டிருக்கும் போட்டியில் காயத்ரியும், தொலைவிலிருந்து பக்கெட்டுக்குள் பந்தைப் போடும் போட்டியில் முத்துலட்சுமியும் வெற்றி பெற, அடுத்ததாக அரங்கத்தையே உற்சாகமாக எழ வைத்தது அந்தாக்ஷரிப் போட்டி. "மிருகங்கள், பறவைகள் பெயர்ல ஆரம்பிக்கற பாடல்கள பாடுங்க..." என்று போட்டி ரூல் அறிவிக்கப்பட, 'புலி உறுமுது புலி உறுமுது...' என்று டெரர் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து ஆரம்பித்த போட்டியாளர்கள், தொடர்ந்து ஒவ்வொரு பாடலிலும் அரங்கத்தின் ஆரவாரத்தை அதிகமாக்கினர்.
அதன்பின் ஒரு பாடலின் மெட்டும், வேறு பாடலின் ட்யூனுமாக தொகுப்பாளினி பாட, 'இந்த ரெண்டு பாடல்களையும் பிரிச்சு நீங்க சரியா பாடணும்...' என்றதும், இசை அன்னப் பறவையாய் மாறி பிரித்து பெடலெடுத்து விட்டனர் வாசகிகள்.
இறுதியாக, ஐ.டி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் போட்டிகளில் வென்ற வாசகிகளுக்கு பலத்த கை தட்டல்களுக்கு இடையே பரிசினை வழங்கினார். ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் 'சன்ஃபீஸ்ட் கிஃப்ட் பேக்'கும் வழங்கப்பட்டது!
"நாங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்பவே ஹேப்பி!" என்ற ஒரு சுடிதார், "நம்ம அவள் விகடனுக்கு ஒரு 'ஓ' போடுங்க..." என்று மொத்தக் கூட்டத்தையும் அழைக்க, விண்ணதிர எழுந்த சத்தம் சொன்னது... வாசகிகளின் உற்சாகத்தை!
|