Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஒவ்வொன்றுக்கும் பரிசுரூ.150
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

'கொக்கு ஏன் வெள்ளையா இருக்கு?'

என்னுடைய ஊர் திருவாரூர் மாவட்டம், வடுவூர். என் அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தபோது பறவைகளின் சரணாலயமாக இருக்கும் 'வடுவூர் ஏரி'க்கு தினமும் மாலை என் குழந்தைகளை அழைத்துச் சென்றேன். பறவைகள் பற்றி

குட்டீஸ் குறும்பு!

குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது என் நான்கு வயது இளைய மகள், "ஏம்மா காக்கா கறுப்பாயிருக்கு?" என்று கேட்க, நான், "அது வெயில்லயே சுத்திட்டு இருக்கறதால கறுப்பாயிருக்கு" என்று சமாளித்தேன். உடனே அவள், "அம்மா... கொக்கும்தானே வெயில்லயே சுத்துது. அது மட்டும் வெள்ளையா இருக்கு..?" என்று தாமதிக்காமல் எதிர்க்கேள்வி கேட்க, இந்த முறை "அம்மா வுக்கும் தெரியல யேம்மா..." என்று நான் சரண்டர்!

- எம்.ரேகா, திருச்சி

பூனைக்கும் எலிக்கும் சாக்லேட்!

குட்டீஸ் குறும்பு!

இரண்டு வயதாகும் என் மகன் ஹரீஷ், டி.வி-யில் 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்த்துக் கொண்டிருந்தான். அது சாப்பாட்டு நேரம் என்பதால், ''சாப்பிடு'' என்று அழைத்தேன் வேண்டாம் என்று அடம்பிடித்தான். உடனே, "உன் வயிற்றில் ஒரு பூனையும், இரண்டு எலியும் இருக்கு. அதுங்களுக்கும் பசிக்கும். அதனால நீ சாப்பிடு'' என்றேன். உடனே சாப் பிட்டு விட்டான். மறுநாள் காலை அவனுடைய அப்பா வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தார். அப்போது, ''அப்பா, என் வயிற்றில் இருக்கும் பூனைக்கும், எலிக்கும் சாக்லேட் வாங்கிட்டு வாங்க" என்று சொன்னபோது... வீட்டில் ஒரே சிரிப்பு மழைதான்.

- கே.சுபா, கோயம்புத்தூர்

ஆக்டோபஸ் தோசை!

குட்டீஸ் குறும்பு!

அன்று என் கணவருக்கு கோதுமை தோசை சுடும்போது, கடைசி மாவை அப்படியே தோசைக் கல்லில் ஊற்ற, மாவு இஷ்டத்துக்கு ஓடி... தோசைக்கு கை, கால் முளைத்தது. அதை என் கணவருக்கு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அந்த நேரம் பார்த்து வந்த எங்கள் மாடி வீட்டு வாண்டு ரோஹன், டைமிங்காக (உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆக்டோபஸ் ஜோசியம் ஓடிக் கொண்டிருந்த நேரம்) "அங்கிள்... உங்களுக்கு ஆக்டோபஸ் தோசை பண்ணியிருக்காங்க ஆன்ட்டி" என்று என்னைக் கிண்டல் செய்தான். உடனே அவனுடைய அக்கா, "ஆமாண்டா... அங்கிள் இதைச் சாப்பிட்டா, அவர் சொல்றது எல்லாம் நடக்கும்" என்று கேலி செய்ய, அந்த வாண்டுகளின் குறும்பை, சமயோசிதத்தை அவ்வளவு ரசித்தோம் நாங்கள்!

- என்.கோமதி, திருநெல்வேலி

குடல் முழுங்கி குட்டி!

குட்டீஸ் குறும்பு!

என் நான்கு வயது சுட்டிப் பையன் கிஷோர், சரியான வாலு. எதிலாவது ஏறி, இறங்கி, குதித்து, ஓடி என்று நம்மை பதற வைத்துக் கொண்டே இருப்பான். அன்று அப்படித்தான் சோபாவில் படுத்திருந்தவன், தலையை மட்டும் கீழே தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். நான் கோபத்தில், "ஏண்டா இப்படி தலைகீழா படுத்திருக்க... குடல் வாய் வழியா வந்து விழப் போகுது பாரு..." என்றேன். உடனே அவன் தாமதிக்காமல், "வந்தா, குடலை எடுத்து மறுபடியும் வாயில் போட்டு முழுங்கி வயித்துக்குள்ள வச்சுக்குவேன்" என்று சொல்ல, வீட்டில் வெடித்தது சிரிப்பு!

- ஜெ.இந்து, திண்டுக்கல்

முதுகைப் பிடித்த வாய்!

குட்டீஸ் குறும்பு!

மூன்று வயதாகும் என் பேரன் விஷாக்கிடம் அன்று, "பாட்டிக்கு முதுகில் வாயு பிடிச்சிருக்கு. வலி தாங்கமுடியல. நீ சேட்டை பண்ணாம இருக்கணும்... சரியா..?" என்றேன். அவன் உடனே கோபத்துடன் எனது வாயைப் பிடித்து இழுத்து, கிள்ளி என்னவோ செய்ய ஆரம்பித்து விட்டான். நான் ஒன்றும் புரியாமல், "டேய்... என்னடா செய்ற..?" என்று கோபிக்க, உடனே அவன், "பாட்டி... உன் முதுகைத்தான் 'வாய்' பிடிச்சுக்கிச்சே... அதான் அந்த வாயை அடிக்கறேன்..." என்று மழலையில் கூற, சிரித்த சிரிப்பில் வாயுத் தொல்லை பறந்து, வயிற்று வலி வந்துவிட்டது எனக்கு!

- ஏ.கே.கமலா, பெங்களூரு

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.
அனுப்பவேண்டிய முகவரி 'குட்டீஸ் குறும்பு,' அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.


குட்டீஸ் குறும்பு!
-ஓவியங்கள் சேகர்
குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism