Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!
ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.150
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் பக்கம்

தழையும் புடவை... பறக்கும் துப்பட்டா..!

மீபத்தில் ஒரு சிவாலயத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது, தழையத் தழைய பட்டுப்புடவை கட்டி வந்திருந்த இளம்பெண், சாமியைக்கூட முழு மனதோடு தரிசிக்க முடியாமல், அவஸ்தையுடன் புடவையை சரிசெய்த வண்ணமே இருந்தார். ஒரு கட்டத்தில் தரைவரை புரண்ட முந்தானை, ஒரு சந்நிதியின் தரையில்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

ஏற்றப்பட்டிருந்த கற்பூரத்தோடு உரச, பற்றிக்கொண்டது தீ. அதைப் பார்த்த நாங்கள் பதறி, "முந்தானையில தீ பிடிச்சிடுச்சும்மா..." என்று அவரைச் சுதாரிக்க வைப்பதற்குள், சடசடவென பாதி முந்தானையைத் தின்றுவிட்டது தீ. நல்லவேளை... காயம் எதுவும் இல்லாமல் அவர் பிழைத்தது ஆச்சர்யம்தான்.

தழையத் தழைய புடவை, காற்றில் பறக்கும் துப்பட்டா... கவனம் தேவை தோழிகளே!

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

மொபைல் தவிப்பு!

துரையில் என் தோழிக்குத் திருமணம். சென்னையில் இருந்து நான்கு தோழிகள் சேர்ந்து கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்தில் எங்களை பிக்-அப் செய்ய வரும் கார் டிரைவரின் செல்போன் எண், நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் முகவரி ஆகிய விவரங்களை என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியிருந்தாள் தோழி.

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

விடியற்காலை மூன்றேகால் மணிக்கு மதுரையில் இறங்கியதும் என் மொபைலை எடுத்துப் பார்த்தால், சுத்தமாக சார்ஜ் இறங்கி உயிரை விட்டிருந்தது. "அடிப்பாவி... ஹோட்டல் விவரம், டிரைவர் நம்பர் எல்லாம் மெஸேஜ்லதானே இருக்கு... இப்போ என்ன பண்றது..?" என்று பதறிய என் தோழிகள், அவர்களின் சார்ஜர்களில் என் போனை மாற்றி மாற்றி சார்ஜ் போட்டுப் பார்க்க... என் பழைய மாடல் போனுக்கு யாருடைய சார்ஜரும் பொருந்தவில்லை. பேட்டரியை மாற்றிப் போடுவது, சிம் கார்டை மாற்றிப் போடுவது என்று எங்களின் எல்லா முயற்சிகளும் வொர்க் அவுட் ஆகாமல் போக, இறுதியாக மணப்பெண்ணான என் தோழியை அழைத்தால், கல்யாண பரபரப்பில் அவள் போனை எடுக்கவே இல்லை. செய்வதறியாமல் இரண்டு மணி நேரம் ஸ்டேஷனிலேயே கிடந்த எங்களுக்கு, மிஸ்டு கால்களைப் பார்த்துவிட்டு ஒரு வழியாக மணப்பெண் தோழி போன் செய்ய, விஷயத்தைக் கூறி விவரங்களைப் பெற்றோம்.

'ஒரு போன் பண்ணு', 'எஸ்.எம்.எஸ். அனுப்பு', 'மிஸ்டு கால் கொடு' என்று பயணம் மேற்கொள்பவர்களே... உஷார்!

- பெ.சுகுணா, சென்னை-91

பர்மிட் பரிதவிப்பு!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

சென்ற ஆண்டு லீவில் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். டிராவல்ஸ் காரைத்தான் புக் பண்ணியிருந்தோம். கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும்போது மாநில எல்லையில் காரின் 'பர்மிட்'டை செக் செய்தார்கள். அப்போதுதான் தெரிந்தது... அது புதுப்பிக்கப்படவில்லை என்ற விஷயம். கார் டிரைவர், தன் அலுவலகத்துக்கு மாற்றி மாற்றி போன் போட்டதிலேயே கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடிவிட்டது. எல்லாம் முடிந்து திருவனந்தபுரம் செல்வதற்கு பின்னிரவு ஆகிவிட்டது. ரூம், சாப்பாடு கிடைக்காமல் ரொம்ப ரொம்ப சிரமப்பட்டு விட்டோம்.

தோழிகளே, டூர் செல்ல வாடகை வாகனம் புக் செய்யும்போது... அவசியம் பர்மிட், டிரைவர் பேட்டா போன்ற எல்லா விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு, புக் செய்யுங்கள்.

- மகாலஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

திருக்குறளுக்கு பொட்டு வைத்த கோமளா!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

கல்லூரியில் படிக்கும் நாங்கள், தினமும் கூட்டாக பேருந்தில் சென்று வருவது வழக்கம். அன்று பேருந்தில் ஏறி பரபரப்புடன் இடம் பிடித்து அமர்ந்த எங்களின் கண்களில், பேருந்திலிருந்த திருக்குறள் பலகை பட்டது. அதில்,

'உள்ளுவ தெல்லாம் உயாவுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'

என்று இருந்தது. 'உயர்வுள்ளல்' என்பதில் 'ர்'-ல் உள்ள புள்ளி அழிந்திருக்க, நாங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதே... எங்கள் தோழி கோமளா வேகமாக எழுந்து சென்றாள். 'என்ன செய்யப் போறா..?' என்று நாங்கள் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, தான் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி 'ர்' என்றாக்கிவிட்டு வந்து அமர, நாங்கள் 'ஏய்...' என்று கல்லூரிப் பருவத்துக்கே உரிய குறும்போடு கை தட்ட, பேருந்தில் மற்ற இருக்கையில் இருந்தவர்கள் எல்லாம் எங்களை திரும்பிப் பார்த்தது ஹைலைட்!

இந்தக் ஆக்ஷன் கதையை நாங்கள் கல்லூரிக்கும் கடத்த, அன்றிலிருந்து வகுப்பில் அவளின் பட்டப் பெயர், 'திருக்குறளுக்குப் பொட்டு வைத்த கோமளா!' என்றாகிவிட்டது.

- செ.முகிலபாரதி, திண்டிவனம்

'ரியல்' எஸ்டேட்டா... 'ரீல்' எஸ்டேட்டா!

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

என் அப்பா, ஊருக்கு எல்லையில் புதிதாக பிளாட் போட்டு விற்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் சென்றவர், பெருந்தொகைக்கு ஒரு பிளாட்டை வாங்கினார். வாங்கிய கையோடு வீட்டு வேலையைத் தொடங்கியவருக்கு அஸ்திவாரம் போடும்போதே கிடைத்திருக்கிறது பேரதிர்ச்சி. "இங்க ஒரு பெரிய கிணறு இருந்திருக்குது. இதுக்கு மேல கட்டடம் எழுப்பினா அது உறுதியா நிக்காது. விசாரிச்சு வாங்கறதில்லையா..?" என்று இன்ஜினீயர் குண்டைத் தூக்கிப் போட, பிறகுதான் அப்பாவுக்கு தெரிய வந்திருக்கிறது... பத்து ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலமாக இருந்த அந்தப் பகுதியில், இவர் வாங்கியிருந்த பிளாட்டில்தான் பாசனத்துக்கான பெரிய கிணறு இருந்திருக்கிறது என்று. ரியல் எஸ்டேட்காரர்களிடம் சென்று விவரத்தைச் சொல்லி 'பிளாட்டை மாத்திக் கொடுங்க' என்று கேட்க, அவர்களோ அலட்டிக்கொள்ளாமல் மறுத்துவிட்டனர்.

நிலம் வாங்கும் தோழிகளே... ரியல் எஸ்டேட் தொழிலில் எப்படி வேண்டுமானாலும் நாம் ஏமாற்றப்படலாம் என்பதால்... ஒன்றுக்கு நாலு தடவை அல்ல, நூறு தடவை விசாரித்து முடிவெடுங்கள்.

- என்.ஏ.கே., வேலூர்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
-ஓவியங்கள் ஹரன்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism