என்னுடைய அக்கா பேத்தியின் புண்ணியாஜனத்தின் போது, ஐந்து தலைமுறையும் ஆரத்தழுவி, கொஞ்சி மகிழ்ந்ததைப் பார்க்கவே பரவசமாக இருந்தது. உடனே, அனைவரையும் உட்கார வைத்து எடுத்த போட்டோ இது.
என் பாட்டி, அவருடைய மகள் (எங்கள் அம்மா), என் அக்கா, அவருடைய மகள், மடியில் ஐந்தாவது தலைமுறை நாயகி என்று வரிசையாக அமர்ந்திருக்கின்றனர்.இவர்கள் அனைவருமே வீட்டின் மூத்த பெண்கள் என்பது ஸ்பெஷல் ஹைலைட்!
- கே.ராமநாதன், ஈரோடு
'மூழ்காத ஷிப்பே... ஃப்ரெண்ட்ஷிப்தான்!'
பள்ளிப் பருவத்தில் தொடங்கிய எங்களுடைய 58 வருட நட்பு, இன்று வரை நீடிக்கிறது. முதலில், மாம்பலம், சாரதா வித்யாலயா மகளிர் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து, 1961-ல் எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. (விலங்கியல் பிரிவு) முடித்தோம். களங்கமில்லாத நட்புக்கு சாட்சியாக சியாமளா, சீதா, நான் (கலா), லட்சுமி.
|