"சிலபசுக்காக ஒரு செமஸ்டருக்கு மட்டுமே இந்தக் கலையை கத்துக்கிட்டாலும், இது எங்களுக்குத் தந்திருக்கற தன்னம்பிக்கை அதிகம். காலேஜ், ஷாப்பிங்னு எங்க போனாலும் முதல்ல எல்லாம் மனசுக்குள்ள ஒரு தயக்கமும், பயமும், பாதுகாப்பின்மையும் ஓடிட்டே இருக்கும். ஆனா இப்போ, 'நம்மால நம்மள பாதுகாத்துக்க முடியும்'ங்கற தன்னம்பிக்கையும், ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்றதுக்கான தைரியமும் வளர்ந்திருக்கு''னு சொன்ன சின்னு,
''பொழுதுபோக்கு, ஆசை, சாதனைனு வேறெந்த காரணத்துக்காக இல்லாட்டினாலும், தன்னம்பிக்கைக்காவது எல்லா பெண்களுமே ஏதாச்சும் ஒரு தற்காப்புக் கலைய கத்துக்கலாம்"னு பரிந்துரைக்க, அதை ஆமோதிச்சாங்க ரேவதி!
பேராசிரியரும், களரிப் பயிற்சியாளருமான ராஜாரவிவர்மன், பல்கலைக்கழகத்தோட நிகழ்கலைத் துறையின் டீன் ராஜீவ் ரெண்டு பேரும், "களரியும் மற்ற பாரம்பரியக் கலைகளும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டே வர்றது கண்கூடு. அதனாலதான், நிகழ்கலை துறையில அதையெல்லாம் ஒரு பாடமாக்கினோம். பொருள் சேர்க்கறதுலயே குறியா இருக்கற இந்த உலகத்துல, எல்லா கோர்ஸ்களும் அதை நோக்கியே மாணவர்களை விரட்டிக்கிட்டிருக்கு. இதுக்கு நடுவுல இந்த பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் கோர்ஸ்ல அவங்களுக்கு கலை வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கறோம். அதுல மாணவர்களோட ஈடுபாட்டையும், எண்ணிக்கையையும் அதிகப்படுத்தறதுக்காக, படிப்பு செலவு, பயண செலவு, ஹாஸ்டல் செலவுனு எல்லாத்தையும் பல்கலைக்கழகமே ஏத்துக்குது. பாரம்பரியக் கலைகள் முற்றிலும் கரைஞ்சு போயிடாம இருக்கறதுக்கான அக்கறைதான் இது!" என்றனர் தெளிவான வார்த்தைகளில்!
|