Published:Updated:

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

Published:Updated:

தைரியம் தந்த தன்னம்பிக்கை...
ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!
ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

ண்ணெய் செக்கில் தலையைக் காட்டியது போல பிசுபிசு கேசம், சரோஜாதேவி போல பவுடர் கோட்டிங், பாட்டி கால மாடலில் சுடிதார், ஹவாய் செப்பல், தயங்கங்கள் நிறைந்த கண்கள், வெள்ளந்திப் பேச்சு, பீட்டர் இங்கிலீஷ் அம்மணிகளைக் கண்டால் அலறல்... இத்யாதி அடையாளங்களோடு வகுப்புக்கு இரண்டொரு வில்லேஜ் பெண்கள் இருப்பார்கள்தானே?!

"நான்கூட கல்லூரி நாட்கள்ல அப்படி ஒரு 'அருக்காணி'யாதான் இருந்தேன். கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் நடுவுல கிடந்தேன். ஆனாலும், படிப்பு மேல எனக்கிருந்த பிடிப்பும், அதுக்காக நான் வளர்த்துக்கிட்ட தன்னம்பிக்கையும் என்னைத் தளராமப் பிடிக்க, இப்போ நான் ஒரு பேராசிரியை!"

- அடக்கமாகச் சொல்கிறார் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய கடல்சார் நீலப் பச்சைப்பாசி ஆய்வுத்துறை பேராசிரியராக இருக்கும் மல்லிகா.

'பயோ ஃபெர்டிலைஸர் (இயற்கை உரங்கள்)' ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் பல அங்கீகாரங்கள் பெற்றிருக்கும் மல்லிகா, இங்கே, தன்னுடைய ஃப்ளாஷ்பேக் பேசுகிறார்... பள்ளத்தில் இருப்பவர்களை மலைமேல் ஏற்றிவிடும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பாடமாக!

"சொந்த ஊரு... சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி. டவுன் பஸ்கூட எட்டிப் பார்க்காத பாம்பட்டிக்காடு. அப்பாவுக்கு கூலி வேலை. அம்மா கிராமத்து மனுஷி. வீட்டுல நாலு பொண்ணுங்க, மூணு பையனுங்க. பொண்ணுங்கள்ல நான்தான் கடைசி. கிராமத்து வழக்கப்படி அக்காக்களுக்கு எல்லாம் பன்னெண்டு, பதிமூணு வயசுல எல்லாம் கல்யாணம் முடிஞ்சுடுச்சு. நான் கறுப்பு, கூடவே குட்டைங்கிறதால எனக்கு மட்டும் வரன் எதுவும் தகையல.

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!

'அதுவரைக்கும் படிக்கட்டுமே'னு வீட்டுல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்க, காலையில பழைய சாதம், மதியத்துக்கு சத்துணவு, இரவு சிம்னி விளக்குல படிப்புனு போயிட்டிருந்தது என் வாழ்க்கை..."

- அந்த பால்ய பருவத்து நினைவுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது மல்லிகாவுக்கு.

"நான் வாங்கின சுமாரான மார்க், சேலத்துல பி.எஸ்சி. பாட்டனி எடுக்க போதுமானதா இருந்தது. ஆனா, டவுன் காலேஜுல காலடி எடுத்து வைக்கற பட்டிக்காட்டுப் பொண்ணுங்களுக்கு வழக்கமா கிடைக்கற அவஸ்தை அனுபவங்கள் எனக்கும் எக்கச்சக்கமா கிடைச்சது.

நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுற பொண்ணுங்களப் பார்த்தாலே என்னோட நாக்கு மேலண்ணத்துல ஒட்டிக்கும். அவங்க உடை, பழக்கவழக்கம்னு எல்லாமே எனக்கு ஏக களேபரமா இருக்கும். சில பொண்ணுங்க, 'வாம்மா பட்டிக்காட்டுப் பட்டாம்பூச்சி. கத்திரிப்பூ தாவணியும், கனகாம்பரம் பூவெல்லாம் உங்க வீட்டுல நெறைய இருக்குமே?'னு எல்லாம் கிண்டல் பண்ணுவாங்க. 'காலேஜும் வேணாம்... ஒண்ணும் வேணாம்... வீட்டுக்கே போய்டலாம்'னு உள்ள ஒரு குரல் என்னை துரத்திட்டே இருக்கும்" என்றவர், அதற்குப் பின் எடுத்த அவதாரம், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

"என் பரிதவிப்பை புரிஞ்சுகிட்ட ஒரு மேடம், கடவுளா கை கொடுத்தாங்க. 'இங்கிலீஷ் ஒண்ணும் கம்பசூத்திரம் இல்ல; கத்துக்கலாம். நீ படிப்புல ஜொலிச்சா, உன் வெளித்தோற்றமெல்லாம் ஒரு பொருட்டேஇல்லை'னு புரிய வச்சாங்க.

'இங்கிலீஷ்தானே முதல் தகராறு. அதனால அடிப்படை ஆங்கிலம் கத்துக்குவோம்'னு நைட்டெல்லம் கண்விழிச்சு 'இஸ், வாஸ்'க்கெல்லாம் கூட டிக்ஷ்னரியோட மல்லுக்கட்டுவேன். ஓரளவு தன்னம்பிக்கை வந்ததும், அசட்டுத் தவறுகள் இல்லாம அந்த மொழிய பேசற அளவுக்கு முன்னேறினேன். படிப்புலயும் தீவிரம் காட்டினேன். என் மார்க்கை ஆச்சரியமா பார்த்த சக மாணவிங்க, எங்கிட்ட சகஜமாக பழக ஆரம்பிச்சாங்க. எம்.எஸ்சி., எம்.ஃபில்., பிஹெச்.டி-னு வேகம் குறைக்காம போனேன்" என்றவருக்கு, 'இதுவரைக்கும் படிச்சது போதும்... இனி கல்யாணம்' என்று ஊரிலிருந்து ஓலை வந்திருக்கிறது.

''வந்த வரன்கள்ல, திருச்சி வரன் ஒண்ணை டிக் பண்ணினேன். பிஹெச்.டி-யை முடிக்கற வரை திருச்சி, யுனிவர்சிட்டிக்கு போயாகணும்கறதும் அதுக்கு ஒரு காரணம்!" என்று அருகிலிருக்கும் கணவர் ஆசைத்தம்பியைப் பார்த்துச் சிரிக்க,

"கல்யாணத்துக்குகூட மூணு நாள்தாங்க லீவ் போட்டாங்க. வீடு, வேலை, உறவுகள், குழந்தைனு எல்லாத்தையும் கடந்து வெற்றிகரமா படிச்சு முடிச்சாங்க! அவங்களோட ஆராய்ச்சியில விளைந்திருக்கற நீலப்பச்சை பாசிகளால இப்போ அதிக மகசூல் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. பல்கலைக்கழக வளாகத்துல இவங்க உருவாக்கியிருக்கற இயற்கை காய், கனி, கீரைகள் அதுக்கு துளி சான்று!" என்று சொல்லும் ஆசைத்தம்பி, திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் உயரதிகாரி. இவர்கள் பிள்ளைகள் இருவரும் படிப்புக்காக சென்னையில் இருக்கிறார்கள்.

"கிண்டல்கள், கேலிகள் எல்லாம் திரும்பி ஓடவைக்கப் பார்த்தாலும், என் இலக்குல உறுதியா இருந்து, அதை அடைஞ்சிட்டேன். அந்தப் பெருமையோட, 'இந்தப் பட்டிக்காட்டு பட்டாம்பூச்சி குட்தான்!'னு எனக்கு நானே அடிக்கடி சொல்லிப்பேன்!"

- அடக்கமாக சிரிக்கிறார் மல்லிகா!

ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!
- எஸ்.கே.நிலா
ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!
ஓர் 'அருக்காணி'யின் பேராசிரியை அவதாரம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism