Published:Updated:

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

Published:Updated:

கொஸ்டீன் ஹவர்
ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!
ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!"

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

"கல்லூரிப் படிப்பு எதுவாக இருந்தபோதிலும், இணையாக கம்ப்யூட்டர் கல்வியும் பெற வேண்டும் என்பது இப்போது தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டது. எந்தத் துறை மாணவர்கள், எந்தெந்த கம்ப்யூட்டர் கோர்ஸை மேற்கொள்வது எதிர்காலத்தில் திட்டவட்டமாக பயனளிக்கும் என்ற ஆலோசனை கிடைத்தால் எங்களைப் போன்ற மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும்."

- எல்.விஜிதாகுமாரி மற்றும் தோழிகள், நெய்வேலி

எம்.ஆனந்தி, கணினித்துறை விரிவுரையாளர், காவேரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி

"இலக்கியப் பாடமாக இருக்கட்டும்... க்ரையோஜெனிக் இன்ஜினீயரிங்காக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் கம்ப்யூட்டர் அறிவு அவசியம் என்ற புரிதல், மாணவர்கள் பலருக்கும் ஏற்பட் டிருப்பது... சந்தோஷமான விஷயம். கூடவே, உங்களது கல்லூரிப் படிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்ல, நாளை உங்களது எதிர்காலத்தை எந்தத் துறை சார்ந்த வேலைவாய்ப்பில் தக்கவைத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்ற தெளிவான திட்டமிடல் இருந்துவிட்டால்... சுலபமாக அதற்கான கோர்ஸ்களில் சேர்ந்து உங்களை செம்மையாக்கிக் கொள்ளலாம்.

பொதுவாக, ஆர்ட்ஸ் குரூப் மாணவிகள்... கம்ப்யூட்டர் அறிவில் சற்று அலட்சியமாகவே இருப்பார்கள். ஆனால், வேலைவாய்ப்பில் எந்த நாற்காலியில் அமர்ந்தாலும் கணினித் திரைகளை யாராலும் தவிர்க்க முடியாது. எனவே, அடிப்படை கம்ப்யூட்டர் அறிமுகம், இன்டர்நெட் இயக்கம், தகவல் தேடல் போன்றவற்றுடன் எம்.எஸ். ஆபீஸ் படிப்புகள் கற்க வேண்டியது அவசியம். அதிலும் டாக்குமென்ட் தயார்படுத்தலுக்கு வேர்டும் (WORD), கணக்கீடுகளுக்கு எக்ஸெல்லும் (EXCEL), பிரசன்டேஷனுக்கு பவர்பாயின்ட்டும் (POWER POINT) அத்தியாவசியமானவை.

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!

இந்த அடிப்படை படிப்புகள் போக, இப்போது சில ஆர்ட்ஸ் துறை மாணவிகளுக்கு விசேஷ மென்பொருள் சார்ந்த படிப்புகள் அவசியமாகிவிட்டன. உதாரணத்துக்கு, ஜியாலஜி மாணவர்கள் ஆர்க் இன்ஃபோ (Arch Info) என்ற சாஃப்ட்வேர் படிப்பை கல்லூரிப் பருவத்திலேயே முடித்தால், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவார்கள்.

அடுத்ததாக, வணிகம், பொருளாதாரம், நிர்வாகம் துறை சார்ந்த மாணவிகள் 'டாலி' (Tally) போன்ற அக்கவுன்ட்டிங் அடிப்படையிலான கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்ளலாம். அவர்களது கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே இந்தப் பாடங்கள் இருப்பினும், அவை தேர்வு நோக்கத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கும். மேலும் கோர்ஸின் 'அப்டேட்கள்' கல்லூரிப் பாடத்திட்டத்தில் இடம்பெறாது போகவும் வாய்ப்பிருக்கிறது. இ-காமர்ஸ் (E-Commerce). படிப்பிலும் கவனம் செலுத்துவது நல்லது.

கணிதத்துறை மாணவிகள் எம்.எஸ்.ஆபீசுடன் 'சி-புரோகிராமிங்' (C-programming) படிப்பை ஆழ்ந்து படிப்பது, பிற்காலத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையினர் மற்றும் எம்.சி.ஏ. மாணவிகளுக்குத் தனியாக கம்ப்யூட்டர் பயிற்சி அநாவசியம் என்பது பொதுக் கருத்தாக இருக்கிறது. உண்மையில் இவர்கள்தான் பல்வேறு கம்ப்யூட்டர் சிறப்பு படிப்புகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, கல்லூரிப் பாடத்தில் 'விஷ§வல் பேஸிக்' என்பதாக இருப்பதை, வெளியே 'விஷ§வல் பேசிக் டாட் நெட்' என அப்டேட் நிலையில் அறிந்து கொள்ளலாம். அதிலும் பாடம் சார்ந்த கம்ப்யூட்டர் பயிற்சியை விஸ்தீரணமாக மேற்கொள்ளவும், படிப்பில் தேர்ச்சி போதாது என்று கவலைப்படுபவர்களும் தனியாக கோர்ஸ்களில் சேர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

நன்றாகப் படிக்கும் மாணவிகள்கூட, தங்கள் பாடப்பகுதி சார்ந்த செய்முறை படிப்பில் சிறப்பு பெற, கம்ப்யூட்டர் மையங்களில் இருக்கும் 'டெர்மினல்களை (நெட் இணைப்பு இல்லாத வெறும் கம்ப்யூட்டர்கள்) பயன்படுத்திக் கொள்ள மட்டும் கட்டண அடிப்படையில் சேர்ந்து பயன் பெறலாம்.

கம்ப்யூட்டர் துறை மாணவியர்க்கு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து சாதிப்பதுதான் இலக்கு எனில், அதற்கேற்ப மென்பொருள் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். மென்பொருள் நிறுவனங்கள் தற்போது எந்த மென்பொருளை அடித்தளமாக கொண்டு இயங்குகின்றன, அவற்றின் எதிர்கால விஸ்தரிப்புகள் எப்படியிருக்கும் என்பதை அந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசித்து படிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொறியியல் மாணவர்கள் தங்களது துறைசார்ந்த செய்முறையை அடிப்படையாக கொண்ட கம்ப்யூட்டர் படிப்புகளில் சேரலாம். கேட், கேம், ஆட்டோகேட் (CAD, CAM,AutoCAD) போன்ற டிசைனிங் தொடர்பான படிப்புகள் அவசியமானவை.

அதிகப்படியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் படிப்புகள் மட்டுமே... கம்ப்யூட்டர் கல்வியின் தரத்தைத் தீர்மானித்து விடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, சமீபத்தில் பிரபலமான எஸ்.ஏ.பி. (SAP) என்ற பிஸினஸ் சாஃப்ட்வேரை படிக்க பலரும் லட்சக்கணக்கில் செலவழித்தார்கள். ஆனால், வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த சாஃப்ட்வேருக்கு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் போதுமான வரவேற்பு இல்லாததால், படிப்பை முடித்தவர்கள் நொந்துபோய் காத்திருக்கிறார்கள்.

இறுதியாக ஒரு தகவல்... கல்லூரிப் படிப்போடு இணைந்த கம்ப்யூட்டர் கோர்ஸ் என்றதுமே பலரும் செய்யும் தவறு, சாஃப்ட்வேர் தொடர்பான படிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துவதுதான். ஆனால், வேலை வாய்ப்பில் ஹார்ட்வேர் தொடர்பானவையும் சோடை போவதில்லை. அடிப்படை ஹார்ட்வேர் நெட்வொர்க்கிங், ஹார்ட்வேர் செக்யூரிட்டி தொடர்பான படிப்புகள் மாணவர்களை வரவேற்க காத்திருக்கின்றன.

மொத்தத்தில், படிப்பது சாஃப்ட்வேரோ, ஹார்ட்வேரோ... தகுதி வாய்ந்த நிறுவனங்களில் மட்டுமே சேர்ந்து பயிற்சி பெறுங்கள். சர்வதேச கம்ப்யூட்டர் ஜாம்பவான்களான மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், சன் போன்றவை சான்றளிக்கும் சிறப்புத் தேர்வுகளை எழுதி உங்களை மேலும் பட்டை தீட்டிக் கொள்ளுங்கள். ஆடித்தள்ளுபடி, ஒரு கோர்ஸ் சேர்ந்தால் இன்னொரு கோர்ஸ் இலவசம், பரிசுப் பொருட்கள் போன்ற கவர்ச்சிகளில் மயங்கி சேரும் அநாவசியமான படிப்புகள்... நேரம் மற்றும் பணத்தை விரயமாக்குவதோடு குழப்பத்தையே பரிசாகத் தரும்... கவனம்!"

படிப்பு, வேலை வாய்ப்பு, கன்சல்டன்ஸி நம்பகத்தன்மை, நேர்காணல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள், பகுதி நேர வேலை விவரங்கள், மாடலிங் வாய்ப்புகள், 'பியூட்டி கொர்ரி'க்கள், மனவியல் குழப்பங்கள், காதல் சிக்கல்கள், நட்பு துரோகங்கள், இணைய தளம் மூலமாக வரும் பிரச்னைகள்... என்று மாணவ சமுதாயத்தின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தருகிறோம் இங்கே... விளக்கமாக! கேளுங்கள்... காத்திருக்கிறோம்!

ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!
-
ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!
ஆர்ட்ஸ் குரூப் படிச்சாலும்... கம்ப்யூட்டர் மேலயும் கண் பதிங்க!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism