"100 மீட்டர் தடை ஓட்டத்தை, 14.4 நொடியில கடந்த தேசிய சாதனையும், நேஷனல் லெவல் தடகளத்துல சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுல இரண்டாமிடம் வகிக்கறதும் நான் பெருமையா நினைக்கற வெற்றிகள்"னு சிரிக்கற ஹேமாஸ்ரீ,
"என் தந்தை... சாதாரண மில் தொழிலாளி. என் குடும்பத்தோட வறுமை, கஷ்டம் எல்லாம் கடந்து வந்திருக்கற நான், ஒவ்வொரு முறை போட்டியில ஓடத் தொடங்கறதுக்கு முன்னாடியும், 'இந்த வெற்றிதான் என் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகுது'னு நினைச்சுப்பேன்"னு தன் வெற்றிக்கான ரகசியத்தை சொன்ன ஹேமாஸ்ரீ,
"இந்தியாவுல நடக்கவிருக்கற காமன்வெல்த் போட்டியில சாதனைகள் படைக்கணும். அப்புறம், ஒலிம்பிக்ஸ்ல ஜெயிச்சு நாட்டுக்கு பெருமை சேர்க்கணும்!"னு உறுதியான குரல்ல ஓங்கி ஒலிச்சாங்க!
|