Published:Updated:

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

சாமான்ய பெண்களின் சாதனை கதை

Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
கு.ராமகிருஷ்ணன்
சாமான்ய பெண்களின் சாதனை கதை
சாமான்ய பெண்களின் சாதனை கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்று பத்தாவதில் தோல்வி...இன்று தொட்டதெல்லாம் வெற்றி!
சாமான்ய பெண்களின் சாதனை கதை (12)

தாழ்வு மனப்பான்மையில் பிறந்த தன்னம்பிக்கை

" 'வீடு, வசதினு வாழ்க்கை நல்லா இருக்கு'ங்கற கான்செப்ட்ல எனக்கு நம்பிக்கை இல்ல. நமக்குனு ஒரு அடையாளத்தை... நம்ம உழைப்பால சம்பாதிக்கலைனா, வாழ்க்கையில சுவாரஸ்யமே இருக்காது. இயங்கிக்கிட்டே இருந்தாதான் வாழ்க்கையில ஒரு பிடிப்பு இருக்கும். உழைப்பும்கூட ஒருவிதத்துல சுகமானதுதான்..."

- தொடர்ச்சியாக பல வெற்றிகளைக் கடந்து வந்தாலும்கூட, அடங்காத உழைப்புத் தாகத்தோடு பேசுகிறார் திவ்யா.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டிலுமே பொருளாதார தேவைகளைப் பொறுத்தவரை பிரச்னை இருந்ததில்லை திவ்யாவுக்கு. ஆனால், பத்தாவது ஃபெயிலான திவ்யா, 'ஏதாச்சும் தொழில் செய்யணும்' என்ற சுய அடையாளம் தேடும் உந்துதலில்... இன்று, மாதம் அரை லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டும் தொழில் பெண்மணியாக வளர்ந்து நிற்பதுதான், பலரையும் வியந்து பார்க்க வைக்கிறது!

தொழில் அறிவிலும், அனுபவத்திலும், பின்புலத்திலும் பூஜ்யமாக இருந்த திவ்யா, இன்று லெதர் கிளவுஸ் தயாரிப்பில் சுயம்புவாக எழுந்து, தான் பெற்றிருக்கும் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார் நம்மிடம்.

"திருச்சி, பாலக்கரைதான் சொந்த ஊர். படிப்புல எனக்கு ஆர்வமில்லாததால, பத்தாவதுல ஃபெயில். அதோட முடிஞ்சு போச்சு படிப்பு. அடுத்த வருஷமே உள்ளூர் மாப்பிள்ளையான லாரன்சுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க..." என்பவர் அதற்குப் பின்தான் உணர்ந்திருக்கிறார் படிப்பின் இழப்பை.

"வீடு, கணவர், குழந்தைனு போயிட்டு இருந்தது வாழ்க்கை. கல்யாணம், திருவிழானு கூடும்போது, சொந்தக்காரப் பொண்ணுங்கள சந்திப்பேன். அவங்கள்லாம் காலேஜ் படிப்பு, வேலை... இப்படியே பரபரனு இருக்கறதைப் பார்க்கும்போது, பத்தாவது ஃபெயிலுங்கற என் நிலைமைய நினைச்சு, தாழ்வு மனப்பான்மையால துடிச்சுப் போயிடுவேன். கணவர், என்னைச் சமாதானப்படுத்தினாலும், என் புலம்பல் ஓயல..." என்பவர், தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் பல.

சாமான்ய பெண்களின் சாதனை கதை

"பியூட்டிஷியன் கோர்ஸ் முடிச்சு, வீட்டுலயே பார்லர் ஆரம்பிச்சேன். மாசம் பத்தாயிரம் வருமானம் வந்தது. 'சூப்பர்'னு அதுலயே திருப்தி அடைஞ்சுடாம, 'அவள் விகடன்'ல வெளியான குந்தன் ஜுவல்லரி தயாரிப்பு தொடர்பான கட்டுரையின் வழிகாட்டு தலோட அந்த தொழிலையும் கத்துக்கிட்டு, ஃபேன்ஸி ஸ்டோர்கள்ல ஏறி, இறங்கி ஆர்டர்கள் வாங்கினேன். ஒரு கட்டத்துல பார்லர் கஸ்டமர்கள், தோழிகள், உறவினர்கள்னு வாடிக்கையாளர் வட்டம் விரிஞ்சுது. அடுத்ததா, குழந்தைகளுக்கான மெத்தை, நாப்கின், பொம்மைகள் தயாரிக்கவும் பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்தத் தொழிலையும் வீட்டுல இருந்தபடியே பார்த்தேன்.

மாசம் இருபத்தஞ்சாயிரம் வருமானம், இருபதுக்கு பேருக்கு வேலைனு தடதடனு ஏறினேன். இந்த மாற்றங்களால, 'படிக்கல'ங்கற வலி கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சாலும்கூட, அந்த வடு இருந்துகிட்டேதான் இருந்துச்சு" என்பவருக்கு, தனக்கான அடையாளத்தை இன்னும் ஆழமாக பதிக்க வேண்டும் என்ற துடிப்பு, மேலும் அதிகமாக... அப்போதுதான் பெண்கள் இறங்கத் தயங்கும் லெதர் கிளவுஸ் துறையில் குவிந்திருக்கிறது திவ்யாவின் கவனம்.

"கொஞ்சம் பெரிய அளவுல ஏதாவது ஒரு தொழில் தொடங்கணும்னு தீர்மானிச்சு, 'டிடீட்சியா' (TIDITSSIA-Tiruchi District Tiny and Small Scale Industries Association) மீட்டிங்ல கலந்துக்கிட்டேன். அங்க நான் தெரிஞ்சுக்கிட்ட பல தொழில் அறிமுகங்கள்ல, லெதர் கிளவுஸ் தொழிலும் ஒண்ணு. அங்க வந்திருந்த எல்லாரும் ஏற்கெனவே அறிமுகமான தொழில்கள்ல இறங்கவே ஆர்வம் காட்ட, 'கூட்டத்தோட கூட்டமா ஒரு தொழில் பண்றதைவிட, புதுசா ஒரு தொழில் பண்ணினா போட்டி அதிகம் இருக்காது... லாபம் பார்க்கலாம், தனித்துவமாவும் இருக்கும்...'னு யோசிச்ச எனக்கு, 'லெதர் கிளவுஸ் தொழில்' அதுக்கான சரியான தேர்வா பட்டுச்சு.

ஆனாலும், 'இது நமக்கு சரியா வருமா..?'னு பல முறை யோசிச்சேன். 'வீட்டுல இருந்துட்டே செய்யற விஷயம் இல்ல இது... சரியே வராது'னு பயமுறுத்தினாங்க சிலர். 'சரியான திட்டமிடலோடயும், தேவையான உழைப்போடயும், தேவைக்கு அதிகமான நம்பிக்கையோடயும் செஞ்சா... எதுவும் வசப்படும்'னு அவங்களுக்கு மட்டுமில்ல, எனக்கு நானே சொல்லிட்டு, இந்தத் தொழிலையே டிக் பண்ணினேன். ஆனா, அதையே இறுதி முடிவா எடுக்கறதுக்கு முன்ன, அதுபத்தின தொழில் தகவல்களைத் தேடினேன்" என்பவரின் இந்த முன்யோசனை அணுகுமுறை, இன்னும் பலம் சேர்த்திருக்கிறது.

" 'திருச்சியை சுத்தி அதிகமா சிமென்ட் தொழிற்சாலைகள் இருக்கறதால, அங்க வேலை பார்க்கற பணியாளர்களுக்கு இந்த லெதர் கிளவுஸோட தேவை இருந்துட்டேதான் இருக்கும். கூடவே, ஆட்டோமொபைல் தொழில்லயும் இந்த கிளவுஸ்களோட தேவை இருக்கும். அதனால, இந்த லெதர் கிளவுஸ் தொழில், திருச்சிக்கு டபுள் ஓ.கே!'னு நம்பிக்கைத் தகவல்கள் கிடைக்க, 'டிடீட்சியா'வும் 'நாங்க வழி நடத்தறோம்'னு பக்கபலமா நிக்க, 'இதுதான் இனி நம்ம தொழில்'னு முடிவு செஞ்சேன்" என்ற திவ்யா... இந்தத் தொழிலைத் தொடங்கியது ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில்! இன்று அவரின் மாத வருமானம், அறுபதாயிரம்!

எப்படி இந்த மேஜிக்? மிகக் கடினமான தொழில் என கருதப்படும் லெதர் கிளவுஸ் தயாரிப்பில் எப்படி இவரது கை ஓங்கியது? மார்க்கெட்டிங் சவால்களை எப்படிச் சமாளித்தார்? விவரங்களுடன், இத்தொழிலுக்கான வாய்ப்புகள், பயிற்சிகள், முதலீடு உள்ளிட்ட ஏ டு இசட் வழிகாட்டல் தகவல்கள்... அடுத்த இதழில்!

சாமான்ய பெண்களின் சாதனை கதை
- சாதனைகள் தொடரும்...
படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக்
சாமான்ய பெண்களின் சாதனை கதை
சாமான்ய பெண்களின் சாதனை கதை
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism