தொடர்ந்து குடிப்பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா எனும் ஈளை நோய், நீரிழிவு நோய், சிறுநீரக - கல்லீரல் நோய்கள், ரத்தக் குறைபாடு நோய், ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் தொடர்ந்து ஸ்டீராய்டுகள் உட்கொள்பவர்கள் போன்றவர்களையும் இந்நோய் தாக்க வாய்ப்பிருக்கிறது - அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்! தவிர, இயல்பிலேயே நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக அமையப் பெற்றவர்களையும் தாக்கலாம்" என்ற டாக்டர்,
"மக்களை அலர்ட் செய்வதற்காக சில எச்சரிக்கை குறிப்புகளைச் சொல்லப் போகிறேன். இதையெல்லாம் அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்'' என்று சொல்லி தொடர்ந்தார்.
''குழந்தைகளைப் பொறுத்தவரை... மூச்சுத் திணறல், தோல் நீல நிறமாதல், காய்ச்சலுடன் தோலில் திட்டுக்கள், போதிய அளவு திரவங்கள் உட்கொள்ளாமையும்; பெரியவர்களைப் பொறுத்தவரை... மூச்சுத் திணறல், மார்பிலும் வயிற்றிலும் வலி அல்லது அழுத்தம், திடீரென ஏற்படும் தலைச்சுற்றல், கடுமையான, தொடர்ச்சியான வாந்தி, காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு உடனடி கவனம் கொடுத்து, மருத்துவமனை செல்ல வேண்டும். அங்கே பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதையும், பஸ், ரயில் பயணங்கள் போன்றவற்றையும் தவிர்க்கலாம். ஓரிரு தினங்கள் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுப்பதோடு, ஓய்வு மிகவும் அவசியம். கைகளை அடிக்கடி சோப் போட்டுக் கழுவலாம். இருமும்போதும், தும்மும்போதும் முகத்தை மூடிக் கொள்வது நலம். இவையெல்லாம் இந்நோய் பாதிப்பு கண்டவர்களிடமிருந்து, நோய்க்கிருமிகள் மற்றவர்களுக்கு கடத்தப்படாமல் இருப்பதற்கான அறிவுறுத்தல்கள்" என்ற டாக்டர்,
"இந்நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்களில் லட்சத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழக்க நேரிடலாம். ஆனால்... கிரிக்கெட் ஆட்டத்தின் 'ஸ்கோர்' போல், இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு ஊடகங்கள் பீதியைக் கிளப்புவது வருத்தமான விஷயம்" என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்துவிட்டு, பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் பற்றிப் பேசினார்.
|