Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

தலையங்கம்
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....

'வாழ்க நீ பல்லாண்டு!' என சிதம்பரத்திலிருந்து ஸ்ரீவித்யா காளிதாஸ் முழக்கமிடுகிறார்.

'எங்களில் ஒருத்தியே... என்றென்றும் நீ வாழ்க!' என்று பெங்களூருவிலிருந்து ராதா நரசிம்மன் வாழ்த்துப் பா பாடுகிறார்.

'உன்னுடைய பிறந்த நாள்... ஒவ்வொரு பெண்ணுக்குமே பிறந்த நாள்' என்று நியூஜெர்ஸியிலிருந்து பிரியங்கா உணர்ச்சிப் பிரவாகமாகிறார்.

இப்படி உலகம் முழுக்க இருந்து வந்து குவிந்து கொண்டிருக்கும் வாழ்த்துக்களைப் பார்த்து... பூரிப்பின் உச்சத்திலிருக்கிறது 13-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்கள் 'அவள் விகடன்'!

இத்தகைய பாராட்டுதல்கள்... வாழ்த்துக்கள் எல்லாவற்றுக்கும் காரணம்... ஒரு குழந்தையாக, தோழியாக, தாயாக, பாட்டியாக... இப்படி எல்லாமுமாக 'அவள் விகடன்' உங்களோடு சேர்ந்து நடைபோட்டுக் கொண்டிருப்பதுதானே!

அந்த நடையை, மென்மேலும் வீறுநடையாக மாற்றும் வேலைகளில் தற்போது தீவிரமாக இருக்கிறது அவள் விகடன்.

உங்களின் தேவைகளை அறிந்து, அனைத்தையும் உங்களிடம் நாங்கள் சேர்த்துக் கொண்டிருப்பதே அழகுதான். என்றாலும், அந்த அழகுக்கு அழகு சேர்ப்பது மேலும் வசீகரத்தைக் கூட்டும்தானே! நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு, அதில் ஜொலிக்கும் குட்டீயூண்டு கல்... என்று அழகுபடுத்திக் கொண்டே போவதில்லையா..? அதேபோல... பற்பல மாற்றங்களோடு உங்களின் 'அவள் விகடன்' 13-ம் ஆண்டு சிறப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கிறது.

உங்களின் நிரந்தர அபிமானத்துக்குரிய பகுதிகளோடு, போட்டிப் போட்டு, அந்த இடத்தைப் பிடிக்கும் வேகத்தோடு புதுப் புது பகுதிகளும் களத்துக்கு வரவிருக்கின்றன.

மொத்தமும் பயனுள்ள முத்தான தொடர்களுக்கும் இடமுண்டு!

உங்களை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்கக்கூடிய கலர்ஃபுல் ஏரியாக்களும் விரிவடைய போகின்றன!

வழக்கம் போல, அத்தனையும்... உங்கள் அனைவரையும் நிச்சயமாக ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் சிந்திப்பதையே, நாங்கள் கொடுப்பதும்; நாங்கள் கொடுப்பதெல்லாம், நீங்கள் சிந்திப்பவையாகவே இருப்பதும்தானே உங்களுக்கும் அவள் விகடனுக்கும் இடையிலிருக்கும் பந்தம்!

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழிகளே!

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....

ஆசிரியர்



நமக்குள்ளே ....
-
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism