Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

Published:Updated:

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஆசிரியர் படிப்பு தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி?"

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

"உடனடி ஆசிரிய வேலை வாய்ப்பை எதிர்பார்த்து, மகளை ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்த்து விட்டோம். அவள் படிப்பை முடித்த நேரம் பார்த்து, வேலைவாய்ப்பு சீனியாரிட்டியானது, மாவட்ட அளவிலிருந்து, மாநில சீனியாரிட்டியாக மாற்றம் பெற்றுவிட்டது. இதனால் 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் மகளின் சீனியாரிட்டி மேலும் பல ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. 'இப்போது பட்டய ஆசிரியரைவிட, பட்டதாரி ஆசிரியருக்கே அதிக வேலைவாய்ப்பு. அதனால், டிகிரி முடித்துவிட்டு பி.எட். படிக்கப் போகிறேன்' என்று முனைப்பாக இருக்கிறாள் என் மகள். இந்நிலையில், ஆசிரியர் வேலை வாய்ப்பில் தற்போதையை உண்மை நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..." என்று பதில் கோரியிருக்கிறார் செங்கிப்பட்டி, பானுமதி செல்வம் அவருக்காக விளக்கம் தருகிறார், புதுக்கோட்டையிலிருக்கும் அரசினர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் பாரதி.

"ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முன்புஎல்லாம் இடைநிலை ஆசிரியராக ஒன்று முதல் எட்டு வகுப்புகளைக் கையாள அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது, அது தொடக்கக் கல்வி அளவிலேயே, அதாவது... ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரையிலாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடக்க கல்வியிலும் ஒன்று முதல் மூன்று வரையிலான வகுப்புகளுக்கு பெண் ஆசிரியர்களின் நியமனமே பரிந்துரைக்கப்படுவதால், மகளிருக்கான முன்னுரிமை வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

ஆசிரியப் பணிதான் உங்கள் மகளின் கனவுப்பணி எனில், தாராளமாக மாநில சீனியாரிட்டி வரை காத்திருக்கலாம். இந்த இடைவெளியில் ஒரு ஆசிரியருக்கான திறமைகளைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் சிலபல பயிற்சிகள் மற்றும் மேற்படிப்புகளை அவர் மேற்கொள்ளலாம்.

இடைநிலை ஆசிரியப் பணியிடத்தில் சேர்ந்தாலும், பிற்பாடு இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டத்தோடு பி.எட். முடித்து எப்படியும் ஆசிரியராக தங்களது பணி உயர்வு மற்றும் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வது வழக்கமான ஒன்று. வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வேளையில் அட்வான்ஸாக இந்த படிப்புகளை முடிக்கலாம். அதிலும் பெண்களைப் பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால்... குடும்பம், பணி இரண்டையும் பேலன்ஸ் செய்தவாறே இந்தப் படிப்புகளை முடிப்பது சிரமமாகக் கூடும். இதன் பொருட்டும் தற்போதே அடுத்தடுத்து படிப்புகளை 'டச்' விடாது முடித்து விடுவது உருப்படியான ஐடியா. ஒரு கல்லூரியில் நேரடியாக சேர்ந்து இவற்றை மேற்கொள்வது நடைமுறையில் எளிதானதும்கூட.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

நிரந்தர ஆசிரியப் பணியிடம் கிடைக்கும்வரை ஆசிரியத் திறமையை முடக்கிவைக்கத் தேவையில்லை. தனியார் பள்ளியோ, டியூஷன் சென்டரோ, சேவை நிறுவனமோ... உங்கள் மகளுக்கு விருப்பமிருப்பின் அவற்றில் சேர்ந்து நடைமுறை அனுபவங்களைத் தேடி சேர்த்துக் கொள்ளலாம். ஊதியம் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும், பின்னாளில் அவரது ஆசிரியப் பணிக்கு இந்த அனுபவங்கள் கை கொடுக்கும்.

குழந்தைகள் அதிகம் விரும்பும் கிராஃப்ட் வேலை, இசை, பாடல், பொது அறிவு, ஸ்போக்கன் இங்கிலீஷ் போன்றவற்றிலும் பயிற்சி பெறலாம். தற்போதைய கற்பித்தல் முறைகளுக்கு கணினித்துறை அடிப்படை அறிவு அத்தியாவசியம் என்பதால், அவற்றிலும் பயிற்சி பெறலாம்.

உங்கள் மகளுக்கு விருப்பமான மேற்படிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற கையோடு கல்வியியல் பட்டமும் பெறுவது நல்லது. இந்தத் தகுதிகளோடு, அரசு ஆசிரியத் தேர்வு வாரியத்தின் அழைப்பின்கீழ் அதற்கான தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மையங்களுக்கான ஆசிரியப் பயிற்றுநர் போன்ற பணியிடங்களில் நேரடியாக சேரலாம்.

இதேபோல உதவித் தொடக்க கல்வி அலுவலருக்கான தேர்விலும் பங்கேற்கலாம். எம்.எட். முடித்திருப்பின் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவனங்களின் விரிவுரையாளர் பணிக்கான தேர்விலும் கலந்துகொண்டு வெற்றி பெறலாம்."

"பட்டாசு வியாபாரத்துக்கு பயனுள்ள யோசனைகள் கிடைக்குமா?"

''நானும் என் தோழிகளில் சிலருமாக எங்களது குடியிருப்பு பகுதிகளில் பண்டிகை காலத்துக்கேற்ப மளிகைப் பொருட்கள், இனிப்பு, கார வகைகள் என மொத்தமாக கொள்முதல் செய்து விநியோகிக்கிறோம். இந்த தீபாவளிக்கு பட்டாசுகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம். இதுகுறித்து உபயோகமான யோசனைகள் கிடைக்குமா?" என்று கேட்டிருக்கும் வளசரவாக்கம், ரேகா வேலு மற்றும் தோழிகளுக்காக விளக்கம் தருகிறார்... கடலூர் பட்டாசு மொத்த விற்பனையாளர் பிரபாகரன்.

கேட்பவரெல்லாம் கேட்கலாம்!

''பட்டாசு கொள்முதல் என்றதுமே பலரும் சிவகாசிக்குத்தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், உங்கள் ஏரியாவிலேயே இருக்கும் டீலரை தொடர்பு கொண்டு கொள்முதல் செய்வதே நல்லது. போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாம் எடுக்கும் ரிஸ்க்குகளுக்கு இது தீர்வாக இருக்கும். உள்ளூர் டீலர் என்றாலும், ஒன்றுக்கு நான்கு டீலர்களிடம் பேசி, கட்டுப்படியான விலையைப் புரிந்து, பிறகு கொள்முதல் செய்யலாம்.

தீபாவளிக்கு முந்தின நாள் வரை காத்திராது, முடிந்தவரை அட்வான்ஸாகவே ஆர்டர்களைப் பிடியுங்கள். வாடிக்கையாளர் கேட்கும் பட்டாசுகளை பெயருக்கு அட்டைப் பெட்டியில் தருவதைவிட, கவர்ச்சிகரமான 'கிஃப்ட்பேக்'கில் வழங்குவது வரவேற்பைத் தரும்.

பேக்கிங் உள்ளிட்ட சிலவற்றை டீலரிடமே விட்டுவிட்டால், மிகுந்த அனுபவம் உள்ள அவர்கள், பாதுகாப்பாக இந்த விஷயத்தைக் கையாண்டு, உங்களிடம் சேர்ப்பித்துவிடுவார். அதேபோல காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனுமதி தொடர்பாகவும் டீலரின் உதவியை நாடலாம்.''

சாம்பாரில் இருந்து சாட்டிலைட் வரை உங்கள் கேள்வி எதுவாயினும்
எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். 044-42890002 என்ற 'வாய்ஸ்
ஸ்நாப்' சேவையிலும் உங்கள் கேள்வியை உங்கள் குரலிலேயே பதிவு
செய்யலாம். நிபுணர்கள் தகுந்த விளக்கம் தருவார்கள்.கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
-
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
கேட்பவரெல்லாம் கேட்கலாம்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism