பாதம், உள்ளங்கால் வறண்டு இருந்தால், நான்கு சொட்டு கிளிசரினில், நான்கு சொட்டு எலுமிச்சைச் சாறை கலந்து, தூங்கச் செல்லும்போது நகம், விரல்கள், பாதம் முழுவதும் தடவுங்கள். காய்ந்தவுடன் சுத்தமான சாக்ஸ் அணிந்து உறங்குங்கள். எட்டு மணி நேரம் பாதத்துக்கு இதமான சூழலும், ஓய்வும் கிடைப்பதுடன், வறட்சி, பித்த வெடிப்புகள் நீங்கி, மெத்தென பாதம் மென்மையாக மாறும்.
|