Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!

Published:Updated:

கேபிள் கலாட்டா
ரிமோட் ரீட்டா
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நாம எல்லாமே 'நண்பேன்டா'!"

'எந்த மீன் சிக்கும்..?'னு ரிமோட்டை பாடாய்ப்படுத்தி, சேனல் விட்டு சேனல் ஜம்ப் பண்ணிட்டு இருக்க, 'பளிச்'னு கண்ணுல பட்டார் சுரேஷ்! யெஸ்... 'பன்னீர் புஷ்பங்கள்' சுரேஷ், இப்போ சின்னத்திரைக்கு புது வரவு!

கேபிள் கலாட்டா!

"வார்ம் வெல்கம் பாஸ்..."னு போனைப் போட்டேன். "ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வா ரீட்டா..."னு சார் கூப்பிட, ஜூட்!

'ஆனந்த ராகம் கேட்கும் காலம்'னு அரும்பு மீசையா பலரும் பார்த்த சுரேஷை, இப்போ... 'அங்கிள்'ங்கற அளவுல பார்க்கறது, ஸ்வீட் சர்ப்ரைஸ்! "நீங்க எல்லாம் என்னை இன்னும் ஞாபகம் வச்சிருக்கற அளவுக்கு தமிழ்ல நிறைய படங்கள் பண்ணினது, சந்தோஷம் ரீட்டா. ஒரு கட்டத்துல எல்லா ஹீரோக்களையும் போல எனக்கும் கேரியர்ல பிரேக். ரெஸ்ட் எடுத்தேன்.

விஜய் டி.வி-யில 'காதல் மீட்டர்' நிகழ்ச்சி பண்ணச் சொல்லி கேட்டாங்க. சின்னத்திரை ஸ்டார் ஜோடிகளோட காதலை மீட்டர் பண்ற ஜாலி நிகழ்ச்சி. சீனியர்ஸ் நிறைய பேர் ஏற்கெனவே பெரியத்திரை டு சின்னத்திரை டிரான்ஸ்ஃபர் வாங்கி இருக்கறதால, அவங்க வழியில் இப்போ நானும் வந்திருக்கேன். கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்பான எனக்கே, 'செட்'டுக்கு வந்தவொடன ஜாலி மூட் தொத்திக்குது. அவ்வளவு கலகல டீம். அதைவிட லக லக ஜோடிகள். புதுமையா, ஜாலியா, எனர்ஜெட்டிக்கா போகுது புரோகிராம். இனி 'ஃபீட் பேக்' நீதான் சொல்லணும்!"னு சிரிச்ச சுரேஷ்கிட்ட,

''உங்க பர்சனல் பிட்ஸ் ப்ளீஸ்...''னு கேட்டா,

"அது பர்சனலாவே இருக்கட்டுமே!"னு சொல்லிட்டாருப்பா!

'புரொகிராம் ஸ்டார்ட்ஸ்'னு டைரக்டர் கூப்பிட, ஜோடிகளைக் கலாய்க்க கோட் போட்டுட்டு கிளம்பினாரு சுரேஷ் சார்!

ஆகா... வடை தப்பிச்சு போச்சே!

ன் டி.வி 'தென்றல்' சீரியல்ல ஸ்ருதிக்கு தங்கையா வர்ற சுஜிதா பொண்ணு, ஷூட்டிங் ஸ்பாட்டை கலகல ஆக்கற ஜாலி பட்டாசுனு யூனிட்ல பெயர் வாங்கியிருக்காங்க. 'அப்டியா?!'னு அந்த யூனிஃபார்ம் பாப்பாவைத் தேடிப்போனா, "ஹலோ... சீரியல்லதான் நான் ஸ்கூல் பொண்ணு. நிஜத்துல நான் பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் கிராஜுவேட். கூடவே, பியூட்டிஷியன் கோர்சும் முடிச்சிருக்கேன். கிராஃப்ட், என்னோட இன்னொரு சிக்ஸர் ஏரியா. எங்க வீட்டு சுவர் முழுக்க என் கைவண்ணம்தான். என் சுடிதார், புடவைக்கு எல்லாம்கூட நானேதான் டிசைன் பண்ணிக்குவேன்"னு படபடனு பொரிஞ்ச சுஜிதாவுக்கு இரண்டு குறிக்கோள்கள்!

"ஏர்ஹோஸ்டஸ் ஆகணும். அதுக்கான படிப்பைதான் இப்போ சின்ஸியரா படிச்சுட்டு இருக்கேன். அப்பறம்... அப்பா, அம்மா பார்க்கற பையனை சமர்த்தா கல்யாணம் பண்ணிட்டு, லைஃப்ல செட்டில் ஆயிடணும்!"

ஆஹா... இதுவல்லவோ லட்சியம்!

கேபிள் கலாட்டா!

"ஜெயா டி.வி. ஆபீஸ் முன்னால ஜோடி ஜோடியா தம்பதிங்க கூட்டம் களைகட்டுது... என்னனு கொஞ்சம் விசாரிச்சு சொல்லு ரீட்டா"னு ஒரு வாசகி போன் செய்யவும், ''கிளம்பிட்டேன்யா... கிளம்பிட்டேன்''னு உற்சாகமா குதிச்சபடியே ஸ்கூட்டியை நேரா ஜெயா டி.வி. ஆபீஸ் முன்னால நிறுத்தினேன்.

'உன் வாசம் என் நேசம்' புரோகிராம்ல கலந்துக்கதான் இத்தனை ஜோடிகள் கூட்டம். பரீட்சைக்குப் போற பிள்ளைங்க கணக்கா அத்தனை ஜோடிங்க முகத்துலயும் டென்ஷன் தாண்டவமாடிச்சு.

கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

"பத்து நிமிஷம்கூட எங்களுக்கு பேச நேரமில்லாம, எதையும் பகிர்ந்துக்க முடியாம, ஆபீசுக்கு ஓடிட்டிருக்கோம். ஆனா... இப்ப, பத்து மணி நேரம் எங்களைப் பத்தி நாங்க யோசிச்சிட்டிருக்கோம்னா அது இந்த புரொகிராம்தான் காரணம்னு போரூர்லேர்ந்து வந்திருந்த சையத் ஃபைஷன் - ஷபியா ஜோடி, உற்சாகமா சொல்ல...

அதை ஆமோதிக்கிற மாதிரி, மண்டையை ஆட்டிட்டே... ''இந்த நிகழ்ச்சியைப் பத்தி கேள்விப்பட்டதும், என்னைவிட இவருதான் ரொம்ப குஷியாயிட்டாரு. இவருக்கு எப்பவும் பிஸினஸ், ஃப்ரெண்ட்சும்தான் முக்கியம். வெளியூர் பறந்துட்டே இருக்கறவரை, பிடிச்சி இழுத்துட்டு வந்துட்டேன் ரீட்டா. பரிசோடதான் போவேன்" என்று உறுதியா சொன்ன ஜோடி ஷாலி - மதுசூதனன்.

கேபிள் கலாட்டா!

இப்படி மொத்தம் எட்டு ஜோடிங்க இந்த நிகழ்ச்சியில பங்கேற்கறாங்க. எல்லார் முகத்துலயும் பரிசோடதான் போவோம்ங்கிற நம்பிக்கை தென்பட்டுச்சு.

இதுக்கு நடுவுல, ஆபீசுல இருந்து சீனியர் ஒரு போன் போட, அவங்க சொன்ன விஷயத்தை அப்படியே டைரக்டர் ஷாணிடம் பாஸ் பண்ணினேன். அது...

" 'நிகழ்ச்சி நல்லாதான் இருக்கு. ஆனா, நிகழ்ச்சி காம்பியரே கண்ண மூடிக்கற அளவுக்கு... மனைவியை அலாக்கா தூக்கறது, ஜோடிங்க முத்தம் கொடுத்துக்கறதெல்லாம் சரியா தோணல'னு வாசகிகள்கிட்ட இருந்து கடிதங்களா வந்திருக்கு. அதைப் பத்தியும் டைரக்டர்கிட்ட கேளு."

கேபிள் கலாட்டா!

இதைக் காதில வாங்கினதுமே...

"காதல், ஆசை, குடும்பம், சமையல்லேர்ந்து அத்தனை விஷயங்களையும் ஸ்டேஜ்ல செஞ்சு காட்டணும். ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்கு. நிஜமாகவே ரொம்ப அழகான புரோகிராம். ஆனா, ஒரு சில நேயர்களுக்கு ஏன் இப்படி தோணுச்சுனு தெரியல. சினிமாவுல வர்றதைவிட மோசமா எதையும் காட்டிடல. அதுவுமில்லாம, அத்தனை பேருமே ஒரிஜினல் தம்பதிங்கதானே... கட்டின கணவன் காலம் முழுசும் மனைவியை தாங்கிப் பிடிக்கணுங்கிற அந்நியோன்யத்தை வெளிப்படுத்தற ஒரு விஷயமாத்தான் இதைப் பார்க்கணும். எதையுமே நாம பார்க்கிற பார்வையில்தான் இருக்கு. என் மனைவி ஸ்ரீப்ரியா மஹாலட்சுமிதான் இந்த புரொகிராம் புரொட்யூசர். அந்த நேயர்கள் வருத்தப்படாம... எங்களோட சேர்ந்துக்கணும். ஏன்னா... நாம எல்லாருமே 'நண்பேன்டா...' '' என்று சிநேகமாக சிரித்தார் டைரக்டர்.

ம்... எப்பூடி!

வாசகிகள் விமர்சனம்

''வழக்கமாக பேய்க்கதை, பில்லிசூனியக் கதை என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கும் சன் நியூஸின் 'நிஜம்' நிகழ்ச்சி... சமீபத்தில் ஒரு நாள் பிரமிக்க வைப்பதாகவும் இருந்தது. செட்டிநாடு நகரத்தாரின் பிரபலமான, பிரமாண்டமான அரண்மனை வீடுகளைக் காட்டினார்கள். பார்த்துவிட்டு, 'ஆ'வென்று வாயைப் பிளந்ததுதான். மூடவே இல்லை. பர்மாவிலிருந்து தேக்கு, இத்தாலியிலிருந்து டைல்ஸ், பெல்ஜியத்திலிருந்து கண்ணாடிகள் என அந்தக் காலத்திலேயே வரவழைத்து, அசத்தலான வீடுகளைக் கட்டியிருக்கின்றனர் நகரத்தார். மனதைக் கொள்ளை கொள்ளும் அழகோடு இருக்கும் அந்த அரண்மனைகளில் பலவும், தற்போது பராமரிக்க ஆளில்லாது பொலிவிழந்து இருப்பதுதான் சோகம்'' என்று வருந்துகிறார் சென்னையில் இருந்து எஸ்.ரமாமணி.

''கலைஞர் டி.வி-யில் இரவு 10.00 மணிக்கு, 'குழந்தைகளைக் கண்டிப்பது வளர்ச்சியா... வீழ்ச்சியா?' என்ற தலைப்பில் 'கருத்து யுத்தம்' நடந்தது. 'வளர்ச்சி' எனும் தலைப்பில் பேசிய பள்ளி மாணவி ஒருத்தி, 'ஆசிரியர்களும், போலீஸாரும் மட்டுமே பிரம்பு வைத்துக் கொள்கிறார்கள். ஆசிரியரின் பிரம்பு போர்டை சுட்டிக்காட்ட மட்டுமல்ல... மாணவனை நேர்வழிப்படுத்தும் வகையில் சமயங்களில் அடிக்கவும்தான். சிறுவயதில் ஆசிரியரின் பிரம்புக்கு வேலை கொடுத்தால், பெரியவனாகும்போது போலீஸின் பிரம்புக்கு வேலையே இருக்காது' என பலத்த கரகோஷத்துக்கு நடுவே பேசியது அருமை'' என்று பாராட்டுகிறார் ஈரோட்டில் இருந்து ஏ.ஜே.தில்ஷாத் பேகம்.

''விஜய் டி.வி-யில் வரும் 'நம்ம வீட்டுக் கல்யாணம்' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணக் காட்சிகள் ஒளிபரப்பாயின. மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், தன் தங்கையை நலங்கின்போது, 'ம்.. இட்டுக்கோ' என்று செல்லமாக அதட்டியதும்; மாலை மாற்றிக் கொண்டபோது மணமகனின் உயரம் எட்டாமல், பெண் மாலையைக் காற்றில் பறக்கவிட, கடைவிழியோரம் எட்டிப் பார்த்த ஆனந்தக் கண்ணீரை விரல் நுனியால் ரஜினி சுண்டியெறிந்ததும் என்று அங்கே கண்ட சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும்... 'அமரர் சாவி' எழுதிய 'வாஷிங்டனில் திருமணம்' நாவலைத் தொலைக்காட்சியில் பார்த்தது போன்ற ஒரு சுகமான அனுபவமாக இருந்தது'' என்று நெகிழ்கிறார் மதுரையில் இருந்து எஸ்.நிர்மலா.

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.75


கேபிள் கலாட்டா!
-படங்கள் வீ.நாகமணி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism