Published:Updated:

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

Published:Updated:

நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
-
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நவராத்திரி ஸ்பெஷல்!

விழாக் காலம் வந்துவிட்டாலே... வீடு கலகலப்பாகிவிடும். அதிலும் நவராத்திரி என்றால்... கேட்கவே வேண்டாம். பொம்மைகளை அலங்கரித்து, கொலுவைப் பார்க்க அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்களுக்கு விசேஷ பரிசளித்து... என கூடுதல் கலகலப்புதான்!

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

இப்படி வருபவர்களுக்கு, நம் கைகளாலேயே உருவாக்கிய 'கிஃப்ட்'டை கொடுத்தால்... நிச்சயமாக பெருமைதான்! அதிலும், பலரும் பாராட்டும் வண்ணம் அந்த கிஃப்ட் சூப்பராக அமைந்துவிட்டால்?

இதோ... உங்களுக்கு பாராட்டுகள் வந்து குவியும் வகையில் உதவிக்கரம் நீட்ட வருகிறார்... சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சியாமளாதேவி.

இவர், பெண்கள் பலருக்கும் கைவினைப் பொருட்கள் செய்யும் கலையைக் கற்று தந்து, பள்ளி, கல்லூரிகளில் கிராஃப்ட் ஆசிரியை பணியில் அமர வைத்து, வருமானத்துக்கு வழிகாட்டி வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இப்படி இவர் உருவாக்கியிருக்கும் கிராஃப்ட் ஆசிரியைகள்... தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகம். இங்கே, நமக்காக சியாமளாதேவி உருவாக்கித் தந்திருக்கும் நவராத்திரி கிஃப்ட்கள் இடம் பிடிக்கின்றன...

கிஃப்ட் பாக்ஸ்

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

தேவையானவை பிளாஸ்டிக் பாக்ஸ், கிளாஸ் கலர்ஸ், கிளாஸ் அவுட் லைனர், ஃபேப்ரிக் க்ளூ, குந்தன் கற்கள்.

செய்முறை படத்தில் உள்ளதுபோல் பாக்ஸின் மீது அவுட் லைனரால் மலரின் இதழ்களை டிசைன் செய்து கொள்ளவும் (படம் 1). வரைந்த ஒவ்வொரு இதழிலும் பச்சை, மெரூன் கலரை அடிக்கவும் (படம் 2). இதழின் மீது ஒரு பொட்டு போல் ஃபேப்ரிக் க்ளூவைத் தடவி, கலர் கலரான குந்தன் கற்களைப் பதிக்கவும் (படம் 3).

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

வீட்டு ஜன்னல் கண்ணாடிகளில் இதுபோல் அலங்கரிப்பார்கள்-வட மாநிலங்களில். வெவ்வேறு வண்ணங்களில் உள்ள பாக்ஸ்களில் செய்ய விரும்புபவர்கள், ஃபேப்ரிக் கலர் பயன்படுத்த வேண்டும். கொலு பார்க்க வருபவர்களுக்கு இதை தாம்பூலத்துடன் வைத்து தந்தால், உள்ளம் பூரித்து வாழ்த்துவார்கள்!

லிபான் வொர்க்

தேவையானவை சிறிய மண்பானை, எம்சீல், வெள்ளை நிற குந்தன் கற்கள், சிறிய கண்ணாடிகள், ஃபேப்ரிக் க்ளூ.

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

செய்முறை ஒரே பேக்கில் இரண்டு நிறங்களில் தரப்பட்டிருக்கும் எம்சீலை, ஒன்றாகச் சேர்த்து (படம் 1) நன்றாகப் பிசையவும் (படம் 2). கையால் மெல்லிய தாக உருட்டி தேய்க்கவும் (படம் 3). பானையில் டிசைனுக்கேற்ப ஃபேப்ரிக் க்ளூவைத் தடவவும் (படம் 4). நீளமாக உருட்டிய எம்சீலை அதன் மீது நீளவாக்கில் ஒட்டவும் (படம் 5). பக்கவாட்டில் இலைகள் போல் சிறிது எம்சீலை வைக்கவும் (படம் 6). அதன்மேல் வெள்ளை நிற குந்தன் கற்களை ஒவ்வொரு இலையின் மீதும் ஒட்டி, பானையின் இன்னொரு பக்கமும் இதேபோல் செய்து, விரும்பிய டிசைனை உருவாக்கவும் (படம் 7). நடுவில் சிறுசிறு கண்ணாடிகளைப் பதிக்கவும். அரை மணி நேரத்தில் காய்ந்துவிடும்.

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

குஜராத்தில் பெரிய பெரிய ஜாடிகளில் கண்ணாடிகளை பதித்து வைப்பார்கள். சுவரில் இதுபோல் கைவேலைகளை செய்து, பெரிய கண்ணாடிகளை பதித்துவிடுவார் கள். மாலை நேரத்தில் விளக்கேற்றி, லைட் போட்டதும், வீடெங்கும் வெளிச்சம் பரவி லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும்!

டெகரேடிவ் வால் ஹேங்கிங்

தேவையானவை கிராஃப்ட் கலர், 3-டி கோல்டு அவுட் லைனர், ஃபேப்ரிக் க்ளூ, சிறிய மணிகள், 6-ம் நம்பர் பிரஷ், ஆறு இன்ச் நீளம் மற்றும் ஆறு இன்ச் அகலத்தில் மவுன்ட்போர்டு, கண்ணாடிகள், ஸ்டோன்ஸ், சற்றே பெரிதான கோல்டன் மணிகள், ஏதேனும் ஒரு கலரில் உல்லன் நூல், நைலான் ஒயர்.

செய்முறை மவுன்ட்போர்டில் பென்சிலால் டிசைன் செய்து கொள்ளவும் (படம் 1). கட்டங்களுக்குள் சிவப்பு, பச்சை, மஞ்சள் கலரில் பிரஷ்ஷால் பெயின்ட் பண்ணவும் (படம் 2). கோல்டு அவுட் லைனரால் நடுவிலும், பச்சை கட்டங்களிலும் சூரியனைப் போல் வரைந்து, மற்ற கட்டங்களில் கோடுகள் போடவும்... நடுவில் ஃபேப்ரிக் க்ளூ தடவி கண்ணாடி, ஸ்டோன்களை பதிக்கவும் (படம் 3).

கலர் உல்லன் நூலினுள் கோல்டன் மணிகளைக் கோத்து, போர்டின் மூன்று முனைகளிலும் ஃபேப்ரிக் க்ளூவால் ஒட்டவும். சிறிய மணிகளை நைலான் ஒயரில் கோத்து, நான்காவது முனையில் ஒட்டிவிடவும் (படம் 4). அதாவது, இது ஆணியில் மாட்டுவதற்கு வசதியாக இருக்கும். இதேபோல் வரிசையாக செய்து, கொலு படிக்கட்டுகளின் ஓரங்களை அலங்கரிக்கலாம்.

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

வீல் ஆஃப் ஃபார்ச்சூன்

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!

தேவையானவை மரத்தாலான சிறிய சக்கரம் (இது கடைகளில் கிடைக்கும்), பிளாக் பெயின்ட், 3-டி அவுட் லைனர் (கோல்டன் கிளிட்டர்), பிரஷ், ஃபேப்ரிக் க்ளூ, குந்தன் கற்கள், கண்ணாடிகள்.

செய்முறை சக்கரம் முழுவதும் கறுப்பு நிறம் பூசி, 15 நிமிடம் காய வைக்கவும் (படம் 1). சக்கர வடிவத்தின் ஓரங்களில் கோல்டன் கிளிட்டரால் டிசைன் செய்யவும் (படம் 2). நடுநடுவே ஃபேப்ரிக் க்ளூ தடவி, அதன் மீது கண்ணாடிகளைப் பதித்து, இடையிடையே குந்தன் கற்களைப் பதிக்கவும் (படம் 3).

மரத்தாலான வீல் கிடைக்கவில்லையென்றால், மவுன்ட் போர்டில் இந்த டிசைனை கட் செய்து, பொம்மைகளின் பின்புறமும் படிக்கட்டுகளிலும் அழகழகாகப் பதிக்கலாம்.

நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
-தொகுப்பு ரேவதி
படங்கள் எம்.உசேன், வீ.நாகமணி
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
நவராத்திரி ஸ்பெஷல்: நீங்களே செய்யலாம்... நவராத்திரி கிஃப்ட்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism