Published:Updated:

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

Published:Updated:

நவராத்திரி ஸ்பெஷல்!
நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!
நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொண்டாட்டமான ஒரு பண்டிகை, நவராத்திரி! அந்தப் பண்டிகையின் ப்ளஸ், கொலு! உங்கள் வீட்டு கொலு இன்னும் இன்னும் அழகாக ஜொலிக்க, இங்கே அசத்தல் ஐடியாக்களை வழங்குகிறார்... சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி ராமாமிர்தம்.

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

வீட்டின் முகப்பிலிருந்தே கொலுவை ஆரம்பித்து விடலாம். அது, கொலு பார்க்க வருபவர்களின் ஆர்வத்தை தூண்டும். ஒரு பெரிய அம்மன் பொம்மையை மாலை, மணிகளால் அலங்கரியுங்கள். வீட்டின் நுழைவாயிலில் ஒரு ஸ்டூலின் மேல் அழகிய துணி விரித்து, அம்மனை அதில் அமர வையுங்கள். சுற்றிலும் வண்ண விளக்குகள், தோரணங்கள் என கைவசம் உள்ள பொருட்களைக் கொண்டு பளீரிட வையுங்கள். மேல்புறம் திறந்த கண்ணாடி கூண்டுக்குள் ஒரு சிறிய விளக்கை ஏற்றிவிட்டால், சூப்பர்தான்.

தரையில் அமர்ந்த நிலையில் இருக்கும் பொம்மைகளை. கட்டம் போட்ட கைக்குட்டைகளின் மேல் உட்கார வையுங்கள். ஜமுக்காளம் விரித்து உட்கார வைத்ததுபோல இருக்கும். கைக்குட்டை பறந்து விடாமல் இருக்க, நான்கு ஓரங்களிலும் ஒரு சொட்டு ஃபெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.

மூன்று அல்லது ஐந்து ஐஸ்க்ரீம் குச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஓரத்தில் பசை தடவி, ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டி, காய்வதற்கு முன் விசிறி போல விரித்து வைத்தால் உலர்ந்து விடும். பின்னர் அவற்றின் மேல் தெர்மாகோல் உருண்டைகள், ஸ்டிக்கர் பொட்டுகள் போன்றவற்றை ஒட்டிவிடுங்கள். ஒரு தடிமனான நூலில் வரிசையாக இதை ஒட்டிவிட்டால் தோரணம் போலவும் இருக்கும். இதையே வாசல் கதவுகளின் மேல் பக்கமும், கொலு வைத்த அறையின் சுவர்களிலும் தேவைக்கேற்ப தொங்க விடலாம்.

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

நவராத்திரி தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கேழ்வரகை ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு, துணியில் சுற்றி வைத்தால் முளைவிடும். சதுரமான அட்டைப் பெட்டிகளில் பிளாஸ்டிக் பேப்பரை விரித்து, அதன் மேல் மண்ணைப் பரப்பி, இந்த கேழ்வரகைப் பரவலாக விதைத்து விடுங்கள். கொலு வைக்கும் நாளில் பொம்மைகளைப் படிகளில் வைத்ததும், தரையை அலங்கரிக்கும்போது தயாராக இருக்கும் கேழ்வரகு விதைத்த சதுரங்களை வயல் வெளிகளாக வரிசையாக வைத்துவிடுங்கள்.

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

சிறியதாக இருக்கும் வண்ண வண்ண தெர்மாகோல் உருண்டைகள் ஒரு பாக்கெட், ஐஸ்க்ரீம் குச்சிகள், ஸ்ட்ரா, டிஸ்போஸபிள் கப்புகள், சின்ன பிளாஸ்டிக் பூங்கொத்துகள், ஃபெவிக்கால், ஸ்டிக்கர் பொட்டுகள், டூத் பிக் குச்சிகள் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

டூத் பிக் குச்சிகளின் ஒரு நுனியை ஃபெவிக்காலில் தோய்த்து, அதில் கலர் தெர்மாகோல் உருண்டைகளைக் குத்திவிடுங்கள். பார்க், மிருகக் காட்சி சாலை, திருமண மண்டபம் போன்றவற்றைச் சுற்றிலும் நீளமாக மண்ணைக் கொட்டி, இந்தக் குச்சிகளை வரிசையாகக் குத்தி வைத்தால்... வண்ண விளக்குகள் எரிவது போல அழகாக இருக்கும்.

ஐஸ்க்ரீம் குச்சி களின் மேல் சிறிது இடைவெளி விட்டு தெர்மாகோல் உருண்டைகளை ஒட்டிக் காய விடுங்கள். இந்தக் குச்சிகள் ஒவ்வொன்றின் அடிப் பாகத்திலும் ஒரு புள்ளி ஃபெவிக்கால் வைத்து, தரையில் வரிசையாக ஒட்டிவிடுங்கள். தரையில் பொம்மைகளை வைத்து முடிந்ததும், சுற்றிலும் இந்த குச்சிகளை வைத்துவிட்டால் கொலுவுக்கு பார்டர் கட்டியது போல் ஈர்க்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!

பள்ளிக்கூடம், கோயில், பார்க் போன்றவற்றுக்கு காம்பவுண்ட் சுவர் அமைத்தால், கொலு இன்னும் அழகாகும். ஒரு விரல் உயரத்தில் தெர்மாகோலை காம்பவுண்ட் சுவராக நிற்க வைத்து, அதன் இருபுறமும் சப்போர்ட்டுக்கு பொம்மைகள் அல்லது பூந்தொட்டிகளை வைத்துவிடுங்கள்.

சாலைகள் அமைக்கும்போது ஆங்காங்கே 'யு டர்ன் கிடையாது,' 'பள்ளிக்கூடம்... மெதுவாகச் செல்லவும்', 'நோ ஹாரன்' என்று சிறிய சார்ட் பேப்பர்களில் எழுதி குச்சியில் ஒட்டிவிடுங்கள். டிஸ்போஸபிள் டம்ளர்களில் மண் நிரப்பி அதில் இந்த குச்சிகளை சொருகிவிடுங்கள். சாலையின் நடுவே 'லெவல் கிராஸிங்'குக்கு கறுப்பு, வெள்ளைக் கோடுகள் வரையுங்கள். குப்பைத் தொட்டிகளை சாலையின் ஓரங்களில் வைத்துவிடுங்கள். கொலு, உங்கள் சமூக அக்கறையையும் கட்டும்!

நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!
-தொகுப்பு ம.பிரியதர்ஷினி
படங்கள் பு.நவீன் குமார்
நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!
நவராத்திரி ஸ்பெஷல்: கொடுத்துட்டோம்ல கொலு டிப்ஸ்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism