Published:Updated:

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

Published:Updated:

இதயம்...
சூப்பர் 100 டிப்ஸ்
இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..
இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு...

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

செப்டம்பர்-20... உலக இதய தினம்! இந்த நாளை இந்தியர்கள் கண்டிப்பாக நினைவுகூர்ந்தாக வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. ஆம்... உலக அளவில் இங்கேதான் இதய நோய்கள் அதிகமாக தாண்டவமாடுகின்றன.

'உலகே வியக்கும் மனிதவளம். மக்கள்தொகையில் 54 சதவிகிதம் இளம் பருவத்தினர்!' என்ற பெருமையில் நாம் இருக்க, 'வலிய கூட்டம் இருக்கலாம். ஆனால், வலிமையாக, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது முக்கியம்...' என்று கவலைப்படுகிறது இந்திய மருத்துவ உலகம்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய நோய்கள் சராசரியாக 40 வயதுக்கு மேல்தான் தாக்கும். இன்று அந்த வரிசையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நம் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். அந்த இதயத்தின் சீரான இயக்கம், அது பாதிக்கப்படும்போது ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றி அழகாகவும், ஆழமாகவும் சொல்கிறது இந்த குட்டிப் புத்தகம். விஷயங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்!

"எப்படி இயங்குகிறது என் ஆசை இதயம்..?!"

இதயம் பற்றிய அடிப்படை புரிதல் இருந்தால்தான், அதன் பிரச்னைகள், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்வது எளிதாக இருக்கும். உங்கள் இதயத்தின் இயக்கத்தை தெரிந்துகொள்ள, இதைப் படியுங்கள்...

1. இதயம் சுருங்கி சுருங்கி புதிய சுத்த ரத்தத்தை, ரத்த நாளங்களில் செலுத்தும்போது, ரத்த அழுத்தம், உச்சத்தை அடைகிறது. இது 'சிஸ்டாலிக் பிரஷர்' (Systolic Pressure) அல்லது இதயம் சுருங்கும் ரத்த அழுத்தம் எனப்படும்.

2. தொடர்ந்து, இதயம் விரியும்போது, புதிய சுத்தமான ரத்தத்தால், இதயம் நிரப்பப்படுகிறது. இச்சமயத்தில் ரத்தம் அழுத்தம் சற்றே குறைவான அளவே இருக்கும். இது 'டயஸ்டாலிக் பிரஷர்' (Diastolic Pressure) அல்லது இதயம் விரியும் ரத்தம் அழுத்தம் எனப்படும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

3. தேசிய கூட்டுக் குழுவினர் - உயர் ரத்தம் அழுத்தம் தடுத்தல், கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் சிகிச்சை அளித்தல் பற்றிய ஏழாவது அறிக்கையின்படி, ரத்த அழுத்த வகைகளை இப்படித்தான் முறைப்படுத்துகிறார்கள்...

4. உங்களுக்குப் பிரஷர் பார்க்கும்போது, 'BP=110/70' என்று ஒரு அளவைக் குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில்... 110 என்பது சிஸ்டாலிக் பிரஷர், 70 என்பது டயஸ்டாலிக் பிரஷர் ஆகும்.

இத்தனை இருக்கின்றன இதயநோய்கள்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயத்தின் சீரான இயக்கம் தடைபடும்போதோ, தடுக்கப்படும்போதோ இதயம் நோய்க்கு ஆட்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை யாரையும் தாக்கவல்ல இதய நோய்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய சில நோய்கள் இவை...

5. பிறவியிலேயே உள்ள இதயநோய்... பிறவியிலேயே குழந்தையைப் பாதிக்கும் இந்த முதல் வகையில் நீலம் பூக்காத இதய நோய் (Acyanotic), மற்றும் நீலம் பூக்கும் (Cyanotic) இதய நோய் என்று இரு பிரிவுகள் உண்டு.

6. பிறவியிலேயே வரும் நீலம் பூக்காத இதய நோய்களில்... இதய மேலறைகளைப் பிரிக்கும் இடைச்சுவரில் துவாரம் மற்றும் குறைபாடு, இதயக் கீழறைகளைப் பிரிக்கும் இடைச்சுவரில் உள்ள குறைபாடு என்று ஆரம்பித்து பல்வேறு நோய்கள் உள்ளன.

7. நீலம் பூக்கும் இதய நோய்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. இதில், நான்கு வகையான குறைபாடுகள் சேர்ந்தாற்போல் அமையும் 'டெட்ராலஜி ஆஃப் ஃபேலட்' (Tetralogy of Fallot) என்ற நோயே மிக அதிக அளவில் காணப்படும் நோயாகும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

8. பொதுவாக, நீலம் பூக்கும் இதயக் கோளாறுகள் என்ற வரிசையில் வரும் நோய்கள், ஆபத்தை விளைவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

9. கீழ்வாதக் காய்ச்சல் நோய் எனப்படும் 'ருமாட்டிக் காய்ச்சல்' காரணமாக ஏற்படும் இதயநோய் (Rheumatic Heart Disease). மிகவும் அதிகமாக இதய வால்வுகளைத் தாக்கி, இளவயதினரிடையே இதயநோயை உண்டாக்குகின்றது.

10. இதய ரத்தநாள அடைப்பால் மார்புவலி மற்றும் மாரடைப்பு நோய் (Coronary Artery Disease, Myocardial Infarction) ஏற்படும்.

11. இதயம் இயங்கத் தேவைப்படும் பிராணவாயு, கொரனரி ரத்தக்குழாயின் மூலம் கிடைக்கும் ரத்தத்தைக் கொண்டு செயல்படுகிறது. இந்த கொரனரி ரத்த நாளங்களில் கொழுப்புச் சத்து படிந்து... அடைப்பு ஏற்பட்டால், இதய தசைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, இதய ரத்தநாள நோய் உண்டாகும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

12. 'ஆஞ்ஜைனா' என்று அழைக்கப்படும் நெஞ்சுவலி, இந்நோயின் அறிகுறி. நெஞ்சு வலியின் தன்மை, அழுத்தம் உண்டாவது போன்று நெருக்குவது அல்லது கசக்கிப் பிழிவது போன்றது என பலவிதமாக விவரிக்கப்படும்.

நெஞ்சுவலி நடுமார்பில் தோன்றி, அங்கிருந்து பரவி கழுத்து, தாடை, இரு கைகள் (பெரும்பாலும் இடது கை) மற்றும் முதுகுப்புறம் வரை பரவக்கூடும். இந்த வலியுடன் மூச்சுத் திணறல், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் எல்லாம்.. ஆஞ்ஜைனா வந்துவிட்டது என்பதை நமக்கு உணர்த்தும்!

13. அதிக உடல் உழைப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாக நெஞ்சுவலி உண்டாகலாம். அப்போது ஓய்வு எடுத்துக் கொண்டாலோ, அதற்குரிய மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்து சப்பிக் கொண்டாலோ... வலி நீங்கிவிடும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

14. 'ஆஞ்ஜைனா' நெஞ்சுவலி நிலை, சுமார் 15-20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்குமேயானால், இதய தசையில் ஒரு பகுதி போதிய பிராணவாயுவை பெற முடியாமல் சிதைந்து, மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

15. மாரடைப்பு நோய் ஏற்பட்டால், மருத்துவக் கவனிப்பு உடனே அவசியம்.

16. மாரடைப்பு நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வதன் மூலம், இந்நோயாளிகள் நன்கு சிகிச்சை பெற்று, உயிரிழப்பு ஆபத்தைக் குறைக்கலாம்.

17. புகை பிடித்தல் மற்றும் புகையிலை உபயோகித்தல், ரத்தக் கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், 'டயாபடிஸ்' எனப்படும் சர்க்கரை நோய், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்றி அதிகம் உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை... இவையெல்லாம், கொரனரி ரத்த நாள மற்றும் மாரடைப்பு நோயைத் தோற்றுவிக்கக்கூடிய சில அபாயக் காரணிகள்.

18. உயர் ரத்த அழுத்தத்தின் விளைவாக இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் பாதிக்கப்படலாம்.

19. இதய பாதிப்பு ஏற்படும்போது மாரடைப்பு நோய், இதயச் செயலிழப்பு, பக்கவாத நோய், மூளையின் ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு, ரத்தச் சிதறல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பரிசோதனைகள்... விழிப்பு உணர்வுக்கு!

'ஆண்டுக்கு ஒருமுறையாவது உடல் உறுப்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்' என்பதுதான் மருத்துவர்கள் தரும் ஆரோக்கிய டிப்ஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அனுபவத்தின் வாக்குமூலமாக சொல்வது இதைத்தான். 40 வயதுக்கு மேல் சில அடிப்படை பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம் என்கின்றன தினசரி மருத்துவச் செய்திகள். என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும்..?

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

20. உலகத்திலேயே இந்தியாவில்தான் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. மேலும், 2020-ல் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாகலாம் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள். 'நானெல்லாம் ஆரோக்கியமாதான் இருக்கேன்...' என்ற உங்களின் நம்பிக்கையை சரிபார்க்க, பரிசோதனைக்குத் தயாராகுங்கள்.

21. முதலில் செய்ய வேண்டிய சோதனைகள்... ரத்தப் பரிசோதனை (சர்க்கரை அளவு) மற்றும் சிறுநீர் பரிசோதனை. அடுத்து உயர் ரத்த அழுத்த பரிசோதனை.

22. வெறும் வயிற்றோடு இருக்கும்போது சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் என்ற அளவிலும், சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு 180 மில்லி கிராமாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகளுக்கு மேல் அதிகரித்தால், உடலில் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வருவதற்கான எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

23. பரிசோதனைகளின் முடிவு, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தினால்... தாமதிக்காமல் இ.சி.ஜி (E.C.G) பரிசோதனை செய்து பார்ப்பது ஆபத்தில் இருந்து நம்மைத் தள்ளி வைக்கும்.

24. இதயம் சம்பந்தமான நோய்கள் இருப்பது உறுதியாகிவிட்டால், அடுத்தகட்டமாக... ட்ரெட்மில் (Treadmill) எனும் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

25. நோய் உறுதிபட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை நிச்சயமாக 'ஆஞ்சியோகிராம்' (Angiogram) பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே உடலில் உள்ள இதயக் கோளாறுகளை அறிய முடியும்.

26. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு வலி இல்லாமலேகூட மாரடைப்பு வருகிறது. இதில் அதிக அளவு பாதிக்கப்படுகிறவர்கள்... வயதானவர்கள்தான். அதனால், தகுந்த இடைவெளியில் இதய பரிசோ தனை அவசியம்.

27. ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி போன்ற ஆரம்பகட்ட பரிசோதனைகளைக் கிட்டத்தட்ட 1,000 ரூபாய்க்குள் முடித்துவிடலாம்.

இதய நோயைத் தவிர்க்க... தடுக்க..!

இதயநோய்களை தவிர்க்கவும், தடுக்கவும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை முயற்சிகள் கை கொடுக்கும்...

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

28. பிறவியிலேயே இதயநோய்கள் வராமல் தடுக்க, ரத்த பந்தமுள்ள நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தல் நலம்.

29. மகப்பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில், கர்ப்பிணிப் பெண் நுண்கிருமிகளால், முக்கியமாக 'ரூபல்லா' போன்ற நோய்களால் பாதிக்கப்படாமல் இருப்பது குழந்தைக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

30. மகப்பேறு காலத்தில் மருந்து வகைகளை உட்கொள்வதிலும் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மதுபானங்கள் பழக்கமிருந்தால், கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

31. அடிக்கடி எக்ஸ்ரே கதிர் வீச்சுகளால் பாதிக்கப்பட்ட பெற்றோர், மலைப்பிரதேசங்களில் வாழும் பெற்றோர் போன்றோருக்கு இதயக் கோளாறு கொண்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு.

32. பிறவியில் அல்லாத இதயக் கோளாறுகள் வருவதற்கு நாம்தான் முற்றிலும் மூலக்காரணியாக இருக்கிறோம். மன உளைச்சல், போதைப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவைதான் இந்நோய்களுக்கான காரணிகள்.

33. பெண்களைவிட, ஆண்களுக்குத்தான் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் அதிகம். காரணம்... புகைப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கம். இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

34. அதிகப்படியான வேலைப்பளுவில் இருப்பவர்கள், ஐந்து நாட்களுக்கு ஒருமுறையாவது 30 நிமிடங்கள் நார்மலான நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

35. இதயநோய் உள்ளவர்கள் விரதம், பட்டினி இருத்தல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

36. நாற்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரும், காலை அல்லது மாலை நேரங்களில் 30 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இதயத்துக்கு அதிக அழுத்தம் செல்லாமல் இருக்கும்.

37. முப்பது நிமிட நேர நடைபயிற்சியின் முதல் 5 நிமிடங்கள் மெதுவாகவும், அடுத்த 20 நிமிடங்கள் வேகமாகவும், கடைசி 5 நிமிடங்கள் மீண்டும் மெதுவாகவும் நடப்பதுதான் சரியான 'வாக்கிங்' முறை.

38. மொத்தத்தில், தக்க உணவுமுறைகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடிப்பதால் வாழ்க்கை முறையை சீராக்கி, இதயநோய் ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்!

உணவுப் பழக்கம்... உஷார்!

'கல்லைத் தின்னாலும் கரையற வயசு...' என்று ஒரு குறிப்பிட்ட வயது வரை எதைப் பற்றியும் கவலைப்படாமல் விருப்பட்டதை எல்லாம் உண்டு மகிழலாம். ஆனால், அதையே தொடர்ந்து கொண்டிருந்தால்... தொல்லைகள் எல்லையில்லாமல் போகலாம். பிரச்னைகள் எதுவும் இதயத்தை நெருங்காமல் இருக்க, 30 வயதுக்கு மேல் உங்கள் உணவுப் பழக்கத்தில் இந்த 'டூ'ஸ்... அண்ட் 'டோன்ட்'ஸ்களை பழகுங்கள்...

'டூ'ஸ்...

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

39. காலை உணவாக... ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நலம். பிரெட், நூடுல்ஸ் போன்றவற்றை காலையில் சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்க்கவும். காரணம், ரத்தத்தில் கொழுப்பின் அளவை இவை அதிகப்படுத்தும்.

40. மதிய உணவாக பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற நார்ச்சத்து உள்ள காய்கறிகளையும் கீரைகளையும் அதிகளவு எடுத்துக் கொள்ளலாம்.

41. இரவு உணவாக இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு கோதுமை தோசை சாப்பிட்டாலே போதும். கூடுமானவரை அரிசி உணவைத் தவிர்க்கலாம்.

42. மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய பழக்கம்... உணவு உண்டதும் உடனடியாக படுக்கைக்குச் செல்லக் கூடாது என்பதுதான். உணவுக்குழலும் வயிறும் சந்திக்கும் இடத்தில் உணவு தங்கி, புண்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

43. இதயத்துடிப்பை சீராக வைக்கக்கூடிய, புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான பயறு வகைகள், சுண்டல், கீரை வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது, இதயத்தை பலமாக்கும்.

44. பீச், பார்க் என்று வெளியே செல்லும்போதும் சுண்டல், கொழுக்கட்டை போன்ற இதயத்துக்கு இதமான உணவுகளைக் கையோடு சமைத்து எடுத்துக் கொண்டு போனால்... உங்களுக்கும், குழந்தைகளுக்கும், பாக்கெட்டுக்கும்... முக்கியமாக, பாக்கெட் பக்கத்தில் இருக்கும் இதயத்துக்கும் நல்லது.

45. உயரத்துக்கு ஏற்ற எடை உள்ளவர்களைப் பார்த்து, இதய நோய்கள் எப்போதுமே கொஞ்சம் தள்ளியே நிற்கும். அதிக எடை உள்ளவர்கள்... வாரத்துக்கு ஒரு நாள் திரவ உணவுகள் (லிக்யூட் டயட்) மட்டுமே சாப்பிடுவது வயிற்றுக்கும், இதயத்துக்கும் நலம். 40 வயதுக்கு மேலே உள்ளவர்கள், இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

46. அன்றாட உணவில் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்வது மிக அவசியம். வறுவல் அயிட்டங்களைத் தவிர்த்து, வேக வைத்த மற்றும் குழம்பில் போடப்பட்ட காய்கறி, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் நலம்.

47. தினமும் ஏதாவது ஒரு பழ வகையை சேர்த்துக் கொள்வது நலம். குறிப்பாக, தினம் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொண்டால்... அது இதயத்தை பலப்படுத்தும்.

இனி 'டோன்ட்'ஸ்...

48. கொழுப்பு மற்றும் புரதச் சத்துள்ள எண்ணெய் பண்டங்களைத் தவிர்ப்பது நலம். உடம்பில் கொழுப்பு அதிகமாகும்போதுதான் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் தாக்குகின்றன.

49. சமைக்க எளிதானது என்பதற்காக அடிக்கடி கிழங்கு வகைகளை சமைப்பார்கள். ஆனால், இதை அதிகம் சேர்த்துக் கொள்வது சரியல்ல என்கிறார்கள் உணவியல் மருத்துவர்கள்.

50. பெரும்பாலான ஹோட்டல்கள், ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்... இங்கெல்லாம் என்ன மாதிரியான எண்ணெயில் சமைக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க... அங்கு விற்கப்படும் எண்ணெய் வழியும் பரோட்டா, சில்லி பரோட்டா, இறைச்சி, கொழுப்பு உணவுகளை வாங்கி உண்பது என்பது, ஆபத்துக்கு நாம் வைக்கும் வெற்றிலை-பாக்கு உபசரிப்பு.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

51. 'நாங்கள்லாம் ரொம்ப மாடர்ன்' என்று காட்டிக் கொள்வதுபோல பீட்சா, பர்கர், ஸ்பிரிங்ரோல், சிப்ஸ், சாட் உணவுகள் என்று விழுங்குவதைத் தவிர்க்கவும்.

இதய பாதுகாப்புக்கு மூலிகை மருத்துவம்!

பரபரப்பு, தொடர் ஓட்டம் என மாறிவிட்ட வாழ்க்கை முறையால், நம் கையருகேயும் கைக்குள்ளும் இருக்கும் மூலிகை வைத்தியங்கள் நமக்கு மறந்து போய்விட்டன. வீட்டுப் புழக்கடையில் நம் ஆரோக்கியத்துக்கான அத்தனை விஷயங்களும் அழகாக பூத்துக் கிடந்த காலமும் மறைந்து போனது. அதன் எதிரொலியாக விதவிதமான நோய்கள், பிரச்னைகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதயநோயை நெருங்கவிடாமல் செய் யும் மூலிகை வைத்தியங்கள் என்னென்ன?!

52. இதயநோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து, காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்... இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். இதய நோய் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெள்ள மெள்ள குறையும்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

53. செம்பருத்திப்பூ இதழ்களை நீர்விட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால்... இதயநோயின் தீவிரம் குறையும்.

54. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செய்கிறது. அந்த வகையில், இஞ்சிச் சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். இஞ்சிச் சாறுடன் கொஞ்சம் தேனும் கலந்து அருந்தலாம்.

55. ஒரு டம்ளர் தண்ணீருக்கு, இஞ்சிச் சாறு 25 மில்லி, அரைமூடி எலுமிச்சைச் சாறு, சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி!

56. இஞ்சியைத் துவையல், ஊறுகாய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதயநோயை வெல்லலாம்.

57. பூண்டு, உடலில் உள்ள கொழுப்புச்சத்தை எளிதாகக் குறைக்கக் கூடியது. தொடர்ந்து மூன்று மாதங்கள் வெள்ளைப் பூண்டு சாப்பிட்டு வந்தால், உரிய நிவாரணம் கிடைக்கும்.

58. பொதுவாக வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட... வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.

59. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால்... இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.

மனமே மருந்து!

'நல்லாயிருக்கீங்களா..?' என்று உங்கள் நலம் விரும்பி உங்களிடம் கேட்கும்போது, உங்களின் பதில்... 'ஆம்' என்றால், உங்கள் இதயம் நிம்மதியாக இருக்கிறது. உங்களின் பதில்... 'இல்லை' என்றால், உங்கள் இதயம் துயரத்தில் இருக்கிறது. இதுவே 'தெரியவில்லை' என்பது உங்கள் பதிலாக இருந்தால், உங்கள் இதயம் குழப்பத்தில் இருக்கிறது.

துயரத்தைத் துடைத்து, குழப்பத்திலிருந்து மீண்டு, மன அழுத்தத்தை விரட்டி, இதயத்தை மீட்டெடுக்க... பிடியுங்கள் டிப்ஸ்களை!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

60. மன அழுத்தப் பிரச்னைகள் மூன்று படிநிலைகளில் வருகின்றன. அவற்றை அதன் அறிகுறிகளைக் கொண்டு எளிதில் இனம் காண முடியும். எனவே, எல்லா அழுத்த உணர்வுகளும் மன அழுத்தம் ஆகிவிடாது என்பதில் தெளிவு தேவை.

61. முதல்நிலை மன அழுத்தத்தில் உள்ளவர்கள், எந்த ஒரு செயலையும் படபடப்போடு ஆரம்பிப்பார்கள்; அதிகமாக யோசனை செய்வார்கள்; வலுவான காரணங்கள் இல்லாதபோதும் தேவையில்லாமல் அதிகம் கவலைப்படுவார்கள். எதைப் பற்றியாவது யோசிக்கும்போது, 'அதுவா... இதுவா?' என்ற சந்தேகம் மாறி மாறி எழுந்து கொண்டே இருந்தால்... மருத்துவரிடம் பதில் பெறுங்கள்.

62. இரண்டாம் நிலை மன அழுத்தத்தில் உள்ளவர்கள், 10 நிமிட வேலையை, 8 நிமிடத்திலேயே செய்ய முயற்சிப்பார்கள். அதனால், காரணமில்லாமல் சோர்வாக இருப்பார்கள்; அடிக்கடி கோபப்படுவார்கள்.

63. உச்சநிலை மன அழுத்தத்தில் உள்ளவர்களும் அதிக படபடப்புடன் இருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு வேலையில் ஆர்வமே இருக்காது. 'இதெல்லாம் இல்லாட்டி... நடக்காம இருந்திருந்தா... நல்லா இருந்திருக்கும்' என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

64. மன அழுத்தப் பிரச்னை எதுவாக இருந்தாலும், அது உங்களை ஆளுமை செய்யாமல் இருக்க வழி காணுவதுதான் பிரச்னையை வெல்வதற்கு வழி.

65. மன அழுத்தம் கவலைக்குரிய விஷயமாக மாறாமல் இருக்க... உங்கள் எண்ணங்களை, வலிகளை, கஷ்டங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம். தீர்வு அவர்களிடம் இருக்கலாமே!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

66. நம்பிக்கைக்கு உரியவர்களுடான எண்ணங்களின் பகிர்தலும் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்றால், மன அழுத்தம் பயமுறுத்தும் வகையில் அதிகரித்தால், மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ அணுகுவது த£ன் சரியான தீர்வு.

67. 'டாக்டர்கிட்ட போறதுக்கு ஏது நேரம்?' என தொடர்ந்து வேலையின் பின்னாலோ, பிரச்னைகளின் பின்னாலோ ஓடிக் கொண்டே இருந்தால்... மன அழுத்தத்தால் இதயவலி, தீராத தலைவலி, தொண்டைவலி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, தோல் வியாதிகள் எனப் பலவும் வரிசைகட்டி வரும்... கவனம்.

யோகா மற்றும் தியானம்!

வாழ்க்கை முறை விதவிதமான மன, உடல் பிரச்னைகளைத் தருகிறது. ஆனால், அவற்றிலிருந்து விடுபட சரியான குருவிடம் கற்கும் பாரம்பரிய யோகக் கலையும், தியான முறையும் பல வழிகளை சொல்கின்றன. 'இதயநோய்க்கு ஏன் யோகா... தியானம்..?' என்பவர்களுக்கு இந்த துறை மருத்துவர்களின் பதில்கள் இங்கே...

68. யோகா, தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்தத்தையும் சுத்திகரித்து இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது.

69. தற்போது பெருநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு தூய ஆக்ஸிஜனே கிடைப்பது இல்லை. ஆண்டுக்கு 23 லட்சம் டன் வரை கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் கலப்பதால், அது கரியைப் போல மூக்கிலும் காதிலும் படியும் அளவுக்கு காற்றை ஆக்கிரமிக்கிறது. இது ரத்தத்தைக் கெடுத்து, இதயத்துக்கும் கேடு விளைவிக்கும். இந்த மாதிரி சூழலில் வாழ்பவர்கள்... மூச்சுப் பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கான எளிமையான வழி.

70. தூய ஆக்ஸிஜனைக் கொண்டு ரத்தத்தை சுத்திகரித்து இதயத்தைப் பாதுகாக்க வழி இருக்கிறதா..? என்று கேட்பவர்களுக்கு, 'பிராணாயாமம்' சிறந்த வாழ்வியல் வழி.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

71. பிராணாயாமம் பற்றி திருமூலர் எழுதிய...

'ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்க்கு
கூற்றை உதைக்கு குறிஅதுவாமே!'

என்ற வைர வரிகள், தமிழ்ச் சமுதாயத்தை வாழவைக்கும் வாய்களாகத் திகழ்கின்றன. இவை உயிர் வாழ்தலில் காற்றின் முக்கியத்துவத்தைப் பேசுகின்றன.

72. இதயத்தின் தாங்கு திறனை மேம்படுத்த மூச்சுப் பயிற்சி முக்கியமானது. உங்களுக்கான மூச்சுப் பயிற்சி பற்றி அறிய... முதலில் உடலில் என்னனென்ன பிரச்னைகள், எங்கெங்கு இருக்கின்றன என்பதை அறிய வேண்டியது அவசியம் என்கிறது இத்துறை அறிவியல்.

73. உடலின் பிரச்னைகளை எப்படி அறிந்து கொள்ள முடியும்..? முதலில் பத்மாசன நிலையில் அமரவும் (பத்மாசன நிலையில் உட்கார இயலாதவர்கள் சுகாசன நிலையில் அமரலாம்). பின்பு, வலது கை பெரு விரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசியால் காற்றை உள்ளே இழுக்கவும். பின்பு, வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசியால் காற்றை வெளிவிடவும்.

74. சரியான முறைப்படி மூச்சுப் பயிற்சி செய்யும்போது... உடலில் பிரச்னை உள்ளவர்களுக்கு, பிரச்னை உள்ள இடங்களில் சிறிய வலி உண்டாகும். அதேபோல், இதயத்தில் சிறு வலி உணரப்பட்டால் 'பிரச்னை உள்ளது' என்பதை அறியலாம்.

75. வலி உள்ளவர்கள், யோகா கலையில் நிபுணத்துவம் பெற்ற சரியான குருவை அடையாளம் கண்டு, சரியான பயிற்சி முறைகளின் மூலம் உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

76. வலி இல்லாதவர்கள், 166432 என்று குறிப்பிடப்படும் 'வாசி யோக'த்தை கற்றுக்கொண்டு செய்யலாம். இது ஒரு எளிய மூச்சுப் பயிற்சி. இதனால் இதயம் வலிமை அடையும்; நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

77. உடல்நலம் பேண விரும்பும் அனைவருமே பத்மாசனம், சுகாசனம், சவாசனம் (சாந்தி ஆசனம்) ஆகியவற்றை செய்யலாம். இவை மனம் அலைபாய்வதைத் தடுத்து, மனநிலையை மேம்படுத்தும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்.

78. தியானம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தி, ஒரே விஷயத்தில் கவனத்தைக் குவிப்பதுதான். எனவே, தியானம் செய்யும்போது உங்கள் மனது அலைபாயாமல் ஒரு கட்டுக்குள் இருக்கும்.

79. தொடர்ந்து தியானங்களில் ஈடுபடும்போது, இந்தக் கலை உங்கள் வசமாகி, மனது அலைபாய்வதைத் தடுக்கும். அதன் மூலம் அனைத்துப் பிரச்னைகளையும் லேசாக உணர வைக்கும். இதுவே இதயப் பிரச்னையை நூறு சதவிகிதம் தடுக்கும் வாய்ப்பை உருவாக்கும்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயம் ஏன் காதலின் சின்னமானது?!

இதயம்... காதலின் சின்னம் என்று மலை முகடுகளிலிருந்து கடவுளின் கருவறைகள் வரை காதலர்களால் வரையப்பட்டிருக்கிறது. 'இதயத்துக்கும் காதலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?' என்பவர்களுக்கு...

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

80. மூன்றாம் நூற்றாண்டில் அத்திமர இலைகள்தான் காதலின் சின்னமாகக் கொண்டாடப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள மியூசியத்தில் இன்னமும் அவை வைக்கப்பட்டிருக்கின்றன.

81. ஏழாவது நூற்றாண்டு காலகட்டத்தில் 'சில்பம்' என்ற செடியின் விதை, குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதுவே, காதலின் சின்னமாகக் கருதப்பட்டது.

82. அதன் பிறகு, 1000 வருடங்களுக்குப் பிறகு, எகிப்து, ரோமானிய சாம்ராஜ்ஜியங்களில் இந்த காதல் சின்னங்கள் பூ ஜாடிகளில் வரையப்பட்டிருந்தன.

83. இடைக்காலத்தில்தான் இந்த வடிவங்கள் மாற்றம் பெற்று, இதயம் வடிவத்தில் உருவானது. பக்திமார்க்கமான காதலும், உடல் ரீதியான காதலும் ஒரு நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் காரணமாக இருந்ததாக அந்தக் காலகட்டத்தில் நம்பப்பட்டது.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

84. பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து காதலின் சின்னமாக இதயம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த காதல் சின்னத்தில் கொட்டப்படும் ஆழ்ந்த சிவப்பு நிறம் அதிர்ஷ்டம், உடல் ஆரோக்கியம், காதல் அத்தனையையும் குறிக்கிறதாம்.

85. காதல் என்னும் அழகான, ஆரோக்கியமான, இதமான உணர்வு காயப்படும்போதுதான் மனப் பிரச்னைகள் அதிகரித்து, குடும்ப அமைதியும் தனி மனித அமைதியும் குலைந்து, தற்கொலைகள், கொலைகள் போன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கின்றனர் மானுடவியல் ஆய்வாளர்கள். உண்மையான காதலர்களையும் காதலையும் காதலுடன் ஆராதிப்பதும் இதயம் காக்கும் வழிதான்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

86. காதல் இல்லாத வாழ்க்கை முற்றுப் பெறாது என்பதுதான் வாழ்வியல் தத்துவம். எதிர் பாலை ஈர்ப்பது மட்டுமல்ல காதல். சக உலகத்தை காயப்படுத்தாமல் இருப்பதும் காதல் என்கிறது உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள். எந்த மனதையும் காயப்படுத்தாமல் வாழ்வதை லட்சியமாகக் கொள்வதும் இதயம் காக்கும் வழி!

இதயத்துக்கு சோதனை!

இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது இவற்றைத்தான்... இவற்றுக்கெல்லாம் ஆகும் செலவுக் கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்துவிட்டால், இதற்கெல்லாம் வேலையே இருக்காது! ஆனாலும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அந்தக் கணக்கு வழக்குகளை...

87. சி.ஆர்.பி. டெஸ்ட் (creactive protein test) இது ஒரு எளிய ரத்த பரிசோதனை. இதன் மூலம், ரத்தத்தில் சி.ஆர்.பி-யின் நிலையை அறியலாம். உரிய அளவைவிட அதிகம் இருப்பது தெரிந்தால், வீக்கமோ, இதயநோய் பாதிப்போ இருக்கலாம் என்று அர்த்தம். இதற்கான கட்டணம் ரூ.500.

88. இதய சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இவையெல்லாம், புதிய தலைமுறை ஸ்கேன் தொழில்நுட்பங்கள். உடலில் மிக நுணுக்கமான அடைப்புப் படிமங்கள் இருந்தால்கூட கண்டுபிடித்துவிடும். இதற்கு கட்டணம் ரூ. 8,000 - 10,000 வரை.

89. உயர்தர மல்டி ஸ்லைஸ் ஸ்கேன் இது... கதிரியக்கம், புற்றுநோய் ஆபத்து பற்றி கவலைப்படத் தேவையில்லாத தொழில்நுட்பம் கொண்ட ஸ்கேன். கட்டணம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

90. சி.டி. ஆஞ்சியோகிராம் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பைக் கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்ட பழைய முறைகளுக்கு மாற்று வழி கொடுத்திருக்கிறது இந்த மல்டி ஸ்லைஸ் சி.டி. ஆஞ்சியோ சோதனை. இது ஒரு நிமிடத்திலேயே அடைப்பைக் கண்டறிந்துவிடும். இதயத் துடிப்பு, சிறுநீரக செயல்பாடு, ஒவ்வாமை ஆகியவற்றை கண்டறிவதற்கு சற்று அதிக நேரம் தேவைப்படும். கட்டணம் ரூ.10,000 - ரூ.15,000.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

91. ஐ.வி.யு.எஸ். (IVUS-Intravascular ultrasound) பரிசோதனை கிட்டத்தட்ட ஒரு கேமராவை உடல் குழாய்களுக்குள் பயணிக்க வைப்பது மாதிரியான பரிசோதனை. இதை மேற்கொள்ள ஒரு மணி நேரம் ஆகலாம். கட்டணம் ரூ10,000 முதல் ரூ.11,000 வரை.

இளவயது இடர் காரணிகள்!

கடந்த பத்தாண்டுகளில், மாரடைப்பு அதிகம் வர வாய்ப்புள்ளவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நடுத்தர வயதுக்காரர்களுக்கு இந்த நோய் வரக் காரணமான புதிய இடர்காரணிகளாக ஆராய்ச்சிகள் சொல்லும் காரணங்கள்...

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

92. 'சி-எதிர்வினை புரதம்' (c-reactive protein test) என்ற புரதத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இளவயது மாரடைப்புகளுக்கும் இதுதான் முக்கிய காரணம். சமீபகாலம் வரை அதிக அளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்தக் காரணி, இன்று மருத்துவத்துறையினரால் முக்கிய அறிகுறியாக கணிக்கப்படுகிறது.

93. சி-எதிர்வினை புரதத்தில் அமினோ அமிலம், ஹோமோசிஸ்டைன் ஆகியவை அதிகம் உண்டு. இவை ரத்தக்குழாய்ளுக்கு எரிச்சலூட்டி, அதிக அடைப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

94. 'தினசரி இரண்டு முறை பல் துலக்காதவர்களில் 70 சதவிகிதம் பேருக்கு இதயநோய் தாக்க வாய்ப்புகள் அதிகம்' என்கிறார்கள் மருத்துவர்கள். பல்லில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவதன் எதிர்விளைவு இது!

95. ஆராய்சிகளின்படி, குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்களுடன் நல்ல பிணைப்பும் உறவும் உள்ளோருக்கு இதயநோய் வர 50 சதவிகிதம் வாய்ப்பு குறைவு.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

இதயத்தை பலமாக்கும் இணையற்ற யோசனைகள்

பிணைப்பும் அன்பும் மனதுக்கு அமைதி தரும். இறுக்கத்துடன் இருந்தால், இடைவெளி அதிகரித்து, உறவுகள் கசக்கும்... மனநிம்மதி கெடும். இதையெல்லாம் தடுத்து, உறவை மேம்படுத்திக் கொண்டாலே... உங்கள் இதயம் உறுதிப்படும். அதற்காக...

96. உங்கள் நண்பர், வாழ்க்கைத் துணை என யாருடன் வேண்டுமானாலும் விவாதம் செய்யலாம். தொடரும் விவாதத்தில் வார்த்தைகள் கத்தியாகி, இதயத்தைக் கீறினால்... ஈகோ பார்க்காமல், 'ஐயாம் ஸாரி' என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள்; உங்கள் இதயம் லகுவாகும்; உறவு தொடரும். உங்கள் வார்த்தைக்குத்தான் கிரீடம் சூட்டப்பட வேண்டும் என்று முனைந்தால்... உறவுகள் முறியும்.

97. எந்த உறவுக்கிடையிலும் பெரிய அளவுக்கான மோதல் வராமல் தடுப்பது மிகமிக அவசியம். அதற்கு இருவருக்குமிடையில் இருக்கும் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் ஒருவரை ஒருவர் தொடர்ந்து காயப்படுத்தாமல்.. 'இதுதான் என் பிரச்னை, உன்மேல் என் கோபம் இதுதான்' என்று மனம்விட்டுப் பேசுவது... சுமுகமாக்கும் பிரச்னையையும் உறவையும்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

98. நாம், பிறரை கோபப்படுத்துவதோ, நம்மால் பிறர் கோபம் அடைவதோ தவிர்க்க முடியாதது. நீங்கள் கோபம் அடைந்துவிட்டால், அதை ஆற்றுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு ஆற்றிக் கொள்ளுங்கள். ஆனால், மனதுக்குள் பூட்டி வைத்தால், அது வியாதியாக உருமாற்றம் பெற்றுவிடும் ஜாக்கிரதை.

99. உங்களை காயப்படுத்திய விஷயம்... பணம், வேலை நெருக்கடி, தாம்பத்யம்... இப்படிப்பட்டவற்றில் எது என்று கண்டுபிடியுங்கள். அந்தப் பிரச்னையிலிருந்து தப்பித்துப் போக வழிதேடாமல், சம்பந்தப்பட்டவர்களிடம் உட்கார்ந்து பேசி தீர்ப்பதற்கு வழி பாருங்கள். அது உங்கள் இதயத்தை பலப்படுத்தும்.

100. என்ன பேசுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட புண்..? வள்ளுவர் காலத்திலிருந்து உறவுகள் கெட வார்த்தைகள்தான் மூலகாரணம் என்பதை உணர்ந்து, வார்த்தைகளின் மீது எச்சரிக்கையாக இருங்கள்... பேசுவதற்கு முன்.

உணர்வுகள் காப்போம்; இதயம் காப்போம்; உலகம் காப்போம்!


புன்னகை பேசும் இதயம்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

'புன்னகை அரசி' கே.ஆர். விஜயா... கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் மாறாத புன்னகையோடு வலம் வருபவர். இப்போது சின்னத்திரையிலும் வலம் வரும் அவர், இன்றைக்கும் ஆரோக்கியம் குறையாமல் நடைபோடுகிறார். அவரிடம், 'இதயத்தைக் காக்கும் வாழ்வியல் வழிகள் என்ன... நீங்கள் கடைப்பிடிக்கும் எளிய வழிமுறைகள் என்னென்ன?' என்று கேட்டோம்.

புன்னகை பொங்க அள்ளித் தெளித்தார் டிப்ஸ்களை! அவர் தந்த உடல், மன, ஆரோக்கிய டிப்ஸ்கள்... ஆங்காங்கே பக்கங்களை பாந்தமாக அலங்கரிக்கின்றன.

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

டைம் மேனேஜ்மென்ட்... டென்ஷனைக் குறைக்கும் வழி!

"இந்த டைமுக்கு இங்க போகணும்னு முடிவு பண்ணிட்டா, அந்த டைமுக்கு அங்க இருக்கணும். அப்படி இருந்தா... நம்ம மேல மத்தவங்களுக்கு மதிப்பும் மரியாதையும் வரும், நம்ம வேலையும் எந்த டென்ஷனும் இல்லாம ஸ்மூத்தா போகும். நான் எப்பவும் எந்த இடத்துக்கும் அவங்க சொல்ற நேரத்துல கரெக்டா நிப்பேன், அது ஷூட்டிங்கா இருந்தாலும் சரி, ஒரு ஃபங்ஷனா இருந்தாலும் சரி!"

பக்தியே சக்தியடா!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

'வாழ்க்கையில, நம்மைப் பத்தின எல்லா விவரங்களையும், நம்மளைத் தவிர, வேற ஒருத்தரும் தெரிஞ்சு வச்சிருக்கணும். அவங்ககிட்ட நம்ம பிரச்னைகளைப் பகிர்ந்துகிட்டா... நல்ல தீர்வு கிடைக்காம போனாலும், மனசுக்கு ஆறுதல் கிடைக்கற நபரா அவர் இருக்கணும். அந்தளவுக்கு ஒரு நல்ல நம்பிக்கையான உறவு இருக்கறது... நமக்கு பலம். என் பலம் கடவுள்."

எக்ஸர்சைஸ் கீப்ஸ் யூ யங்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

"எப்பவும் என்னோட எல்லா வேலைகளையும் நானே செஞ்சுக்குவேன். அதுவே நல்ல எக்ஸர்சைஸ். வாரத்துக்கு ரெண்டு, மூணு நாளாவது ஒரு மணி நேரம் நடப்பேன். இந்த நடை... மனசையும், உடலையும் சுறுசுறுப்பா வச்சிருக்கும். மனசு சுறுசுறுப்பா இருந்தா... எந்த டென்ஷனும் வராது. உங்க சுறுசுறுப்பைப் பார்த்து, 'நாமளும் அப்படி இருக்கணும்'னு உங்க குழந்தைங்க ஆசைப்படுவாங்க. அவங்களுக்காகவாவது அப்படி இருங்களேன்."

அன்பே சிவம்!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

"வீடு, ஷூட்டிங்னு என்னைச் சுத்தி இருக்கற எல்லா மனிதர்கள்கிட்டயும் அன்பா இருப்பேன். முடிஞ்ச அளவு அவங்களை காயப்படுத்தற மாதிரி வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன். குறிப்பா, என் கணவர்கிட்ட எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக்குவேன். இக்கட்டான பலசமயங்களில் அவர்தான் என் வழிகாட்டி. ஃப்ரெண்ட்லியான லைஃப் பார்ட்னர்தான் வாழ்க்கையில் முக்கியம். அதுக்கு ரெண்டு பக்கமும் கை நீட்டணும். நீட்டிப் பாருங்க... இதயம், காதல் ரெண்டுமே ரம்மியமா இருக்கும்."

உணவே மருந்து!

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

"நல்லா சாப்பிடுவேன். ஆனா, கிடைக்குதேங்கறதுக்காக எல்லாத்தையும் வயித்துக்குள்ள திணிக்க மாட்டேன். அளவான சாப்பாடு, பசிச்சதும் சாப்பாடுதான் என் ஸ்டைல். முடிஞ்ச வரைக்கும் அதிக காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டு, எண்ணெயில பொரிச்சது, வறுத்ததுக்கு டாட்டா சொல்லிடுவேன். நீங்களும் டாட்டா சொல்லுங்க... அதிக கொழுப்புச்

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..

சத்துள்ள சாப்பாட்டுக்கு! சந்தோஷம் உங்களை இன்வைட் பண்ணும்."

கூடவே கூடாத விஷயம்!

"நான் எப்பவும் சோம்பேறியா இருந்தது இல்ல. எப்பவும் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பேன். வேலைஇல்லாம சும்மா இருக்குற மனசை சாத்தானோட வீடுனு சொல்லுவாங்க. நம்மக்காக மட்டுமில்லாம, அடுத்தவங்களுக்காகவும் எப்பவும் எதையாவது செய்துகிட்டிருந்தா... அது இதயத்துக்கு இதம் தரும். செஞ்சு பாருங்களேன்!"

இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..
-தொகுப்பு நாச்சியாள், எம்.மரிய பெல்சின், வே.கிருஷ்ணவேணி, இரா.மன்னர்மன்னன் படங்கள் எம்.உசேன், து.மாரியப்பன்

தொகுப்புக்கு உதவியவர்கள் டாக்டர் ஆர். மனோஜ், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், சென்னை டாக்டர் ஜோய் மோன், தாகூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை டாக்டர் பொன்மாணிக்கவல்லி, மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளர், தஞ்சாவூர் டாக்டர் முத்துக்குமார், இதயநோய் நிபுணர், அரசு ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை டாக்டர் கோமதி, உணவியல் துறை, சென்னை
இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..
இதயம்... ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம்... பிரச்னைகளுக்குத் தீர்வு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism