Published:Updated:

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

Published:Updated:

 
நா.சுவாமிநாதன்,
வி.ஜெய் கிருஷ்ண கோகிலன், கி.ஆ.கோமதிநாயகம்
'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'
'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வெற்றிக் கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

பொதுவாக விடுமுறை தினங்களில் நெல்லையின் ஜவுளிக் கடைகள், கோயில்கள் என அத்தனை இடங்களும் நிரம்பி வழியும். ஆனால், கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஞாயிறன்று, 'அத்தனைக் கூட்டமும்... நெல்லையின் சங்கீத சபாவுக்கு இடம் மாறிப்போய் விட்டதோ...!' எனும் அளவுக்கு ஏக கலகலப்பாக களை கட்டியது 'அவள் - விவெல்' இணைந்து நடத்திய 'ஜாலி டே'!

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

முதல் நாளான 23-ம் தேதி, நெல்லை, லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற முன்தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாலன்டியர்களாக மா.தி.தா. இந்து கல்லூரி மாணவிகள் பட்டாளம், ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்றுக் கொள்ள... தென்காசி அருகிலுள்ள யூ.எஸ்.பி. ஸ்கூல் வேனில் வந்திறங்கிய அந்தப் பள்ளி ஆசிரியைகள், 'எங்க ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் எங்களுக்கு ஆல் த பெஸ்ட் சொல்லி அனுப்பியிருக்காங்க...' என்று பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு அசத்தினர்.

இரண்டாம் நாள், 24-ம் தேதி காலை ஏழு மணிக்கெல்லாம் சங்கீத சபாவில் வாசகியர் கூட்டம் அலைமோத, அரங்கம் நிரம்பி வழிந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் மூத்த வாசகியர்களை இருக்கைகளில் அமரச் சொல்லி விட்டு, தரையில் அமர்ந்த இளைய வாசகிகள்... 'வீரத்துல மட்டும் இல்லீங்க, ஈரத்துலயும் நெல்லைக்கு முதலிடம்தான்' என்றார்கள் உற்சாக குரலில்!

வாசகியரிலிருந்தே ஐந்து பேர் மேடைக்கு அழைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்ற இனிதே ஆரம்பமானது 'ஜாலி டே' உத்சவம்! கிறிஸ்துராஜா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி இரண்டாம் ஆண்டு மாணவி மதுமிதாவின் பரதமும், நெல்லை குழந்தைகளின் 'வெற்றிக் கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து' என 'சுறா' பாடலுக்கான நடனமும், அசத்தல் ஆரம்பம்!

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

போட்டிகளின் இடையே ''காதல் வந்தாலே... காலு ரெண்டும் தன்னாலே'' என்று அலறிய குத்துப் பாடல்களுக்கு எல்லாம் பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து எழுந்த பெண்கள், குரூப் டான்ஸ் ஆடி வெளுத்துக் கட்டினார்கள்.

''இன்னிக்கு யாருக்கெல்லாம் கல்யாண நாள்? ப்ளீஸ் கம் டு ஸ்டேஜ்'' என்று, நிகழ்ச்சி தொகுப்பாளினி அபீக்ஷா திடீர் போட்டிக்கு அழைப்பு விடுக்க, மேடையேறிய பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ''சே! ஜஸ்ட் மிஸ். 23-ம் தேதி என் கல்யாண நாள்!'' என படபடத்தார் வாசகி ஒருவர்!

அழகு குறிப்பு சொல்ல ஆஜரான அபர்ணா, மண்டபத்தை ஒரு சுற்று சுற்றி வந்து, ''நெல்லை பொண்ணுங்க இயல்பாவே அழகாத்தான இருக்கீங்க!'' என்று மைக்கில் காம்ப்ளிமென்ட் பண்ண, வெட்கத்தில் முகம் சிவந்தது சங்கீத சபா.

மதிய உணவு நேரம்... ஒரு பக்கம் உணவு பரிமாற்றம், இன்னொரு பக்கம் 'வேர் இஸ் த பார்ட்டி' பாடலுக்கு விசிலடித்து ஆட்டம்... என வாசகிகள் கொண்டாடியது, அழகான அட்டகாசம்!

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'

விளம்பரத் தயாரிப்புப் போட்டியில் 'கறுப்பான பெண்ணை சிவப்பாக மாற்றிய விவெல்' என ஆண் வேடத்தில் சின்னப்பொண்ணு என்கிற வாசகி அட்டகாசம் செய்ய, அரங்கமே அதிர்ந்தது.

போட்டிகள் முடிந்து பரிசுகள் அறிவிக்கப்பட படு டென்ஷனோடு முடிவுகளை கவனித்தனர் வாசகிகள். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் ஐ.டி.சி. நிறுவனைத்தைச் சேர்ந்த செல்வம் பரிசுகள் வழங்கினார். இறுதியாக 'பம்பர் பரிசு'... குலுக்கல் முறையில் நம்பரைத் தேர்தெடுத்து பெயரை அறிவிக்க, நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு ஓடி வந்தார் ம.தி.தா. இந்து கல்லூரி மாணவி பார்வதி தேவி!

''வாவ்! நாளைக்கு எங்க காலேஜ்ல, காலனியில எல்லாம் நான்தான் ஹீரோயின்!'' என்றார் உற்சாகமாக!

வந்திருந்த அனைவருக்கும் 'விவெல்' நிறுவனத்தின் சார்பில் 'கிஃப்ட் ஹேம்ப்பர்' வழங்கப்பட... தாய் வீட்டு விசேஷத்துக்கு வந்துவிட்டு தாம்பூலம் வாங்கிப் போன மகிழ்ச்சி வாசகிகள் முகத்தில்!

 

 

'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'
-
'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'
'வெற்றிக்கொடி ஏத்து... வீசும் நம்ம காத்து!'
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism