'நரக வாழ்க்கை' பத்தி சொல்லுங்களேன்...'' என்றாள். ''அது எதுக்குடி உனக்கு..?'' என்று நான் கேட்க, ''நாளைக்கு தமிழ் கிளாஸ்ல சொல்லணும்... மிஸ் டைரியில எழுதி விட்டிருக்காங்க பாருங்க...'' என்று சொல்ல, அப்போதுதான் புரிந்தது 'நகர வாழ்க்கை'யை 'நரக வாழ்க்கை' ஆக்கிய என் பேத்தியின் மழலை மொழி!
வீட்டில் அனைவரிடமும் இதை நான் சொல்லிச் சிரிக்க, 'அப்படி என்ன நாம ஜோக் சொல்லிட்டோம்..!' என்று புரியாமல் விழித்தாள் என் செல்ல பேத்தி!
- எஸ்.ஞானகுமாரி, சென்னை-101
உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம். அனுப்ப வேண்டிய முகவரி, 'குட்டீஸ் குறும்பு', அவள் விகடன் 757, அண்ணாசாலை, சென்னை -600 002.
|