Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஓவியங்கள் கண்ணா
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

150

அலுப்பான ராத்திரியும்... கழுவாத பாத்திரங்களும்!

அன்று இரவு எங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும், என் வீட்டினருக்கும் உணவு பரிமாறிவிட்டு, நானும் சாப்பிட்டுவிட்டு பார்த்தால், மணி 11. சோர்வாக இருந்ததால், 'காலையில கழுவிக்கலாம்...' என்று பாத்திரங்களை வாஷ்பேஸினில் போட்டுவிட்டு படுக்கச் சென்றேன். இதைக் கவனித்த உறவுக்காரப் பெண், ''வாம்மா... நாம ரெண்டு பேரும் சேர்ந்து கழுவி வெச்சுடலாம்' என்றார். ''நீங்க ஏன் சிரமப்படறீங்க... காலையில பார்த்துக்கறேன்'' என்றேன். அதற்கு அவர்,

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

''ராத்திரியில எச்சில் பாத்திரங்களப் போட்டுட்டு படுக்கக்கூடாதுனு நம்ம பெரியவங்க சொன்னதுல அர்த்தம் இருக்கும்மா. அதுல ஒட்டிட்டு இருக்கற எச்சத்தை சாப்பிட ஈ, கொசு, பூச்சினு ராத்திரி வரும். அது மூலமா தொற்று வரும். அதனாலதான்'' என்று அவர் அக்கறையாக விளக்க... அன்றிலிருந்து எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், இரவு பாத்திரங்களைக் கழுவாமல் படுப்பதில்லை நான்!

- எம்.எஸ்.அமுதா சீனிவாசன், என்.பி. சாவடி

குழந்தையை புண்ணாக்கிய குக்கர்!

எங்கள் பால்காரரின் மகளுக்கு இரண்டரை வயது. எப்போதும் வீட்டில் இருக்கும் குக்கரில் அமர்ந்துகொண்டு, இட்லி சட்டி, குக்கர், கரண்டி, டம்ளர்களை எடுத்து வைத்து விளையாடுவதுதான் அவள் வழக்கம். அன்று குக்கரில் சாதம் வைத்த

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அவளின் அம்மா, குக்கரை இறங்கி தரையில் வைத்துவிட்டு அடுப்பில் ஏதோ வேலையாக திரும்ப, சிறிது நேரத்தில் எப்போதும் போல விளையாட ஓடி வந்த அந்த குழந்தை குக்கரில் வந்து அமர்ந்துவிட, துடியாய் துடித்து விட்டாள். புண் ஆறுவதற்குள் அந்தக் குழந்தையோடு அவள் பெற்றோரும் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கவனம்!

- வி.லெஷ்மி விஜயகுமார், திருச்சி

பக்குவம் பெறுவது எப்போது?!

நானும் என் தோழியும் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது, மூன்று திருநங்கைகள் கைகளைத் தட்டிக் கொண்டு காசு கேட்டார்கள். கடையிலிருந்த ஒருவர், அவர்களைப் பார்த்து வக்கிரமாகப் பேசினார். இன்னொருவர் அவர்களின் கையைப் பிடித்து இழுக்கப் பார்த்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

எங்களுக்கு, அதிர்ச்சியும் ஆத்திரமும் முட்டிக்கொண்டு வந்தது. அவர்கள் காசு கேட்டால்... ஒன்று போடலாம், அல்லது இல்லை என்று சொல்லலாம். ஆனால், அநாகரிகமாக பேசுவதும், கையைப் பிடித்து இழுக்கப் பார்ப்பதும் அநியாயம் இல்லையா?!

'திருநங்கைகளை சக உயிராக மதியுங்கள்' என்று நம் சமூகத்தில் மாற்றங்கள் ஒருபுறம் வேகமெடுத்தாலும், அநாகரிக அணுகுமுறை குறைவதாகக் காணோம். அந்த மூன்றாம் பாலினரையும் நம்முள் ஒருவராக ஏற்றிக்கொள்ளும் பக்குவம் பெறுவது எப்போது?!

- சியாமளா பாலு, திருச்சி

கண்ணைக் கட்டும் கறுப்பு பாலிதீன்!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் விற்கும் பகுதியில் நிறைய சிறு வியாபாரிகள் கூறு கட்டி பழங்களை விற்பார்கள். '10 ஆப்பிள் 100 ரூபாய்'

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

என்று சொன்னால், 80 ரூபாய்க்கு பேரம் பேசி வாங்கலாம். சாமர்த்தியமாக வாங்கிவிட்டதாக நினைத்து வீட்டுக்கு வந்து பார்த்தால், வாங்கி வந்த பழங்களில் பாதி அழுகியிருக்கும். 'நல்ல கூறாத்தானே எடுத்தோம்...' என்று புலம்பல்தான் மிஞ்சும். எங்கே தவறு நடக்கிறது என்று நான் விழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது... அந்த வியாபாரிகளில் சிலர், நாம் தேர்ந்தெடுத்த பழங்களை கறுப்புப் பாலிதீன் பைக்கு மாற்றும்போது, மேஜைக்கு அடியில் ஏற்கெனவே தயாராக இருக்கும் அழுகிய பழங்கள் கலந்த கறுப்பு பாலிதீன் பையை கண் இமைக்கும் நேரத்தில் மாற்றிக் கொடுப்பது.

அங்கேயே அந்தப் பையைப் பிரித்துப் பார்த்து பழங்களை வாங்கிச் சென்றால் ஏமாறாமல் இருக்கலாம் தோழிகளே!

- தேவி பழநி, சென்னை-40

சொல்லால் கொல்லாதீர்!

கணவனை இழந்த என் தோழி ஒருத்தி, பிள்ளைகளுடன் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறாள். சமீபத்தில் அவள் தெருவுக்கு குடிவந்த ஒரு பெண்மணி, நான்கு

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

பெண்களை வேலைக்கு அமர்த்தி தையல் தொழில் தொடங்கியிருக்கிறார். அதில் அனுபமுள்ள என் தோழி, அவரிடம் தன் நிலைமையைக் கூறி, வேலைக்கு அமர்த்திக் கொள்ளுமாறு வேண்டியிருக்கிறாள். அதற்கு அவர், ''திருமணம், சுபகாரியங்களுக்கு தைக்க வர்றவங்க எல்லாம் உன்னைப் பார்த்தா அபசகுனமா நினைப்பாங்க...'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். இதை அழுதுகொண்டே என்னிடம் தெரிவித்த தோழியிடம், ''அவங்கள விடு. நீ மகளிர் சுய உதவிக் குழுவுல சேர்ந்து, லோன் வாங்கி தொழிலைத் தொடங்கு. சீக்கிரமே நீ நாலு பேருக்கு வேலை கொடுப்ப பாரு...'' என்று தேற்றினேன்.

என்றுதான் திருந்துவார்கள் இப்படி சொல்லால் கொல்பவர்கள்?!

- என்.சந்திரா, கடலூர்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
-
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism