அதாவது, உங்களுடைய நடவடிக்கைகளை, உங்களது தங்கையின் செயல்பாடுகளாக பாவித்து உணருங்கள், உங்கள் பெற்றோரின் வேதனை புரியும். பிரியத்துக்குரிய பெற்றோர் சஞ்சலப்படும் கணத்தை கற்பனை செய்து பார்த்தால்... பருவ வயது தடுமாற்றங்கள் எல்லாம் பனிபோல விலகிவிடும்.
இந்த வயதில் தடுமாற்றங்கள் சகஜமானவையே; எவரும் வெளியே பகிர்ந்து கொள்வதில்லையே தவிர, எல்லோரும் கடந்து வரக்கூடிய இடர்பாடுகள்தான் இவை. ஒருவகையில் நம்மை செதுக்கும் அனுபவங்களில் இதுவும் ஒன்று என்பதாக முதிர்ச்சி கொள்ளுங்கள்.
விழித்துக் கொண்டால் மட்டும் போதாது. முழுமையாக விடுபட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் இடறாதிருக்க... மன உறுதி அவசியம். நல்ல நண்பர்கள், புத்தகங்கள், இசை, விளையாட்டு, படிப்பு, குடும்பத்தினருடம் நேரம் செலவழிப்பது, ஹாபி என்று திட்டமிட்டு உங்களை நீங்களே மடை மாற்றுங்கள். பாஸிட்டிவ் எனர்ஜிக்கு இறைவழிபாடு, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடலாம். உள் மனஅழுத்தம், தனிமையில் தவறான நினைவுகளால் குழப்பம், படிப்பு, பழக்க வழக்கங்களில் தடுமாற்றம் இவை தொடர்ந்தால்... உடனடியாக கவுன்சலிங் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம். தற்போது பெரும்பாலான கல்லூரிகளிலும் இதற்கென தனிப் பொறுப்பில் ஒரு கவுன்சலர் உள்ளார். அவரது உதவியையோ உங்களுக்கு நெருக்கமான ஆசிரியை உதவியையோ நாடலாம். எந்த வகையிலும் தனிமையை சிறிது காலத்துக்குத் தவிர்க்க முயலுங்கள்.
அவனை தவிர்க்க முயல்வதை வெளிப்படையாகக் காட்டிகொள்ள வேண்டாம். அவன் பலப்பிரயோக நடவடிக்கையில் இறங்காத வரையில் எதிரியாக பாவிக்கவும் வேண்டாம். ஏனெனில். இம்மாதிரி பேர்வழிகள் கெஞ்சலில் மசியாவிட்டால், மிஞ்சப் பார்ப்பார்கள். பிளாக்மெயில் அஸ்திரத்தை பிரயோகிக்கப் பார்ப்பார்கள். சந்திக்கத் தயாராக இருங்கள்.
எல்லாவற்றையும்விட, சில விஷயங்களில் எடுத்த எடுப்பிலேயே 'நோ' சொல்வதை பழகிக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வருத்தப்படலாம், நட்புக்கு இடையூறாகலாம் என்று நாம் தயங்கினால்... அதையே வசதியாக்கி நம்மை சிக்கலில் மாட்டிவிடுவார்கள். எனவே, வெற்றிகரமான வாழ்க்கைக்கு... சொல்ல வேண்டிய இடத்தில் 'நோ' சொல்வதும், கற்றுகொள்ள வேண்டிய முக்கிய கலையே!''
படிப்பு, வேலை வாய்ப்பு, கன்சல்டன்ஸி நம்பகத்தன்மை, நேர்காணல்கள், நுழைவுத் தேர்வுகள், அரசுப் போட்டித் தேர்வுகள், பகுதி நேர வேலை விவரங்கள், மாடலிங் வாய்ப்புகள், 'பியூட்டி கொர்ரி'க்கள், மனவியல் குழப்பங்கள், காதல் சிக்கல்கள், நட்பு துரோகங்கள், இணைய தளம் மூலமாக வரும் பிரச்னைகள்... என்று மாணவ சமுதாயத்தின் மனதில் எழும் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை தருகிறோம் இங்கே... விளக்கமாக! கேளுங்கள்... காத்திருக்கிறோம்!
|