Published:Updated:

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

Published:Updated:

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...
கு.ராமகிருஷ்ணன்
ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!
ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாமான்ய பெண்களின் சாதனை கதை (15)
"ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!"

த்தாவது படிக்கும்போதே திருமணம், கணவரின் தொழில் நலிவால் அறுநூறு ரூபாய் மாத சம்பளத்துக்காக எஸ்.டி.டி பூத்தில் நாள் முழுவதும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்... என உழன்றவர் கோமதி. தையல், கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு என தான் முட்டிப் பார்த்த எந்தத் தொழிலுமே கை கொடுக்காத நிலையில், மன உறுதியாலும், திறமையாலும் தற்போது கவரிங் செயின் டிசைனிங் தொழிலில் அவர் வெற்றி பெற்றிருப்பதை, 'சோதனைகளை சாதனைகளாக்கிய கவரிங்' என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்!

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

இத்தொழிலை தான் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், இதில் உள்ள சவால்கள், இத்தொழிலில் இறங்க நினைப்பவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை கோமதி தொடர்கிறார் இங்கு...

''எட்ட நின்னு பார்க்கறப்ப எல்லாத் தொழிலுமே லாபமாதான் தெரியும். அப்படித்தான் தையல், கம்ப்யூட்டர் சாம்பிராணினு இறங்கி, பாடம் கத்துக்கிட்டேன். 'இனியும் நம்ம உழைப்பை விரயமாக்கக் கூடாது'னு நிதானிச்சு வழிகளைத் தேடினேன். திருச்சியில நடந்த தொழில் முனைவோருக்கான ஆலோசனைக் கூட்டத்துக்குப் போனேன். அங்கதான் இருண்டு கிடந்த என் வாழ்க்கைக்கு அந்தப் பொண்ணு மூலமா ஒளி கிடைச்சுது...'' என்பவருக்கு கலங்கரைவிளக்கமாக வழிகாட்டியிருக்கிறார் மாற்றுத் திறனாளி ஒருவர்.

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

'' 'கவரிங் செயின் டிசைனிங் மூலமா தினமும் முந்நூறு ரூபா சம்பாதிக்கிறேன். என் குடும்பத்தையே நான்தான் காப்பாத்தறேன்'னு அந்தப் பொண்ணு சொன்னதக் கேட்டு, ஆச்சர்யப்பட்டுப் போனேன். 'நானே பண்றேன்னா, உங்களால முடியாதா?'னு அந்தப் பொண்ணு எங்கிட்ட கேட்டப்போ, ஒரு புது உத்வேகம் வந்துச்சு எனக்குள்ள. மூதலீடு, மூலப்பொருள், தொழில்நுட்பம், விற்பனைனு இதுல உள்ள இன்னும் பல விஷயங்களையும் தெரிஞ்சுட்டேன்'' என்ற கோமதி நம்பிக்கை ஊற்றெடுக்க, உற்சாகத்தோடு இத்தொழிலுக்கு ஆயத்தமாகி இருக்கிறார்.

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

''மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ ஒரு மாசம் பயிற்சி எடுத்தேன். திருச்சி, பாலக்கரையில இருக்கற இந்தியன் ஒவர்சீஸ் பேங்க்ல ஒரு லட்சம் ரூபா கடன் கேட்டு விண்ணப்பிச்சேன். மூணு மாசத்துல கடன் கிடைக்க, உடனடியா ரெண்டு மெஷின வாங்கிப்போட்டு தொழிலைத் தொடங்கினேன்.

சின்ன அளவுல இடமும், மெஷினும் இருந்தாலே போதும். விலை கொடுத்து மூலப்பொருள்னு எதுவும் வாங்க வேண்டியதில்ல. ஏன்னா, மொத்த வியாபாரிகள் நம்மகிட்ட செயினாவே கொடுத்துடுவாங்க. அதை மெஷின்ல டிசைன் கட்டிங் பண்ணிக் கொடுக்கணும், அவ்வளவுதான். ஒரு செயினுக்கு எட்டு ரூபாய் கிடைக்கும். திருச்சியிலேயே நிறைய மொத்த வியாபாரிகள் இருக்காங்க'' என்றவர்,

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

''ஆரம்பிச்ச புதுசுல ஒரு செயினுக்கு டிசைன் கட்டிங் பண்ணவே பல மணி நேரம் ஆகும். கழுத்து வலி படுத்தும். இன்னொரு பக்கம், கொஞ்சம்கூட கவனம்

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

சிதறக்கூடாது. மெஷின்ல இருக்கற வைர ஊசியில ஒரு சின்ன சேதம் ஏற்பட்டாலே ரெண்டாயிரம் ரூபாய் போச்சு. அந்த நஷ்டமும் எனக்கு ஏற்பட்டிருக்கு. 'எப்படி சமாளிக்கப் போறோம்'னு அப்பப்ப கவலை வந்தாலும் கூட, ஒரு நாள் கூட இடிஞ்சு போய் உட்கார்ந்தது இல்ல. என் மேல எனக்கிருந்த நம்பிக்கைதான் உறுதியோட தொடர்ந்து உழைக்க வெச்சுது'' என்பவருக்கு... அடுத்த சில மாதங்களிலேயே திறமையும் வேகமும் அதிகரிக்க, இத்தொழிலில் நிறைவான வருமானம் கிடைக்கத் தொடங்கிஇருக்கிறது.

''தினம் 70 செயினுக்கு டிசைன் கட்டிங் பண்ற அளவுக்கு என்னை வளர்த்துக்கிட்டேன். இன்னொருத்தர் இருந்தா... இன்னும் வசதியா இருக்குமேனு வேலைக்கு ஒரு ஆள் போட்டேன். சேதாரமாகற கவரிங் தூள் மூலமாவும் கூடுதலா ஒரு சின்ன வருமானம் கிடைச்சுது. வாடகை, கரன்ட் பில் இதையெல்லாம் அதுலயே சமாளிச்சுட்டேன். இப்ப மூணாவதா இன்னொரு மெஷின் வாங்கியிருக்கேன். எல்லாச் செலவும் போக, மாசம் பதினஞ்சாயிரம் ரூபாய்க்கு குறையாம லாபம் கிடைக்குது. எஸ்.டி.டி. பூத்ல வேலை பார்த்தப்போ, 'இந்த அறுநூறு ரூபா காசுக்கு யாருக்கோ நாள் முழுக்க உழைச்சுக் கொடுக்கறதுக்கு, வீட்டுலயே ஏதாச்சும் தொழில் செஞ்சு நமக்காக உழைச்சா என்ன?'னு நான் துணிஞ்சதுக்கு, பலன் கிடைச்சிருச்சு!''

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!

- துணிவோடு கால் வைத்து, வெற்றி கண்டதன் பெருமிதம் கோமதியின் வார்த்தைகளில்!

ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!
- சாதனைகள் தொடரும்...
படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக், கே.குணசீலன்
ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!
ஒரு செயினுக்கு எட்டு ரூபாய்... ஒரு நாளைக்கு 70 செயின்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism