Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

நமக்குள்ளே...
-
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே ....

கோவை சம்பவம் உண்டாக்கிய காயத்தில் நம்மில் பலர், தீபாவளியை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாகக் கொண்டாடினோமோ..?!

இறந்துபோன பிஞ்சுகளின் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, நெஞ்சு கனத்து, கண்களில் பலருக்கு நீரருவி! எப்படியரு அரக்கத்தனம் பண்ணியிருக்கிறார்கள் அந்த இரண்டு பேரும்!

வீட்டில் தனித்திருக்கும் இல்லத்தரசிகள்... நல்லவர், கெட்டவர் யாரென்று அறியாத சின்னக்குழந்தைகள் ஆகியோர்தான் பகல் கொடுமைக்காரர்களின் முக்கிய இலக்கு!

கேஸ் சிலிண்டர் போட வருபவரில் ஆரம்பித்து, கேபிள் வசூல்காரர் வரையில் யாரை எந்த எல்லையோடு நிறுத்திப் பேச வேண்டும் என்று காவல்துறை ஏற்கெனவே எச்சரிக்கை தந்திருக்கிறது. அதோடு, டிரைவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தையும் சேர்க்க வைத்திருக்கிறது கோவை சம்பவம்.

'இதில் சம்பந்தப்பட்டிருப்பது... ஒரு முன்னாள் டிரைவர். இதற்கு முன்பு பணத்துக்காக குழந்தைகளைக் கடத்திய பல சம்பவங்களிலும் முன்னாள் டிரைவர்கள் சம்பந்தப்பட்டிருந்தார்கள்' என்று ஒரு போலீஸ் அதிகாரி சுட்டிக்காட்டியபோது, 'அதானே' என்று அதிர்ச்சியாக இருந்தது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்போ..?!

குடும்ப ரகசியங்களையெல்லாம் நீங்கள் பேசிக் கொண்டிருக்க... கார் டிரைவர் தன் காதைத் தூக்கிப் பின் ஸீட்டில் போட்டிருக்கலாம். சுலபமான வாய்ப்பு வருகிறபோது, நல்ல மனம்கூட சபலப்படுவது மனித இயற்கை.

நடுத்தரக் குடும்பங்கள்கூட, கடன் வாங்கி கார் வாங்கும் காலம் இது. எனவே, டிரைவர்கள் விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கத்தான் வேண்டும்.

இதுதான் இந்த நேரத்தில் அவசரமாக... அவசியமாக... உங்களோடு பரிமாறிக் கொள்ள வேண்டிய தகவலாக தோன்றியது.

உரிமையுடன் உங்கள்

நமக்குள்ளே ....

ஆசிரியர்

நமக்குள்ளே ....
-
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism