Published:Updated:

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

Published:Updated:

இனி எல்லாம் சுகப்பிரசவமே! (17)
ரேகா சுதர்சன்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படுத்துக் கொண்டே பால் கொடுக்கிறீர்களா... உஷார்!
பாரம்பரியத்தைப் புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்! (17)

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

சென்ற இதழில் நான் குறிப்பிட்ட தாய்ப்பால் சுரக்கச் செய்யும் மேஜிக் ஃபுட் உங்களுக்கு மறந்திருக்காது. அதேபோல, இந்த இதழில் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதை சுலபமாக்கும் மேஜிக் டெக்னிக்ஸ் பற்றிப் பார்ப்போம்!

இதற்கு இரண்டு முக்கியமான முறைகள் உள்ளன. முதலாவது... தாய்ப்பால் தரும்போது குழந்தையின் வயிறும் தாயின் வயிறும் ஒட்டினாற்போல் இருப்பது. இப்படி பால் புகட்டுவதால் குழந்தை, தாயின் அரவணைப்பை உணரும்.

இரண்டாவது... குழந்தையின் நாசி, மார்பகக் காம்புக்கு மேல் பகுதியில் இருப்பது. இதன் மூலம் குழந்தை, தன் தாயின் வாசனையை உணர்வதுடன், அதன் பால் குடிக்கும் எண்ணம் தூண்டப்படும்.

அடுத்ததாக, குழந்தைக்குப் பால் கொடுக்கும் சரியான பொஸிஷன்கள் பற்றிப் பார்ப்போம்.

பிறந்த குழந்தைக்கு பால் புகட்ட ஆரம்பிக்கும் நாட்களில், முதுகுப் பகுதியை வளைக்காமல் நேராக அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும். மடியில் ஒரு அடர்த்தியான துணியையோ, அல்லது மிருதுவான தலையணையையோ வைத்து, அதன் மேல் குழந்தையை வைத்துக் கொள்ளலாம். இடது பக்க மார்பில் பால் புகட்டும்போது இடது கையால் குழந்தையின் முதுகு, தலையைத் தாங்கிக்கொண்டு, வலது கையைப் பயன்படுத்தி பாலைப் புகட்ட வேண்டும் (படம் 1). வலது மார்பில் பால் கொடுக்கும்போது, கைகளை அப்படியே மாற்றிக் கொள்ள வேண்டும். இதை 'கிரெய்டில் ஹோல்ட்' (Cradle hold) முறை என்பார்கள். இது ஆரம்ப நாட்களுக்கான சரியான முறை.

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

அடுத்தது, 'கிராஸ் கிரெய்டில் ஹோல்ட்' (Cross-cradle hold) முறை. இம்முறையில் இடது பக்க மார்பில் பால் புகட்டும்போது வலது கையால் குழந்தையின் தலையையும் முதுகையும் பிடித்துக் கொண்டு இடது கையைப் பயன்படுத்தி பாலைப் புகட்ட வேண்டும் (படம் 2). வலது மார்பில் பால் கொடுக்கும்போது, கைகளை அப்படியே மாற்றிக் கொள்ள வேண்டும். இதை தாய்ப்பால் புகட்டுவதற்கான சரியான, சிறந்த முறை என்று சொல்லலாம்.

தாய்க்கு வயிற்றில் வலி இருந்தாலோ, சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற தாயாக இருந்தாலோ அவர் பின்பற்ற ஏற்றது... மூன்றாவது முறையான 'ஃபுட்பால் ஹோல்ட்' (Football hold). இம்முறையில் குழந்தையை இடுப்புப் பகுதியையொட்டி பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, இடது கையால் குழந்தையின் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு இடது மார்பகத்தில் பால் புகட்ட வேண்டும் (படம் 3). வலது மார்பில் பால் கொடுக்கும்போது, கைகளை அப்படியே மாற்றிக் கொள்ள வேண்டும்.

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

இந்த மூன்று முறைகளையும் வழக்கமாக்கிக் கொண்டால், பால் புகட்டும் அனுபவம் தாய்க்கும், சேய்க்கும் சுலபமானதாக அமைந்துவிடும்.

சமயங்களில் படுத்துக் கொண்டே பாலைப் புகட்டும் தாய்மார்களும் உண்டு (படம் 4). இதை 'லையிங் டௌன்' (Lying down) முறை என்பார்கள். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், தாய் 'அலர்ட்'டாக இருக்கும்போது மட்டுமே இப்படி படுத்துக் கொண்டே பால் புகட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்திலோ, சோர்வான நேரங்களிலோ இம்முறையில் பால் தருவது கூடாது.

இப்படிப் படுத்துக் கொண்டே பாலைப் புகட்டும்போது தாய் ஒருவேளை அயர்ந்துவிட்டால், பால் வழிந்து குழந்தையின் காது, மூக்கு துவாரத்தில் செல்வதற்கான வாய்ப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.

ஒவ்வொரு முறை தாய்ப்பால் புகட்டும்போதும், அந்தப் பெண் எந்த அவசரமும் பதற்றமும் இன்றி அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும். தன் குழந்தையின் சின்ன வயிற்றுக்கு, தான் உணவிடும் அந்த திருப்தியை உணர்ந்து ரசிக்க வேண்டும். அது குழந்தைக்கும் தாய்க்குமான நெருக்கத்தை அதிகரிக்கும்; தாய்க்கு தாய்ப்பால் சீராக சுரக்கவும், குழந்தை எந்த சிக்கல்களும் இல்லாமல் தனக்குத் தேவையான பாலை குடிக்கவும் உண்டான சூழலை உருவாக்கும்.

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

உலக சுகாதார நிறுவனம், குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம்... வேறு எந்த இணை உணவும் சாப்பிடாத முதல் ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் தருவது அவசியம், முக்கியம்.

சரி, பால் புகட்டும் முறைகள், பொஸிஷன்கள் பார்த்தோம். 'குழந்தைக்கு எத்தனை மணி நேர இடைவெளியில் பால் புகட்டுவது', 'மெட்டர்னிட்டி லீவ் முடிந்து வேலையில் சேரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறதே... காலை, மாலை என தாய்ப்பால் கொடுக்கும் தவணைகளை எப்படி படிப்படியாக குறைப்பது', 'குழந்தைக்கு தாய்ப்பாலை மறக்கடிக்கும் காலம் வந்துவிட்டது... அதை எப்படி முறைப்படி செய்வது...'

அதையெல்லாம் தெரிந்து கொண்டு...

 

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
- அடுத்த இதழில் விடைபெறுவோம்...
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism