Published:Updated:

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

Published:Updated:

டியர் டாக்டர்
மருத்துவம்
டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?
டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?"

''கடைவாய்ப் பல் சொத்தை காரணமாக, சில ஆண்டுகளாகவே மிகுந்த அவதியுற்று வருகிறேன். சொத்தைப் பல்லை அகற்றிவிடுவது நலம் என்று தோணுகிறது. கூடவே, 'இத்தனை நாட்களாக அந்தப் பல்லால் எந்தப் பயன்பாடும் இல்லை. மீண்டும் அங்கு இன்னொரு பல் பொருத்தத்தான் வேண்டுமா... அப்படியே சமாளித்துவிடலாமே' என்றும் தோன்றுகிறது. தெளிவுபடுத்துங்கள் டாக்டர்...''

டாக்டர் செந்தில்குமார், பற்கள் பாதுகாப்பு மற்றும் வேர் சிகிச்சை நிபுணர், சென்னை

''குளிர்ச்சியான, சூடான, இனிப்பு மற்றும் புளிப்பான உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது பல் கூச்சம் ஏற்படுவது, பல்லின் நிறம் மாறி இருப்பது, வலி போன்றவை பல் சொத்தை உள்ளிட்ட பல் பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறிகள். தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, சொத்தையை அகற்றி பல் இழப்பைத் தடுக்க முடியும். சொத்தை எந்த ஆழத்துக்குப் பரவியிருக்கிறது என்பதைக்

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

கண்டறிந்து, நிலைமையைப் பொறுத்து பதினைந்து நிமிட சிகிச்சையில் சொத்தையை அகற்றிவிடலாம். அந்த இடத்தில் ஏதேனும் பற்குழி இருப்பின், அதையும் பற்கள் நிறத்திலேயே நிரப்பிவிடவும் முடியும்.

சொத்தை பாதிப்பின் வீரியம் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தால், சிகிச்சையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லலாம். வேர் வரை விரவிய சொத்தைக்கு, பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து பற்களை எடுக்காமல், வேர் சிகிச்சை மற்றும் சொத்தையை அகற்றுதல் மூலம் பல்லை காப்பாற்ற வாய்ப்புண்டு. சொத்தையால் பலவீனமான பல்லின் மேற்பகுதியை 'கேப்பிங்' (Capping) முறையில் செராமிக் அல்லது மெட்டல் பொருட்களை கொண்டு ஈடு செய்யலாம். இந்த வகையில் பல்லின் ஆயுளை 10

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?

முதல் 15 வருடத்துக்கு நீட்டிக்கச் செய்யலாம். ஆக, பெரும்பாலும் பற்களை அகற்றுவதை தள்ளிப் போடுவதே நல்லது. ஒருவேளை தவிர்க்க முடியாமல் பல்லை அகற்ற வேண்டியது வந்தாலும், அந்த இடத்தில் மாற்றுப் பல்லின் அவசியம் உங்களுக்கு பெரிதாக இல்லாது போனாலும்... அருகிலிருக்கும் மற்ற பற்களின் ஸ்திரத்தை கவனத்தில் கொண்டேனும் அங்கு செயற்கை பல்லை நிறுவ வேண்டியது அவசியம்.

உதாரணமாக, கீழ் தாடையில் பல் அகற்றப்பட்ட வெற்றிடத்துக்கு நேர் மேலிருக்கும் மேல் தாடைப் பல்லானது நாள் போக்கில் தனது வேரின் பிடிப்பை இழக்கத் துவங்கிவிடும். மேலும் அகற்றப்பட்ட பல்லின் காலியிடத்துக்கு இருபுறத்திலிருக்கும் பற்கள், தம் இருப்பிடத்திலிருந்து சற்றே சாய நேரிடும். இதனால் பற்களுக்கிடையே அநாவசிய இடைவெளியும்... அதனால் பற்களின் சீரமைவும் குலையும். இவற்றோடு அந்த இடைவெளியில் உணவுப் பொருட்கள் சேகரமாகி, பக்கத்து பற்களின் சொத்தைக்கும், ஈறு நோய்களுக்கும் காரணமாகும். எனவே, பல் எடுத்த ஒரு மாத இடைவெளிக்குள் மாற்றுப்பல் பொருத்திக் கொள்வதும் அவசியம்''.

"ஆரோக்கியம் குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தருகிறார்கள். கேள்விகளை 'டியர் டாக்டர்' என்ற தலைப்பிட்டு, 'அவள் விகடன்' முகவரிக்கு அனுப்புங்கள். மருத்துவப் பதிவுகள் எதையும் சேர்த்து அனுப்ப வேண்டாம். 

டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?
-
டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?
டியர் டாக்டர் - சொத்தைப் பல்லுக்கு மாற்றுப் பல் அவசியமா?
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism