Published:Updated:

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர் (3)
சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி

லுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைகிறாள் தேன்மொழி. 'சுட்டி டி.வி'யில் 'ஜாக்கி சான்' பார்த்துக் கொண்டிருந்த குட்டிப் பாப்பா கவின்மலர், ''ஹை... எங்கம்மா வந்துட்டாங்களே!'' என்று ஆசையுடன் கத்திக்கொண்டே தத்துப்பித்து செல்ல நடையில் ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறாள்.

இந்த அழகான காட்சி, குழந்தைகள் இருக்கும் வீடுதோறும் அரங்கேறுவதுதான். ''என் குழந்தைகூட அப்படித்தான். எவ்வளவு பாசமா ஓடி வருவான் தெரியுமா..?'' என்று அகமகிழ்ந்து கொள்பவர்களுக்கு, ஒரு தகவல்... பாசத்தைவிட, அந்தக் குழந்தையின் மூளைதான் அது ஓடி வந்து உங்களை கட்டிக் கொள்வதற்கு முக்கிய காரணம்! மனித மூளை என்பது ஆயிரம் அற்புதங்களை அடக்கிய பிரமிப்பான விஷயம். அந்த மூளைதான், தான் தங்கியிருக்கும் மனதும் 'எப்படி செயல்பட வேண்டும்?' என்பதைத் தீர்மானிக்கிறது.

அறிவியல் தகவல்களுடன் பார்ப்போம். பாப்பாவுக்கு அம்மாவைப் பார்த்ததும் ஓடிச் செல்ல வேண்டும் என்று யார் கற்றுக் கொடுத்தார்கள்?

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

''அம்மா வந்துட்டாங்க... ஓடுடா'' என்று பாட்டியோ, தாத்தாவோ சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே, 'பார்த்து ஓடும்மா' என கட்டளையிட்டது அவளது மூளைதான். அந்த மூளைதான் பாப்பாவுக்கு, 'அம்மாவிடம் இப்போது போகலாமா, வேண்டாமா?' என்ற பகுத்தறியும் திறனையும் (Cognitive Development), 'என் அம்மானா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்' என்ற சமூகமாகும் குணத்தையும் (Social Development), அம்மாவைப் பார்த்ததும் மனதுக்குள் பொங்கிய சந்தோஷ உணர்வையும் (Emotional Development), 'கோபமாக ஓடுவதா... அழுதுகொண்டே ஓடுவதா' என்ற உணர்ச்சி இயல் நிலையையும் (Temperament Development) தீர்மானிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அம்மாவைப் பார்த்தவுடன், ''அண்ணா, ஒரு பெரிய கம்பால என்னை அடிச்சுட்டாம்மா'' என்று ஒரு விஷயத்தை பிசகாமல் அப்படியே சொல்லும் மொழி மற்றும் தகவல் பரிமாற்றத்தையும் (Language and communication Development), தன் உடல் மற்றும் பாலியல் அறிவையும் (Psychosexual) சரியாகக் கொடுத்து வளர்ப்பது மூளைதான் என்பது எத்தனை பெரிய ஆச்சர்யம்!

'அப்படின்னா, குழந்தைங்களோட பழக்க வழக்கங்களுக்கும், திறமைகளுக்கும் மூளை மட்டுமேதான் காரணமா?' ஒரு கேள்வி எழலாம். இல்லை, இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது, மரபு!

''எங்க பாட்டி அழகம்மா, ரொம்ப அருமையா பாடுவாங்க. எனக்கு பாட்டுனாலே அலர்ஜி. ஆனா, என் ரெண்டாவது பொண்ணு சுஜி குட்டி நடந்தா, உட்கார்ந்தா, நின்னா... எப்பவும் பாட்டு, பாட்டு, பாட்டுதான். குரலும் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்'' என்று எத்தனை அம்மாக்கள் பெருமைப்பட்டிருப்பீர்கள்!

''எங்க மாமனார் மேத்ஸ் டீச்சர். ஆனா என் ஹஸ்பண்ட்டுக்கு சிம்பிள் அல்ஜீப்ரா கணக்கைகூட என் பையனுக்கு ஒழுங்கா சொல்லித் தரத் தெரியல'' என்று புலம்பும் அம்மாக்களும் இருப்பீர்கள்.

நம் முன்னோர்களிடம் இருந்த மேதமையான படிப்பு, அற்புதமான குணம், ஆச்சர்யமான நடத்தை, அலாதி நிறம், பாராட்டப்படும் திறமைகள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கோ, அதற்கடுத்த தலைமுறைக்கோ வழிவழியாக வந்தால்... அதற்குக் காரணம் ஜீன்களின் மரபுத்தன்மை. இந்த மாதிரி விஷயங்களை தலைமுறை தலைமுறையாகக் கடத்துவதை, 'மல்டிபிள் ஜீன் அஸார்ட்மென்ட்' என்கிறது மருத்துவம். உங்கள் குழந்தையிடம் கண்டிப்பாக இப்படி மரபு வழியாக வரும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நிறைய இருக்கும். நிறைய நேரம் எடுத்து அக்கறையுடன் ஆராய்ந்து பாருங்கள்; உங்கள் கண்ணுக்குப் அவை புலப்படும்.

தாத்தா - பாட்டி, அம்மா - அப்பாவிடம் இருக்கும் திறமை குழந்தைக்கு வரலாம். ஆனால், அந்தத் திறமையை வளர்ப்பதற்கு, அதனை முன்னெடுத்து செல்வதற்கு வெறும் ஜீன் மட்டும் காரணமாக இருக்க முடியாது!

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

''என் மாமனார் ஒரு பெரிய எழுத்தாளர். அப்போ என் பையனும் கிரியேட்டிவ் ஃபீல்டுல ஆர்வமா வருவானா..?'' என்று கேள்வியுடனும் கனவுடனும் அலைந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது... அதற்காக மெருகேற்றலும் அவசியம்.

ஒரு மல்லிகை அரும்பு மொட்டாவதற்கும் அழகிய பூவாவதற்கும் தினம் தினம் தண்ணீர் விட வேண்டும்; நல்ல காற்றும் சூரிய ஒளியும் கிடைக்க வேண்டும்; சத்தான உரமிட வேண்டும். அப்போதுதான் அது கண்ணுக்கு அழகாகப் பூத்து சிரிக்கும்; மனம் மயக்கும்; வாசம் வீசும்! ஒரு பூவுக்கே இத்தனை அக்கறையும் கவனிப்பும் தேவைப்பட்டால்... உங்கள் வீட்டுச் செல்லம் வளர, பூத்துக் குலுங்க, சாதிக்க, வெறும் மூளை மற்றும் ஜீன் மட்டும் காரணமாக இருக்க முடியுமா..?

உங்கள் பாந்தமான, பண்பான, பொறுப்பான, அக்கறையான வளர்ப்பும் காரணமாக... தூண்டுகோலாக அமைய வேண்டுமா... இல்லையா..?!

 

சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
-வளர்ப்போம்...
படங்கள் என்.விவேக்
மாடல் சுஹானா விஜயகுமார்
சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
சிகரம் நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism