Published:Updated:

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

Published:Updated:

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர் (3)
இர.வரதராஜ்
ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்
ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

''நான் ஒரு ஹவுஸ் வொய்ஃப். நெட் சாட்டிங்ல எனக்கு ஃப்ரெண்டான ஒருத்தரை, ஒரு 'மால்'ல மீட் பண்ணி, அவர்கூட டேட்டிங் போனேன். அதை யாரோ வீடியோ எடுத்து வெச்சுட்டு, 'உன் ஹஸ்பண்ட்கிட்ட கொடுக்கவா?'னு என்னை போன் மேல போன் பண்ணி மிரட்டுறாங்க. சாட் ஃப்ரெண்டுக்கும் அது யாருனு கணிக்கத் தெரியல. என் வாழ்க்கையை காப்பாத்துங்க...''

- அழுது அரற்றியபடி எங்களிடம் வந்த பெண்ணின் வாழ்க்கையில் நிம்மதியை மீட்க, எங்கள் டீம் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது.

முதல் கட்டமாக, செல்போன் தொந்தரவைத் தடுக்க அந்தப் பெண்ணிடம், ''உங்க கணவர்கிட்ட, செல்போன் தண்ணியில விழுந்து, சிம்கார்டு செயலிழந்துடுச்சுனு சொல்லி ஒரு புது சிம்கார்ட் வாங்கிக்கோங்க'' என்றோம். அவரும் அப்படியே செய்தார். ஆனால், இரண்டாவது நாளே அலறியடித்துக் கொண்டு ஓடி வந்த அந்தப் பெண், ''யாரோ என் எதிர் வீட்டுல வந்து ஒரு சி.டி-யைக் கொடுத்து, அதை எங்கிட்ட கொடுக்கச் சொல்லி இருக்காங்க. போட்டுப் பார்த்தா, நானும் என் சாட்டிங் நண்பரும் நெருக்கமா சுற்றின காட்சிகள்'' என்றார் பதற்றத்துடன்.

அந்த சி.டி-யில் ஒரு ஆண் குரலும் பதிவாகியிருந்தது, ''சிம் கார்டை மாத்திட்டா, விட்டுருவேனா? சி.டி. உன் வீட்டுக்காரர் கைக்கு போகாம இருக்கணும்னா, எனக்கு ஒன்றரை லட்சம் ரூபா வேணும்'' என்று மிரட்டல் தொனியில்.

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

இந்தப் பெண்ணுக்கு மிரட்டல் கால்கள் வந்த அத்தனை செல் நம்பர்களின் முகவரிகளும், போலியான முகவரிகளாக இருந்ததால், அவனை எங்களால் நெருங்க முடியவில்லை. பின் அந்தத் தோழியின் 'சாட்டிங்' நண்பர் பக்கம் விசாரணையைத் திருப்பி, மதுரைக்காரரான அவரை அணுகினோம்.

''நானும் குழப்பத்துல, பயத்துலதான் இருக்கேன். அது யாருனு எனக்கும் தெரியல'' என்று அவர் சொன்னபோதும், அவரின் செல்போன் மற்றும் கம்ப்யூட் டரை சோதனை செய்தோம். எந்த வீடியோவும் சிக்கவில்லை.

''நீங்க சந்திக்கப்போற விஷயம் வேற யாருக்காச்சும் தெரியுமா..?'' என்று கேட்டபோது, சற்று யோசித்தவர், ''என் ரூம் மேட்கிட்ட எனக்கு சென்னையில ஒரு சாட் ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கறதா சொன்னேன். நான் சென்னைக்கு கிளம்பினப்போ, 'அவளைப் பார்க்கப் போறேன்'னும் அவன்கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஆனா, நாங்க சந்திச்ச நாள்ல அவன் மதுரையிலதான் இருந்தான். அதனாலதான் எனக்கு அவன் மேல சந்தேகம் வரல'' என்றவரிடம், ''இப்போ அவன் எங்க..?'' என்றோம். ''சொந்த கிராமத்துக்கு திருவிழாவுக்கு போறதா சொல்லிட்டுப் போயிருக்கான்'' என்றார்.

ஆனால், அவரிடம் அவனின் செல்போன் நம்பர் வாங்கி, மொபைல் டவரை வைத்து அவன் சென்னையில் இருப்பது தெரிந்தது. அவனை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, கக்கினான் உண்மையை!

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

''என் ஃப்ரெண்டு சாட்டிங்ல பழகிய பெண்ணை சந்திக்கப் போறான்னு தெரிஞ்சதும், சென்னையில இருக்கற என்னோட இன்னொரு ஃப்ரெண்டுகிட்ட விஷயத்தைச் சொல்லி, அவனை வீடியோ எடுக்கச் சொன்னேன். பணம் சம்பாதிக்கணும்ங்கிற ஆசையிலதான் இப்படி செஞ்சேன்...'' என்றவனைக் கண்டித்து, அவன் செல்போனிலிருந்த வீடியோ பதிவுகளைக் கைப்பற்றினோம்.

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

''நான் மட்டுமா குற்றவாளி? வீட்டுக்காரருக்குத் தெரியாம முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆணை சந்திக்கப் போன அந்தப் பெண்ணும்தானே..?'' என்றான் அவன் பதறாத குரலில்.

சாட்டிங் விபரீதத்தால் தன் வாழ்க்கையையே தொலைக்கப் பார்த்த அந்தப் பெண்ணும், தவறை ஒப்புக்கொண்டார். இப்போது குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கிறார்.

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

ஆக்கப்பூர்வமாக அணுகினால், 'சாட்டிங்' அழகிய பேனாவாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு உங்கள் பர்சனல் வாழ்க்கையை அந்தப் பொது இடத்தில் வைத்தால், அது உங்களைக் காயப்படுத்தும் ஒரு மோசமான ஆயுதமாகிவிடும் என்பதற்கு இந்தப் பெண்ணின் கதையே சரியான உதாரணம்!

அடுத்து, நீங்கள் சந்திக்கப்போவது... வில்லங்க வலை விரிக்கும் 'வெப் கேமிரா'!

உஷார்!

'டிரக் அடிக்ஷன்' போல, 'சாட்டிங் அடிக்ஷன்' என்பதும் இப்போது இணைய உலகில் வேகமாக பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த போதையில் மூழ்கும் பெண்கள், எப்போதும் யாருடனாவது 'சாட்' செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் 'சாட்' செய்வதில், முகம் தெரியாத ஆண்கள் அதிகம். அப்படித்தான் சிக்கிக் கொள்கிறார்கள் வம்பு வலையில், இந்தக் கட்டுரையில் பார்த்த பெண்ணைப் போல.

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

முன் பின் தெரியாத ஆணுடன் மட்டுமல்ல, பெண்ணுடனும் சாட் தொடர்பு வேண்டாம். பெண்கள் பெயரில் பல ஆண்கள் உலவுகிறார்கள் என்பது, அதிர்ச்சியான உண்மை. வடஇந்தியாவில் பள்ளிச் சிறுமிகள் பலர் இந்த பெயர் மாற்ற புதை குழிக்குப் பலியான கதைகள் ஏராளம்.

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்

வீட்டில் இருக்கும் டீன் பிள்ளைகளை இரவு 10 மணிக்கு மேல் கம்ப்யூட்டர் முன் உட்கார அனுமதிக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாமல் அவர்கள் கம்ப்யூட்டரில் ஏதோ செய்வதாக நீங்கள் சந்தேகப்பட்டால், அவர்கள் 'சர்ஃப்' செய்யும் இணையப் பக்கங்களை கண்காணித்து உங்களுக்குச் சொல்லும் ரகசிய மென்பொருளை (spy software) கம்ப்யூட்டரில் பொருத்துங்கள். அவர்கள் யார் யாருடன் சாட் செய்கிறார்கள், எப்படிப்பட்ட பழக்கம் அது என்று அத்தனை விவரங்களும் ஒரு ஃபோல்டரில் பதிவாகிவிடும். தவறு நேர்வது தெரிந்தால், பக்குவமாக எடுத்துச் சொல்லித் திருத்துங்கள்!''

 

 

 

ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்
-திகில் பரவும்...
ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்
ஆபத்துகளை அடையாளம் காட்டும் 'அலர்ட்' தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism