Published:Updated:

உயிர்களை உரசும் தொடர்

உயிர்களை உரசும் தொடர்

உயிர்களை உரசும் தொடர்

உயிர்களை உரசும் தொடர்

Published:Updated:

சொந்தங்களே...
உயிர்களை உரசும் தொடர்
மேனகா காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிர்களை உரசும் தொடர்
உயிர்களை உரசும் தொடர்
உயிர்களை உரசும் தொடர் (3)

நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு டாக்குமென்டரி சினிமா பார்த்தேன். அதில், பிராணிகளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் அசாதாரண திறன் படைத்த ஒரு பெண் பற்றிக் காட்டினார்கள். சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை ஊர்களிலிருந்தும் தங்கள் வீட்டுப் பிராணிகளை இவளிடம் கொண்டு வந்து காட்டி, அவை பற்றிய சிக்கல்களுக்கு விடைதேடிச் சென்றதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது!

சிறுவன் ஒருவன் தன் ஆட்டுக் குட்டியைக் கொடுத்து, ''போன வாரம் இதை என் நண்பனிடமிருந்து வாங்கினேன். என்னிடம் வந்ததிலிருந்து சண்டித்தனம் செய்கிறது...'' என்று புகார் செய்தான் அந்தப் பெண்ணிடம்.

வாஞ்சையாக தான் தடவிக் கொடுத்தபோது, அதற்குக் கட்டுப்பட்டுக் கிடந்த அந்தக் குட்டியை முத்தமிட்ட அந்தப் பெண், ''உன் வீட்டில் பெண் ஆடு ஒன்று இருக்கிறதா?'' என்றாள். ''ஆம்...'' என்றான் அந்தப் பையன். ''அதைக் கவர்வதற்காகத்தான், இவன் இப்படியெல்லாம் செய்கிறான்!'' என்று புரிய வைத்தாள் அந்தப் பெண்!

நாமும் நம் பிராணிகளைப் புரிந்து கொள்வது மிகமுக்கியம்! அதற்குத் தேவை... ஆர்வமும் அக்கறையும்! நீங்கள் உங்கள் செல்லப் பிராணிகளை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால், அவை வெளிப்படுத்த நினைக்கும் எண்ணங்களை புரிந்துகொள்ள, தயவுசெய்து முயற்சியாவது செய்யுங்கள். இத்தனை ஆண்டுகளாக நாய்களுடன் பழகிய என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்ட ஒரு சில விஷயங்களைச் சொல்வது, உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

'இது என் ஏரியா... உள்ளே வராதே' என்று சொல்ல, பிராணிகள் தங்கள் எல்லையை சுற்றி 'சூச்சூ' (சிறுநீர்) போகும். நாய்களும் இந்தப் பழக்கத்துக்கு விதிவிலக்கல்ல. ஒரே வீட்டில் இரண்டு நாய்கள் இருந்தால், ஒரு நாய் குறிப்பிட்ட ஒரு இடத்திலேயே சூச்சூ போனால், 'இந்த இடம் உன்னுடையது அல்ல. என்னுடையது' என்று அர்த்தம். பெண் நாய், பக்கத்தில் ஒரு ஆண் நாய் சூச்சூ போனால், 'இவள் என்னுடையவள்' என்று அர்த்தம். புதிதாக சோஃபா, நாற்காலி என்று எதை வாங்கி வந்தாலும்... சில நாய்கள் அவற்றின் மீது உடனே சூச்சூ போகும். இதற்கு என்ன அர்த்தம் என்று இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

நாய்களுக்குத் தனிமை பிடிக்காது. சேர்ந்து விளையாட அவற்றுக்குக் 'கம்பெனி' தேவை. எப்போதும் கட்டிப்போட்டே வைத்திருந்தால், அந்த கோபத்தில் அவை சதா குறைத்துக் கொண்டே இருக்கும். சில நாய்கள் போரடிக்கும் போதெல்லாம் தங்களைத் தாங்களே கடித்துக் காயப்படுத்திக் கொள்ளும் ஆபத்துக்கூட இருக்கிறது. எனவே, வெளியே வாக்கிங் கூட்டிப்போவது, அதோடு விளையாடுவது போன்றவை அவசியம்.

ஒருவேளை, உங்கள் நாயோடு உங்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றால்... அதற்கு ஒரு ஃப்ரெண்டை கொண்டு வாருங்கள். இரண்டு நாய்கள் வளரும் இடத்தில் இந்த போரடிக்கும் பிரச்னை வராது. ஆனால், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

உங்கள் நாய் மூப்படைந்து கடைசி காலத்தில் இருந்தாலோ, அல்லது நோய் வாய்ப்பட்டிருந்தாலோ அந்த நேரத்தில் வீட்டுக்கு ஒரு புதிய நாயை கொண்டு வராதீர்கள். ஏனெனில், அதனால் தனது முக்கியத்துவம் குறைந்து போனதாக அது விரக்தியடைந்துவிடும்.

அதேபோல, எடுத்த எடுப்பிலேயே புதிய நாயை வீட்டுக்குள் கொண்டு வராமல், கொஞ்ச நாட்களுக்கு மொட்டைமாடி, தோட்டம் என்று பொதுவான ஒரு இடத்தில் வைத்திருங்கள். பழைய நாயும் புதிய நாயும் ஃப்ரெண்ட் ஆனபிறகு அதை வீட்டுக்குள் கொண்டு வருவதுதான் நல்லது. அப்படி வந்த பின்னாலும்கூட நீங்கள் புதிய நாயிடம் மட்டுமே விளையாடினால்... அதிக அக்கறை செலுத்தினால்... பழைய நாய் மனமுடைந்துபோகும். உங்கள் கட்டளைகளை ஏற்காது. மூலையில் சுருண்டு கொள்ளும். ஒருவேளை, புதிய நாயை பழைய நாய் அடக்கி ஆள முயற்சி செய்தால்கூட, கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்.

உங்கள் செல்ல நாய் ஏதாவது தவறு செய்தால், அதை நீங்கள் கண்டீப்பீர்கள் இல்லையா..? அது போன்ற நேரங்களில் அது முகத்தை திருப்பிக் கொண்டு உங்களை நோக்கி கை குலுக்குவது மாதிரி ஒரு முன்னங்காலை தூக்கினால், 'ஸாரி...' என்று அர்த்தம்!

புரிதலுடன் பழகிப் பாருங்கள் உங்கள் பிராணிகளுடன்... வாழ்க்கை இன்னும் அழகாகும்!

 

உயிர்களை உரசும் தொடர்
- சந்திப்போம்...
உயிர்களை உரசும் தொடர்
உயிர்களை உரசும் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism