Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

Published:Updated:

அருள் தரும் அம்மன் உலா! (3)
கரு.முத்து, படங்கள் வி.ராஜேஷ்
அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!
அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண்ணாரித்தாயே!

டர்ந்த வனத்தின் நடுவே இருந்தாலும், தன் அன்பு வெள்ளத்தால் அன்றாடம் ஆயிரக்கணக்கில் அன்பர்களைத் தன்பால் ஈர்த்து அபயம் கொடுத்துக் கொண்டிருப்பவள்... 'பண்ணாரியம்மா'!

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகில், மேற்குதொடர்ச்சி மலைக்காடுகள் ஆரம்பமாகும் இடத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பண்ணாரி. ஆனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என்று எல்லை தாண்டி பரவியிருக்கிறது அதன் புகழ்.

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

இந்தப் பகுதியில் தினமும் ஆடு, மாடுகளை மேய்ச்ச லில் விடுவது சுற்று வட்டார மக்களின் வழக்கம். ஒருவனுடைய காராம்பசு மட்டும் வீடு திரும்பியபிறகு பால் கறக்காமலே இருந்தது. கன்றுக்கும் பால் ஊட்டவில்லை. இது தினசரி வாடிக்கையாகவே... அந்தப் பசுவை கண்காணித்தான் மேய்ச்சல்காரன். குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பசு, தானாகவே பால் சொரிவதை கண்டவன், எல்லோரையும் அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்டினான்.

அந்தப் பரவசமான சூழலில்... சாமி (மருள்) வந்து ஆடிய ஒரு பெண், ''நான், கேரள மாநிலம் மன்னார்காடு எனும் பகுதியில் இருந்து பொதிமாடுகளை மைசூருக்கு ஓட்டிச் சென்ற மக்கள் கூட்டத்துக்கு வழித்து¬ணையாக வந்தேன். இந்த இடத்தின் எழில், இங்கேயே என்னை தங்க வைத்துவிட்டது. இனி, இங்கேதான் இருக்கப் போகிறேன்'' என்று சொன்னாள்.

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

அந்த இடத்தில் புற்று, சுயம்புவடிவான சிறிய கல் இரண்டையும் கண்ட மக்கள், அம்மனாக வழிபட ஆரம்பித்தனர். அப்படி சிறிய ஓலை கொட்டகையில் ஆரம்பித்து... இன்று ராஜகோபுர வேலைகள் துவங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது பண்ணாரி. சாரைசாரையாக படையெடுத்து வரும் பக்தர் கூட்டத்தால்... தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகிவிட்டது பண்ணாரி.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தன் குடும்பத்துடன் வந்திருந்த லலிதா சர்மா, தோழி மங்களா நடராஜனையும் அழைத்து வந்திருந்தார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் கணவர் சர்மாவுக்கு மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்பாளை தரிசித்துவிட்டு வந்த லலிதா, ''தென்னகத்துலயே அப்படி ஒரு கருணை மிக்க அம்மன்னா, அது இவதாங்க. எங்களயே எடுத்துக்கோங்க. என்

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

கணவரோட தொழில் சம்பந்தமா முதன் முதல்ல இங்க வந்து வேண்டிக்கிட்டப்போ, நாங்க இருந்த நிலைமை... இப்ப நினைச்சாலும் வருத்தம் பொங்கும். அவ்வளவு மோசம். ஆனா, இப்ப எல்லாம் கொடுத்து எங்கள ஆளாக்கி வெச்சுருக்கிற அவளோட அருளை என்னனு சொல்ல?!

எந்தப் பிரச்னை வந்தாலும், இவ ஆசீர்வாதத்தால எங்க மனக்கொறையெல்லாம் பனியா விலகிடறதப் பார்த்துட்டுதான், 'அந்த ஆத்தாளப் பார்க்க நானும் வர்றேன்'னு என் தோழியும் கூடவே கிளம்பி வந்திருக்கா'' என்று பரவத்தோடு சொன்னார் லலிதா.

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

குண்டத்துக்கு எரிகரும்பு (நெருப்புக்கு விறகு) தர மறுத்த ஆங்கில அதிகாரி அம்மனின் உக்கிரப்பார்வையில் சிக்கி அவதிப்பட்டது... 1954-ல் இங்கு வந்த ராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு, பூட்டிய கோயிலில் அம்பாள் ஜோதி ரூபமாக காட்சி தந்தது... என்று பல அருட்சம்பவங்களை வரிசைப்படுத்தி மெய்சிலிர்க்கிறார்கள் பக்த கோடிகள்.

ஆத்தா இந்த வனத்தில் அமர்ந்த நாள் முதல் இன்று வரை சத்தியமங்கலம்-மைசூர் வழிச்செல்லும் பயணிகளும், டிரைவர்களும் வழியிலிருக்கும் இவளை 'அம்மா...' என்று வணங்காமல் கடப்பதில்லை. அவளும் அந்த மலைக்காட்டின் பயணம் முழுக்க அவர்களுக்குப் பாதுகாப்பு தரத் தவறுவதில்லை.

''நன்றிக் கடன் செலுத்தத்தான்... மொட்டையடிச்சும், கண்ணடக்கம், நரம்பு, கை, கால்னு உடல் உறுப்புக்கள் வாங்கி வெச்சும், பொங்கல் வெச்சும் அம்பாளை சரணடைய றாங்க. பங்குனி மாசம் இங்க நடக்கற குண்டம் இறங்கற வைபவம், ரொம்பப் பிரபலம். சுமாரா ஒன்றரை லட்சம் பேர் தீ மிதிப்பாங்க. முதல் ராத்திரி ரெண்டு மணி அளவுல முதல் ஆள் நெருப்புல இறங்க ஆரம்பிச்சா, கடைசி ஆள் இறங்கறதுக்கு மறுநாள் சாயங்காலம் ஏழு

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!

மணியாகிடும்னா பார்த்துக்கோங்க! மனுஷங்க மட்டுமில்ல... கால்நடைகளும் குண்டமிறங்கற அந்தக் காட்சியை என்னனு சொல்ல!'' என்று பரவசப்பட்டார் அன்னூரில் இருந்து தன் குடும்பத்துடன் வந்திருந்த தாமரைச்செல்வி சுவாமிநாதன்.

புற்று மண்ணில் அம்மன் தோன்றிய அந்த சிறிய கல், தெற்கு நோக்கிய கோயிலின் கர்ப்பகிரகத்தில் அப்படியே இன்னும் இருக்க... அதற்கு மேல்புறமாக கல் விக்கிரகத்தில் சாந்த சொரூபியாக காட்சி தருகிறாள் பண்ணாரித்தாய்.

''திருமணம், குழந்தை வரம், விவசாய உற்பத்தி அதிகரிப்பு, தொழில் மேன்மை, கடன் தொல்லை தீர்க்க, உடல் நலக்குறைவு என்று குறைகள் எதுவாயினும் நேரில் வந்து பண்ணாரித்தாயிடம் முறையிட்டால் போதும்... அவள் அருள் கருணை பார்வையால் அத்தனையும் நிறைவேறும். மகிழ்ச்சியான மனநிலையில் அம்மனே விரும்பி வந்தமர்ந்த இடம் இது. அதனால்தான் இந்த இடம் தேடி யார் வந்தாலும் அகமகிழ்ந்து வாட்டம் போக்குகிறாள்!'' என்று பெருமிதத்தோடு சொன்னார் ஆலய பூசாரிகளில் ஒருவரான ராஜசேகர பூசாரி!

எப்படிச் செல்லுவது?

மைசூர் செல்லும் சாலையில் சத்திய மங்கலத்திலிருந்து 13-வது கிலோ மீட்டரில் உள்ளது பண்ணாரி. கர்நாடக, தமிழக பேருந்துகள் அனைத்தும் இங்கு நிற்கும். கோயில் திறந்திருக்கும் நேரம்... காலை 5 முதல் இரவு 9 மணி வரை. அலுவலக தொலைபேசி எண் 04295-243289

அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!
- சக்தி வருவாள்...
அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!
அருள் தரும் அம்மன் உலா! - பண்ணாரித்தாயே!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism