Published:Updated:

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

Published:Updated:

கேபிள் கலாட்டா!
ரிமோட் ரீட்டா
கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!
கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

'படா சேனல் பொண்ணுங்களை மட்டும்தான் உங்க 'சேனல் பேஜ்'க்கு பார்ப்பீங்களா..? ஏரியா ஏஞ்சல்ஸ் எங்களையெல்லாம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டீங்களா ரீட்டா..?'னு எஸ்.எம்.எஸ்-லயே எக்கச்சக்க ஃபீலிங்க்ஸ் கொட்டியிருந்தாங்க ரீஜனல் சேனல் பொண்ணு ஒருத்தங்க.

அவங்க கேட்டது தீபாவளி நேரம். அந்த நேரம் பார்த்து, 'ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு'னு எங்க சீனியர், யார்கிட்டயோ போன்ல பழமொழி ஒண்ணை உதிர்க்க... எனக்குள்ள 'கப்'னு ஒரு மின்னல்! 'இதோ வந்துட்டேன்...'னு ஸ்கூட்டியை ரயில்வே ஸ்டேஷன்ல பார்க் பண்ணிட்டு, மதுரை, திருச்சி, கோவை, சேலம்னு 'ஸ்டேட் ரவுண்ட் அப்'ல சில லோக்கல் சேனல் நியூஸ் ரீடர் பொண்ணுங்களைப் பிடிச்சேன்... படிங்க!

ரோஹிணி, டென் டி.வி., திருச்சி ''பதிமூணு வயசுல பெப்சி உமா மேடத்தோட பேட்டியை விகடன்ல படிச்சேன். 'நாமளும் காம்ப்பயர் ஆகணும்'னு முடிவு பண்ணினேன். ஆனா, எங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, ஆசையை எல்லாம் பரண்ல போட்டுட்டு... அப்பா, அம்மா பார்த்த பையனை கல்யாணம் பண்ணிட்டேன். ஒரு விளம்பரத்தை பார்த்தாக்கூட, அதுல எத்தனை ஷாட்ஸ், கட், என்ன தீம், கான்செப்ட்னு ரொம்ப டீப்பா டிஸ்கஸ் பண்றதை கவனிச்ச என் ஹஸ்பண்ட், 'உனக்கு இவ்வளவு ஆர்வம் இருக்கும்போது, ஏன் மீடியாவை உன் கேரியரா சூஸ் பண்ணக் கூடாதுனு?'னு கேட்க, சந்தோஷம் தாங்கல எனக்கு!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

இப்போ டென் டி.வி-யில நான் காம்ப்பயர், நியூஸ் ரீடர் மட்டுமில்ல, நியூஸ் எடிட்டிங், ஸ்க்ரிப்ட் ரைட்டிங், டப்பிங் வாய்ஸ் கொடுக்கறதுனு வளர்ந்து நிக்கறேன். சினிமா வாய்ப்புகளும் கதவைத் தட்டிக்கிட்டிருக்கு. 'சவுத்ஃபுல் மீடியா'னு ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு புரோகிராம் புரொட்யூஸ் பண்ணிட்டும் இருக்கேன். ஃப்யூச்சர்ல ராதிகா மேடம் மாதிரி சின்னத்திரையில சக்சஸ் கிராஃப் காட்டணும்!''

வெல்கம்!

விஜயா, வைகை டி.வி., மதுரை ''டீச்சராகணும்னு பி.ஏ., படிச்சேன். ஆனா, திடீர்னு மீடியா ஆசை பத்திக்க, ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்ல எம்.ஏ., எம்.ஃபில்னு முடிச்சேன். மதுரை வானொலி, தூர்தர்ஷன்னு ட்ரை பண்ணிட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னால வைகை டி.வி-யில ஜாயின் பண்ணிட்டேன். சொன்ன நம்புவீங்களா... சின்ன வயசுல நான் ரொம்ப அமைதி. ஒரு மணி நேரத்துக்கு பத்து வார்த்தை பேசினாலே மேக்ஸிமம். ஆனா, இப்போ நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருக்கேன். எப்படியோ... நானும் வி.ஐ.பி. ஆயிட்டேன்ல?!''

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

பூனைப்படை பாதுகாப்பு போட்டுருவோமா..?!

சுதா, டி.டி.வி., கோவை

''காலேஜுல படிச்சப்போ, எங்க ஊர் கோயில் நிகழ்ச்சிகளையெல்லாம் தொகுத்து வழங்கினேன். ஃப்ரெண்ட்ஸ் மூலமா, லோக்கல் சேனல்களோட அறிமுகம் கிடைச்சுது. டிகிரி முடிச்சதும், சென்னையில இருக்கற சில சாட்டிலைட் சேனல்லயும் சான்ஸ் கிடைச்சது. 'கோவை மண்ணு கோவிச்சுக்குமே'னு இங்கேயே செட்டிலாயிட்டேன்.

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

எங்க சேனல்ல ரெக்கார்டிங் டைம்னாலே படு த்ரில், ஜாலினு களேபரப்படும். கேமரா ஓடலைனு நினைச்சுட்டு யாரையாச்சும் கலாய்ச்சிட்டு இருப்போம். ஆனா, அதை அப்படியே 'ரஷ்'ல காண்பிச்சு நம்பள காலி பண்ணிடுவாங்க. சிலசமயம், கேமராவை ஆஃப் பண்ணிட்டு நம்மளை சின்சியரா நியூஸ் வாசிக்க வெச்சு கூத்தடிச்சுடும் நியூஸ் டீம்!''

ஃப்ரெண்ட்ஸ் ஃபார் ஃபன்!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

ஹேமா, பாலிமர் சேனல், சேலம் ''ஏழ்மையான குடும்பம் என்னுடையது. அப்பா லாரி ஓட்டினாதான், என் குடும்பச் சக்கரம் ஓடுங்கிற நிலை. ஸ்கூல்ல படிக்கும்போது கிளாஸ்ல டீச்சர் எழுப்பிவிட்டு வாசிக்கச் சொன்னா, பத்து கிளாஸ் தாண்டியும் சத்தம் கேட்கற அளவுக்கு அட்டகாசமா வாசிப்பேன். அந்த திறமைதான் பாலிமர் சேனல்ல வாய்ப்பு வாங்கிக் கொடுத்துச்சு. சேலத்துக்குள்ள ஷாப்பிங், கோயில்னு எங்க போனாலும் அடையாளம் கண்டுபிடிச்சு, அன்பா பேசறாங்க எங்க ஊர்க்காரங்க. 'செய்திகள் வாசிப்பது... உங்கள் ஹேமா...'னு வீட்ல என்னை மாதிரியே இமிட்டேட் பண்ணி காலி பண்றாங்க என் பிள்ளைங்க!''

குட்டீஸ் குறும்பு!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

கவிதா, சூப்பர் டி.வி., திண்டுக்கல் ''என் தமிழ் உச்சரிப்பை பார்த்துட்டு, என் டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாரும் என்னை 'நீ நியூஸ் ரீடராக முயற்சி பண்ணேன்...' சொல்லுவாங்க. பண்ணினேன். ஆரம்பத்துல நிகழ்ச்சி தொகுப்பாளராத்தான் வேலை கிடைச்சது. அப்பறம், நியூஸ் வாசிக்க உட்கார வெச்சாங்க. முதல் நாள், கேமரா முன்னாடி நியூஸ் வாசிச்சப்போ ஏ.சி. குளிரையும் தாண்டி எனக்கு வியர்த்துக் கொட்டிடுச்சு. அதுக்கப்புறம் போகப் போக கேமரா எல்லாம் பழகி, இதோ அஞ்சு வருஷம் ஓடிப் போச்சு. என்னோட லட்சியம், சன் டி.வி-யில நியூஸ் ரீடரா சேரணும்கறதுதான்!''

ஆசை தீரும் காலம் எப்பொழுது?!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

சாந்தி, டென் டி.வி., திருச்சி ''ஆக்சுவலி நான் ஒரு அட்வகேட். அஞ்சு வருஷத்துக்கு முன்ன, அட்வகேட் பார்ல நான் பேசினதை பார்த்த என் ஃப்ரெண்ட், 'லோக்கல் சேனல்ல நியூஸ் வாசிக்க ஆள் தேடிட்டு இருக்காங்க... நீ சூட் ஆவேன்னு எனக்குத் தோணுது...'னு சொன்னா. எனக்கும் மீடியா லைன்ல எப்பவுமே ஒரு ஆர்வம் இருக்குங்கறதால, இன்டர்வியூவுக்குப் போனேன். செலக்ட் ஆனேன். ஸ்டார் டி.வி. பிரணாய் ராய், ரேடியோ நியூஸ் ரீடர் சரோஜ் நாராயணசாமி... இவங்க ரெண்டு பேரும்தான் என்னோட ரோல் மாடல்ஸ். குரல், உச்சரிப்பால எல்லார் மனசுலயும் செய்திகளை எப்படி பதிய வைக்கிறோம்ங்கறதுதான் முக்கியம். நான் எப்படி பண்றேன்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்!''

அந்த ரிமோட் எங்கப்பா?!

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

ரேணுகா, சி.டி.என். சேனல், சேலம் ''டி.வி-யில செய்தி வாசிக்கணும்ங்கறது என் சின்ன வயசு ஆசை. என் அக்கா, மாமா, அண்ணன் எல்லாம் தினமும் நியூஸ் பேப்பரைக் கொடுத்து, 'எங்க படி பார்ப்போம்...'னு என்கரேஜ் பண்ணினாங்க. ஆர்வத்தோட முயற்சியும் எடுத்து, ஒரு லோக்கல் சேனல்ல என்ட்ரி ஆனேன். இப்போ சி.டி.என்-ல ஸ்டார் ஆயிட்டேன்.

காதல், கல்யாணம், பிரிவுனு ரணப்பட்டுக் கிடக்கற என் வாழ்க்கையில, எனக்கு இருக்கற ஒரே ஆறுதல், என் குழந்தைங்கதான். 'இல்லை'ங் கறதுதான் என் வாழ்க்கையில நான் அதிகம் சந்திச்ச வார்த்தை. அதனாலேயே எது இல்லைனாலும் என்னால இந்த உலகத்தில் சாதிக்க முடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எங்கிட்ட நிறைய இருக்கு!''

தட்ஸ் த ஸ்பிரிட்!

வாசகிகள் விமர்சனம்

காதுக்கு இனிமை!

''ராஜ் டி.வி-யில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'பாட்டு கிளாஸ்' என்ற நிகழ்ச்சி, சங்கீதம் கற்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ராகம், தானம், பல்லவி என அருமையான சங்கீத முறைகளை அட்சரசுத்தமாகச் சொல்லித்தரும் பயனுள்ள நிகழ்ச்சி!'' என்று பாராட்டுகிறார் கன்னியாகுமரியில் இருந்து எஸ்.வளர்மதி.

முதுமை இனிக்கும்!

''ஆயுதபூஜையன்று 'திருமண வாழ்க்கை பெரிதும் இனிப்பது இருபத்தைந்திலா... அறுபத்தைந்திலா?' என்ற தலைப்பில் சன் டி.வி. ஒளிபரப்பிய பட்டிமன்றம் சூப்பராக இருந்தது. 'இருபத்தைந்து என்பது நுனிக்கரும்பு. அறுபத்தைந்து என்பது அடிக்கரும்பு. உணர்வுகளால் இனிக்கின்ற இருபத்தைந்தை காட்டிலும், பாச உணர்ச்சிகளால் இனிக்கின்ற அறுபத்தைந்தே பெரிதும் இனிப்பது, சுவைப்பது' என்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் தீர்ப்பு... அட்டகாசம்'' என்று புகழ் கிறார் திருவண்ணாமலையில் இருந்து உமாதேவி பலராமன்..

ஒவ்வொன்றுக்கும் பரிசு

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!

75

 

கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!
-படங்கள் 'ப்ரீத்தி' கார்த்திக், தி.விஜய், க.தனசேகரன், ஜெ.தான்யராஜு
கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!
கேபிள் கலாட்டா! - செய்திகள் வாசிப்பது... ஏரியா ஏஞ்சல்ஸ்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism