Published:Updated:

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

Published:Updated:

என் டைரி238
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாசகிகள் பக்கம்
'சோதனை எலி'யாக்கிய 'வஞ்சக நரிகள்'! 

மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம் எங்களுடையது. அப்பா இல்லை எனக்கு. 'இவள எப்படி கரையேத்தப் போறோம்..?' என்று என் அம்மா கலங்கியிருந்தபோதுதான், வந்தது அந்த வரன். மிக வசதியான வீடு. ஒரே பையன். ''சீர் செனத்தி எதுவும் வேண்டாம்...'' என்றார்கள். அகமகிழ்ந்து போனார் அம்மா.

ஆனால், பெண் பார்க்க வந்தபோதுதான் தெரிந்தது, மாப்பிள்ளைக்கு நரம்புத் தளர்ச்சி நோய் என்பது. ''அவன் குறைமாசத்துல பொறந்துட்டான். அதான் இப்படி. அவனுக்கு வேற எந்தப் பிரச்னையும் இல்ல...'' என்றெல்லாம் சமாதானப்படுத்தவே, என்னை கரையேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சித்தப்பாக்கள்... என்னையும் அம்மாவையும் வற்புறுத்தி சம்மதிக்க வைக்க, நடந்தது திருமணம்.

திருமணமான நாளிலிருந்தே அவர்கள் வீட்டில் என்னை தொட்டதற்கெல்லாம் குறை சொன்னார்கள். கணவருக்கும் என்னிடம் பெரிதாக எந்தப் பிரியமும் இல்லை. கடமைக்காக கணவராக வாழ்ந்தார். இரண்டு மாதங்களிலேயே நான் கருவுற்றபோது, அவர்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவேயில்லை. அதேசமயம், என்னிடம் எந்தப் பரிவும் ஏற்படவில்லை அவர்களுக்கு. மாறாக... கணவர், மாமனார், மாமியார் என்று அனைவரும் என்னைக் கரித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில், ''நீ எங்க வீட்டுக்கு சரிப்பட்டு வர மாட்ட...'' என்று என்னை என் அம்மா வீட்டுக்கே விரட்டிவிட்டனர், ஏழு மாத கர்ப்பிணி என்றும் பாராமல்.

என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

குழந்தை பிறந்தபோது... என்னைத் தேடி வந்தது அவர்களல்ல... டைவர்ஸ் நோட்டீஸ். 'அப்படி என்ன நாம தப்பு செஞ்சுட்டோம்..?' என்று நாங்கள் திகைத்து நிற்க, அப்போதுதான் என் மாமனாரின் உறவினர் ஒருவர் மூலமாக எங்களுக்குத் தெரிய வந்தது அவர்களின் வில்லத்தனம்.

''நரம்புத் தளர்ச்சி இருக்கறதால அவனுக்கு கொழந்தை பிறக்குமா, அது ஆரோக்கியமா பிறக்குமானு பலரும் பொண்ணு தரத் தயங்கினாங்க. சொல்லப் போனா, அவங்களுக்கே அதுல சந்தேகம்தான். அதனாலதான் ஏழையா இருந்தாலும் உங்க வீட்டுல பொண்ணு எடுத்தாங்க. இப்போ அவனுக்கு ஆரோக்கியமான கொழந்த பிறந்துட்டதால, உங்க பொண்ண வெட்டி விட்டுட்டு, சொந்தத்துலயே ஒரு வசதியான பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க...'' என்றபோது, உயிர் உடைந்துவிட்டது எங்களுக்கு!

என் வாழ்க்கையையே சோதனை எலியாக்கிய அந்த வஞ்சக குடும்பத்தை என்ன செய்வது தோழிகளே..?!

- ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி


 'காலம் மருந்துபோடும் வரை காத்திரு!'

''படித்து நல்ல வேலையில் இருந்த ஒரே மகள், 'கல்யாணமே வேண்டாம்' என்று மறுத்ததோடு, ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தாள். இந்நிலையில், அவள் வேலை பார்க்கும் கம்பெனியின் எம்.டி-க்கு அவளுடைய சம்மதத்தோடு இரண்டாந்தாரமாக மணம் முடித்தோம். வளர்ப்பு மகளை என் பொறுப்பில் வைத்துக் கொண்டேன். ஒருமுறை மகள் வீட்டுக்குச் சென்றபோது, தெரியாத்தனமாக எங்கள் பையில் ஒரு குத்துவிளக்கை போட்டுவிட்டாள் வளர்ப்பு மகள். இது தெரிந்தே நடந்தது என நினைத்து, என்னை சுத்தமாக ஒதுக்கிவிட்டாள் மகள். அவளுடைய உதவிகள் நின்றுபோனதால், பக்கவாதத்தில் அவதியுறும் கணவர், வளர்ப்பு மகள் இவர்களைக் காப்பாற்ற... வீட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் மகளுக்கு உண்மையை உணர்த்த என்னதான் வழி?''

என் டைரி 237-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

பெற்ற தாயை சந்தேகிப்பதே தவறு. அரை அடி குத்துவிளக்குக்காக உங்களை கேவலமாக நினைத்த மகளை விட்டு விலகியிருப்பதே நல்லது. உண்மையை ஒரு கடிதம் மூலம் எழுதி, தபாலில் அனுப்பிவிட்டு, வேறு ஏதேனும் ஊருக்கு சென்று பிழைக்க வழி தேடுங்கள். அவளாக உண்மை உணர்ந்து, உங்களைத் தேடிவரும் காலம் வெகு தொலைவில் இல்லை. பிச்சையெடுத்தும் பிழைக்கலாமே தவிர, 'திருடி' என நினைக்கும் மகளின் உதவி... இனி வேண்டவே வேண்டாம்!

- கமலா, சென்னை-61

வீட்டிலிருக்கும் வேலையாட்கள் மீது சந்தேகம் வந்தாலும், அதை நாசூக்காக தீர்த்து வைக்க நினைப்போம். அப்படியிருக்க... 'பெற்ற தாய், மகள் வீட்டில் தவறு செய்வாரா?' என்கிற சுயசிந்தனைகூட இல்லாத பெண்ணை என்னவென்று சொல்ல? ஊசி தங்கமாக இருந்தாலும்... அது குத்தினால் வலியும், ரத்தமும் வரத்தானே செய்யும். பெற்ற மகளாக இருந்தாலும் அவள் சுமத்திய பழி மனதை விட்டு அகலாது. காலம் அவளுக்கு உண்மையை உணர்த்தும்வரை விலகியிருப்பதே நல்லது!

- ஆர்.பிரேமா, பெங்களூரு

உங்கள் மகள் எடுத்த முடிவு... 'சட்'டென்று எடுத்தது. இப்போது உங்கள்மீது சுமத்தப்பட்ட 'திருடி' பட்டமும் அப்படிப்பட்டதுதான். எனவே, காலம் அந்தக் கறையை நிச்சயம் மாற்றும். அதற்காக சுணங்கிவிட்டால்... கட்டிக்கொண்ட கணவர், சேர்த்துக் கொண்ட வளர்ப்பு மகள் என எல்லோருமே பாதிக்கப்படுவார்களே! எனவே, கிடைக்கும் வேலையை கச்சிதமாக செய்தே காலத்தை ஓட்டுங்கள் - காலம் தானாக மாறினாலும்... மாறாவிட்டாலும்!

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-95

 

 

என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
-
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism