Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்

Published:Updated:
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபங்கள் பேசுகின்றன !

மூச்சிரைப்பை விரட்டிய மூலிகை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது என் மகனுக்கு ஒண்ணேகால் வயது. 'இளப்பு' எனும் மூச்சிரைப்பு நோய்க்கு ஆளானான். மூச்சுவிடும்போது... முதுகு வரை வயிறு சென்று வருவதை பார்க்கவே உயிர் பதறும் எனக்கு. டாக்டர்கள், நிபுணர்கள் என்று அலைய, ''பதினஞ்சு வயசு வரைக்கும் இப்படித்தான்...” என்று சொன்னதுடன், அதுவரை பாதிப்பு நேரும்போதெல்லாம் நிவாரணத்துக்கு ஒரு ஊசியைப் பரிந்துரைத்தனர்.

எங்கள் வீட்டுக்கு வந்த மூதாட்டி ஒருவர், குழந்தை படும் பாட்டைப் பார்த்து, ''எப்பவுல இருந்து இந்தப் பிரச்னை, எவ்வளவு நேரத்துக்கு குழந்தை சிரமப்படறான்..?” என்றெல்லாம் விவரங்கள் கேட்டார். பின் ஆற்றோரமாகச் சென்று அலைந்து திரிந்து சில மூலிகைகளைப் பறித்து வந்தார். அதிலிருந்து சாறெடுத்து எனக்கும், குழந்தைக்கும் மூன்று நாட்கள் பத்தியம் வைத்து புகட்ட... என்ன அதிசயம்... மறைந்துவிட்டது அவனின் நோய். இன்று என் மகனுக்கு 22 வயது!

அப்போதே அந்த மூதாட்டியிடம், ''அது என்ன மூலிகை பாட்டி..?" என்று கேட்டதற்கு, ''வெளிய சொன்னா பலிக்காது" என்று மறுத்துவிட்டார். அது அவருடனேயே மண்ணாகி விட்டது.

இளையோரே... பெரியவர்களின் வைத்தியங்களில் நம்பிக்கை வையுங்கள். பெரியோரே... 'பலிக்காது' என்று மறைக்காமல், இளையோருக்குக் கற்றுக் கொடுங்கள்!

- ஏ.ஜே.தில்ஷாத்பேகம், சத்தியமங்கலம்

உள்ளாடை தேர்வில் உஷார்!

எங்கள் ஊரில் இருக்கும் பிரபல கடையில்தான் அந்த உள்ளாடையை (பிரேஸியர்) வாங்கினேன். பத்து நாட்கள் கழித்து அணிந்த போது 'கப்' பகுதி கையோடு கிழிந்து வந்தது. அந்த லட்சணத்தில் இருந்தது தையல். 'அடக் கொடுமையே...' என்று என் கணவரிடம் புலம்பினேன். ''மத்த டிரெஸ்ஸையெல்லாம் ஜிப், ஹுக், எலாஸ்டிக்னு செக் பண்ணி வாங்கின மாதிரி இதையும் வாங்கியிருக்கலாம்ல..? இப்போ போய் இதை மாத்தவும் முடியாது. சரி விடு..." என்று சமாதானப்படுத்தினார்.

உள்ளாடை தேர்ந்தெடுக்கையில் அந்த செக்ஷனில் ஒருவித கூச்சத்துடன் நின்றவாறே கண்களாலயே கலரை மட்டும் செலக்ட் செய்துவிட்டு, பிரித்துக் கூடப் பார்க்காமல் 'பில்'லுக்கு அனுப்பும் தோழிகளே... அதுவும் விலை கொடுத்து வாங்கும் ஆடைதான். எனவே, 'செக்' செய்து பார்ப்பதில் வேண்டாம் தயக்கம்!

- ஜி.காமதேனு கோபாலகிருஷ்ணன், வேலப்பாடி

அடிக்கடி நம்பர் மாறினா... ஆபத்து!

எங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் கணவர் அடிக்கடி மொபைல் நம்பரை மாற்றிக்கொண்டே இருப்பார். ஒரு முறை அவரின் நான்கு வயது மகன் பள்ளியில் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்திருக்கிறான். முதலுதவி செய்த பள்ளி நிர்வாகத்தினர், வீட்டுக்கு அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர். அதற்காக, அவனுடைய டைரியில் இருந்த, அவனுடைய அப்பாவின் கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டபோது... 'நாட் ரீச்சபிள்' என்றே வந்திருக்கிறது. பிறகு, மாலையில் பள்ளி வேன் மூலமே வீடு திரும்பியிருக்கிறான். அவனுடய கோலத்தைப் பார்த்துக் கொதிப்போடு பள்ளி நிர்வாகத்திடம் 'குய்யோ முறையோ' என கத்திக் கலாட்டா செய்தபோதுதான்... தவறு தங்கள் பக்கம்தான் என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த அப்பா.

அடிக்கடி நம்பரை மாற்றும் ஐயா... சாமீகளே... அப்படி மாற்றினால் தவறாமல் பள்ளி, அலுவலக ரெஜிஸ்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவருக்கும் அதனை 'அப்டேட்' செய்யுங்கள்... அவசர தருணங்களில் யாரும் தவிக்காமல் இருக்க!

- கி.மஞ்சுளா, திருவாரூர்

அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
 
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
அனுபவங்கள் பேசுகின்றன! - வாசகிகள் பக்கம்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism