Published:Updated:

கலாட்டா காம்ப்பியர்கள் !

கலாட்டா காம்ப்பியர்கள் !

கலாட்டா காம்ப்பியர்கள் !

கலாட்டா காம்ப்பியர்கள் !

Published:Updated:

அசத்தல் பெண்கள் !
கலாட்டா காம்ப்பியர்கள் !
கலாட்டா காம்ப்பியர்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலாட்டா காம்ப்பியர்கள் !

குழந்தைகள் தினத்தன்று நடத்தப்பட்டதாலோ என்னவோ... 'சுடிதார் ஜூனியர்'ஸ் முதல் 'மடிசார் சீனியர்'ஸ் வரை பெண்கள் அனைவருமே குழந்தையின் உற்சாகத்தில் இருந்தனர் நவம்பர் 14-ம் தேதியன்று கோவையில் நடைபெற்ற 'அசத்தல் பெண்கள்' நிகழ்ச்சியில்!

அரங்கத்துக்குள் நுழைந்த வாசகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கேமரா அள்ளிக் கொண்டிருக்க... ''இது எதுக்கு..?" என்று ஆர்வமானவர்களுக்கு, நிகழ்ச்சியின் முடிவில் பதில் சொன்னோம். உங்களுக்கு... கட்டுரையின் முடிவில்!

மியூசிக்கல் சேர்... முதல் விளையாட்டு. இறுதிச் சுற்றுவரை வந்த வெற்றிகரமாக வந்த மகாலட்சுமி பாட்டியிடம் அவரின் வயதைக் கேட்க அவர் 67 என்றார். இடைமறித்த அவரின் மருமகள், ''இல்ல, இல்ல... 69" என்று உடைக்க, ''வயசைக் குறைச்சு சொல்றதுல நமக்கெல்லாம் ஒரு சந்தோஷம்ப்பா...’ என தொகுப்பாளினி சுமதி ராஜகோபால் கலாய்க்க, அரங்கத்தில் செம சிரிப்பொலி!

நடனப் போட்டியில் வென்ற ஸ்ரீஜா, நடனமாடிக் கொண்டிருந்தபோதே, நடுவர்களான சுந்தரி துரை, சரஸ்வதி ராமசாமியும் எழுந்து ஆட, அரங்கத்தில் அதிரடி சரவெடி.

போட்டிகளுக்கு இடையில் வாசகிகள் பலரும் தங்கள் சந்தேகங்களை 'டயட்டீஷியன்' ராஜேஸ்வரி மற்றும் 'யோகி யோகானந்த்' அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொண்டனர்.

''அடுத்து... அந்தாக்ஷரி'’ என்று அறிவிக்கப்பட்டதுமே... இனிய குரல் வளங்கள் பலவும் கூட்டத்தை ஈர்த்தது, கொள்ளை அழகு! லோக்கல் சேனல் காம்ப்பியர்கள் சுப்ரஜா, கவிப்ரியா, அண்ட் கோ செய்த கலாட்டாக்கள் நிகழ்ச்சியை ஒரு காலேஜ் கல்ச்சுரல்ஸ் ஆக மாற்றியது, ஹைலைட்!

வெற்றியாளர்களுக்கு ஐ.டி.சி. நிறுவனத்தை சார்ந்த பூமிகாவும், செந்திலும் பரிசுகளை வழங்க, கைதட்டல்களால் தங்களின் அன்பான வாழ்த்துகளை உரக்கத் தெரிவித்தனர் வாசகிகள்!

ம்ம்... முன்னுரையில் சொன்ன அந்த போட்டோ மேட்டர்தானே..?! நிகழ்ச்சியின் முடிவில், வந்திருந்த ஒவ்வொரு வாசகியின் போட்டோவையும் அழகாக ஃப்ரேம் செய்து அவரவர்களிடம் கொடுத்து நாம் விடைபெற்றபோது, ''வாவ்! வாட் எ சர்ப்பரைஸ்!" என சாக்லேட் கிடைத்த குழந்தைகளைப் போல குதூகலித்தனர் வாசகத் தோழிகள்!

கலாட்டா காம்ப்பியர்கள் !
-படங்கள் ஜா.ஜாக்சன்,
வெ.பாலாஜி
கலாட்டா காம்ப்பியர்கள் !
கலாட்டா காம்ப்பியர்கள் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism