Published:Updated:

அட்டியா..பட்டியா !

அட்டியா..பட்டியா !

அட்டியா..பட்டியா !

அட்டியா..பட்டியா !

Published:Updated:

 
அட்டியா...பட்டியா !
அட்டியா..பட்டியா !

"அட்டியா... பட்டியா'னா என்ன... எனி கெஸ்?"

''தீபாவளிக்கு வாங்கின லேட்டஸ்ட் சுடிதார்..?"

''நார்த் இண்டியன் ஸ்வீட்..?"

''சௌத் ஆப்பிரிக்காவுல ஒரு ஸ்டேட்..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ம்ஹ¨ம்! 'அட்டியா பட்டியா'னா, ஒரு அவுட்டோர் கேம்!"னு சிரிக்கறாங்க பாண்டிச்சேரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி பொண்ணுங்க!

''எங்க காலேஜுல இந்த கேம் ரொம்ப ஃபேமஸ். நாங்க எல்லாம் 'அட்டியா பட்டியா' பிளேயர்ஸ்!"னு நம்மகிட்ட அறிமுகமான ஒரு குரூப், ''ஏய்... தல பேசட்டும்..."னு தீர்மானம் நிறைவேற்ற, அந்த கேம் பத்தி விளக்கினாங்க கேப்டன் பத்மப்ரியா!

''மொத்தம் ரெண்டு டீம். டீமுக்கு பன்னிரண்டு பேர். எட்டு கட்டங்கள் இருக்கும். கட்டங்களைப் பிரிச்சு கோடு போட்டிருப்பாங்க. ஒரு பெரிய பெட்டி... அடுத்தது ஒரு சின்ன பெட்டினு பெட்டி பெட்டியா இருக்கும். நடுவுல எட்டுப் பெட்டிக்கும் சேர்ந்தா மாதிரி நீளமா ஒரு பெட்டி இருக்கும். இதுவும் சின்ன பெட்டிதான். இதுலயெல்லாம் பாதம் வைக்கற அளவுல மட்டுமே இடம் இருக்கும். இது ஒவ்வொண்ணுலயும் ஒருத்தர், நடுவுல இருக்கற நீளமான கட்டத்துல ஒருத்தர்னு மொத்தம் ஒன்பது பேர் நிப்பாங்க. மீதியிருக்கற மூணு பேர் சப்ஸ்டிடியூட். இது ஒரு டீம். இவங்கதான் டிஃபன்டர்ஸ்.

கேம் ஸ்டார்ட் ஆன உடனே, எதிர் அணியில இருந்து வர்ற அஃபண்டர்ஸ் ரெண்டு பேரும், டிஃபண்டர்ஸ் அவங்களத் தொட்டுடாம... ஒவ்வொரு கட்டமா தாண்டிப் போகணும். அடுத்தடுத்து ரெண்டு ரெண்டு பேரா இப்படி போகணும். ஒரு செட்டுக்கு (ரெண்டு பேர்) மூணு நிமிஷம்தான் டைம். ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு மதிப்பெண்!"னு ஓபனிங் கொடுத்தாங்க பத்மப்ரியா!

''எங்க ஏரியா பக்கம் இந்த விளையாட்டு ரொம்ப பிரபலம். அதனாலதான் எங்க ஊருல இருக்கற பல அசோஸியேஷன்கள் மாவட்ட அளவுல அடிக்கடி 'அட்டியா பட்டியா' டோர்னமென்ட் வைப்பாங்க. நாங்க எல்லாம் நிறைய சர்டிஃபிகேட்ஸ் வெச்சிருக்கோம்!"னு கை உயர்த்தினாங்க சரண்யாவும், சிலம்பரசியும்.

''இந்த விளையாட்டுல டிஃபண்டர்ஸ் என்னைத் தொட்டுடாம 'ஏர் டைவ்' அடிச்சுப் போறதுல நான் கில்லி தெரியுமா"னு பொன்மணி கண்கள் சிமிட்ட,

''நான் பதினஞ்சு வருஷமா இந்த விளையாட்டை ஆடிட்டு இருக்கேன். 'பொட்டப் புள்ளக்கு என்ன விளையாட்டு?'னு ஆரம்பத்துல சலிச்சுக்கிட்ட எங்க வீட்டுல, இப்போ என்னை சந்தோஷமா டோர்னமென்ட்களுக்கு அனுப்பி வைக்கறாங்க. ஏன்னா, சமீபத்துல நடந்த நேஷனல் லெவல் 'அட்டியா பட்டியா' டோர்னமென்ட்ல நான் சூப்பர் கோல் போட்டதுக்காக 75 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை விண் பண்ணிட்டு வந்தேன்!"னு சொன்ன கவிதாவுக்கு, முகம் முழுக்க அப்படியரு பூரிப்பு!

உடற்கல்வி ஆசிரியை சக்குபாய், ''நம்ம விளையாடின 'கிளித்தட்டு' விளையாட்டுதான் கொஞ்சம் ரூல்ஸ் மாறி, இப்போ 'அட்டியா பட்டியா'வா ஆகியிருக்கு. மத்த காஸ்ட்லி கேம்ஸைப்போல பேட், பால், நெட்னு இந்த விளையாட்டுக்கு எந்த உபகரணங்களும் தேவையில்ல. ஆர்வமும், ஆரோக்கியமான தேகமும், வேக மும் போதும். அதனாலதான், கிராமத்துப் பெண்கள் பலரும் இதுல ஜொலிக்கறாங்க. குறிப்பா, இங்க ஏம்பலம், வில்லியனூர்னு சுத்தியிருக்கற கிராமத்தை சேர்ந்த பல மாணவிங்க கலக்கிட்டு இருக்காங்க"னு பெருமைப்பட்டுக்கிட்டாங்க.

இதைத் தொடர்ந்து பேசின பயிற்சியாளர் சிவகுமார், ''இந்திய அளவுல பல மாநிலங்கள்ல, சின்னச் சின்ன மாறுதல்களோட இந்த விளையாட்டு விளையாடப்பட்டாலும், அது ஒரு அசோஸியேஷன் கேம்ங்கற அளவுலதான் இருக்கு. அதனாலதான், இந்த அட்டியா பட்டியா விளையாட்டுக்கு அரசாங்க அங்கீகாரத்தை வலியுறுத்திட்டு இருக்கோம்!"னு எதிர்பார்ப்பைச் சொன்னாரு.

புள்ளைங்கள்லாம் ஆசப்பட்டுட்டா... அரசாங்கம் அங்கீகரிக்காம போயிருமா... என்ன?

அட்டியா..பட்டியா !
- ஹெச்.சிராஜுதீன், நா.இள.அறவாழி
படங்கள் ஜே.முருகன்
அட்டியா..பட்டியா !
அட்டியா..பட்டியா !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism