GMAT (Graduate Management Admission Test) என்பது, பட்டமேற்படிப்பு தகுதியோடு அமெரிக்காவுக்கு எம்.பி.ஏ. படிக்க செல்பவர்களுக்கானது. GRE (Graduate Record Examination) தேர்வு, எம்.பி.ஏ., தவிர்த்த பிற மேற்படிப்புக்களுக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கானது. ஆக, பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு, எம்.பி.ஏ. படிக்க அமெரிக்கா செல்பவர்களுக்கு... TOEFL, GMAT இரண்டும் அவசியம். எம்.பி.ஏ. அல்லாத பிற மேற்படிப்புகளுக்கு அமெரிக்கா செல்பவர்களுக்கு TOEFL, GRE இரண்டும் அவசியம்.
அமெரிக்காவைச் சேர்ந்த ETS என்ற நிறுவனம் அந்நாட்டுக்கு அவசியமான TOEFL, SAT, GMAT, GRE தேர்வுகளை நடத்துகிறது. இங்கிலாந்தின் British council மற்றும் ஆஸ்திரேலியாவின் IDP நிறுவனத்தால் நடத்தப்படுவது IELTS தேர்வு. ஆங்கிலம் வழியாக (இங்கிலீஷ் மீடியம்) பள்ளிப்படிப்பை முடிக்காத மாணவர்களை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு தயார் செய்ய அந்தந்த நாடுகளால் தகுதி தேர்வாகவும் IELTS உள்ளது.
மேற்கொண்டு முழுமையான விவரங்களுக்கு... IELTS - www.ielts.org, TOEFL & GRE - www.ets.org, GMAT - www.mba.com, SAT - sat.learnhub.com, Education Abroad - www.educationtimes.com, www.foreign-study.com போன்ற இணையதளங்களை நாடலாம்.
ஆக, இந்த தேர்வுகள் பற்றி தெரிந்து கொள்வதோடு முடிந்துவிடவில்லை முன்தயாரிப்பு, அடுத்ததாக, அருகிலிருக்கும் Education Abroad and Immigration Consultancies மையங்கள் எவற்றையேனும் அணுகினால்... பயிற்சிகள், நடைமுறைகள், விண்ணப்பங்கள், யுனிவர்சிட்டி ஆஃபர் லெட்டர், கல்விக் கடன், விசா, இன்டர்வியூ என வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான ஏ டு இஸட் ஏற்பாடுகளை இந்த கன்சல்டன்ஸி நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும்.
பயிற்சி வழங்கும் நிறுவனத்தை சரியானதாக தேர்ந்தெடுக்க கீழ்கண்ட வசதிகளை அவை அளிக்கின்றனவா என்று ஆரம்பத்திலேயே விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான கோச்சிங், யுனிவர்சிட்டி செலக்ஷன், ஜெனரல் மற்றும் விசா கவுன்சலிங், டாக்குமென்டேஷன், யுனிவர்சிட்டி ஃபாலோ&அப் (பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகும் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர் ஆலோசனை) போன்றவை இவற்றில் அடங்கும்.
கல்லூரிகளில் கடைசி வருட படிப்பை மேற்கொள்ளும் தருணம்தான் இந்தத் தேர்வுகளை முடிப்பதற்கு உகந்தது. அதற்கு முன் விண்ணப்பித்தால்... அது நிராகரிக்கப்படும். பல்கலைக்கழகம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச 'பர்சன்டேஜ்' இருக்கிறதா என்பதையும் உறுதிபடுத்திக் கொண்டு விண்ணபிப்பதே நல்லது. முக்கியமாக, அரியர்ஸ் இருக்கக்கூடாது.
பெரும்பாலான வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் துவங்குவதாக இருப்பதால்... முந்தைய டிசம்பரிலேயே இந்தத் தேர்வுகளை முடித்து அப்ளை செய்து விடலாம். ஆஃபர் லெட்டர் வருவதற்கும் கல்லூரிப் பட்டம் கையில் கிடைப்பதற்கும் சரியாக இருக்கும். சிறிதும் கால விரயமின்றி மேற்படிப்பை சுடச்சுட தொடரலாம்.
இறுதி வருடத்தில் புராஜெக்ட், பாடச்சுமை கரணங்களால் இந்த தேர்வுகளில் கவனம் செலுத்த முடியாதவர்கள், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு... அடுத்து வரும் மார்ச், ஏப்ரலுக்கான வருடத்தின் இரண்டாவது அமர்வில் விண்ணப்பிக்கலாம். யு.ஜி., பி.ஜி., டிப்ளமா, ஆராய்ச்சி மேற்படிப்பு, வேலைவாய்ப்பு மட்டுமல்ல... திருமணமாகி, வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் செல்லும் பெண்களுக்கும் இந்த டெஸ்ட்டுகள் உகந்தவை. ஏனெனில், அங்கு சென்றபிறகு, பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ ஏதேனும் பணிபுரிய விரும்பினால் அப்போது இவை உதவும்!''
|