Published:Updated:

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !

Published:Updated:

அட்வான்ஸ்டு கோச்சிங் இல்லை... அள்ளிக்கொள்ளும் ஸ்பான்ஸரும் இல்லை...
'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !
'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ்!

"வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்ற பன்ச் டயலாக்கை கொஞ்சம் எடிட் செய்து, "என் வாழ்க்கை 64 கட்டம்டா!" எனக் கட்டங்களில் சிகரம் கட்டிக் கொண்டிருக்கும் சதுரங்க வீராங்கனை, ப்ரீத்தி!

வியட்நாமில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் இரண்டாமிடம், இரானில் நடந்த ஆசிய அளவிலான போட்டியில் மூன்றாம் இடம், ஜூனியர்களுக்கான காமன்வெல்த் செஸ் போட்டிகளில் கோல்டு மெடல் என வெற்றிகளை சேமித்துக் கொண்டேயிருக்கும் மதுரைப் பெண்!

மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு கணிப்பொறித்துறை பயிலும் இந்த கன்னிப் பொறி (உபயம் 'எந்திரன்' டயலாக்குங்கோ!), செஸ்ஸுக்கென கோச்சிங் ஏதும் போகாமலேயே ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்கியபோதுதான், அவரின் திறமை அவருக்கே புரிந்திருக்கிறது.

"பத்து வயசுல இருந்தே எனக்கு செஸ் மேல ஆர்வம். அதைப் பார்த்துட்டு, நாலாவது படிச்சப்போ டிஸ்ட்ரிக்ட் லெவல் செஸ் காம்படிஷனுக்கு ஸ்கூல்ல இருந்தே அனுப்பினாங்க. செகண்ட் பிரைஸ் வாங்கினேன். அப்புறம் ஸ்டேட் லெவல் போட்டியில முதல் இடம். அப்போ, 'எந்த கோச்சிங் சென்ட்டர், யாரு கோச்..?'ங்கற கேள்வியவே என்னைப் பாராட்டின எல்லாரும் கேட்க, அப்போதான், 'ஓ... கோச்சிங் அவ்வளவு முக்கியமா..?'னு எனக்கும், எங்க வீட்டுக்கும் புரிஞ்சது" என்று சிரித்த ப்ரீத்தி,

"கடந்த ரெண்டு வருஷமா 18 வயசுக்கு உட்பட்டவங்களுக்கான காமன்வெல்த் போட்டியில முதல்இடத்தை தக்க வெச்சுக் கிட்டிருக்கேன். சமீபத்துல நடந்த 'நேஷனல்-பி' போட்டியில ஜெயிச்சு 'நேஷனல்-ஏ'க்கு செலக்ட் ஆகிருக்கேன். இதுலயும் ஜெயிச்சா... அடுத்து ஒரு இன்டர்னேஷனல் சான்ஸ்!" என்று வியக்க வைத்தார். தொடர்ந்தவர்,

"நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி. நான் வாங்கின ஷீல்டுகளையெல்லாம் பரண்ல தான் போட்டு வெச்சிருக்கேன். 'ஒரு ஷோ கேஸ் வெச்சுத் தர்றேன்மா...'னு எங்கப்பா ரொம்ப நாளா என்னைக் கேட்டுட்டு இருக்கார். 'அந்த மூவாயிரம் ரூபாய்க்கு நான் லோக்கல்ல ஒரு டோர்னமென்ட் போயிட்டு வந்துடுவேன்பா'னு மறுத் துட்டே இருக்கேன். எங்கப்பாதான், தன் சக்தியை மீறி எனக்காக செலவழிச்சுட்டு இருக்கார். வெளிநாடுகளுக்குப் போறதா இருந்தா... 'இந்தியன் செஸ் ஃபெடரேஷன்'ல இருந்து போக, வர டிக்கெட் மட்டும் எடுத்து தருவாங்க" என்றவர்,

"எங்க காலேஜ்ல எனக்கு ரொம்பவே சப்போர்ட்டிவ்வா இருக்காங்க. 'நான் டோர்மென்ட்டுக்கு போகும்போது, ஆப்போனென்ட்ஸ் எல்லாம் ஃப்ரீ டைம்ல அவங்கவங்க லேப்டாப்ல பிராக்டீஸ் பண்ணுவாங்க. எனக்கும் லேப்டாப் கொடுத்தா உதவியா இருக்கும்'னு சொன்னேன். ஸ்கூல்ல அதைக் கொடுத்து உதவினாங்க" எனும் ப்ரீத்தியின் பயிற்சிகள், சற்றே வித்தியாசம்.

"இரவு, பகலா பயிற்சி எடுத்துக்கறது இல்ல. ஆனா, விளையாடும்போது கேம் முடியற கடைசி செகண்ட் வரைக்கும் ஜெயிக்கணும்ங்கற டென்ஷன் இல்லாம, தோத்துடுவோமோங்கற பயம் இல்லாம என்னோட எல்லா கவனமும் போர்ட்ல மட்டும்தான் குவிஞ்சு கிடக்கும். இப்போ எனக்கு கிடைக்கற கோச்சிங், ஸ்டேட் லெவல் வரைக்கும்தான் கை கொடுக்குது. எனக்கு மிடில் கேம் நல்லா வரும். ஆனா, அதுக்கான அட்வான்ஸ்டு கோச்சிங் இந்த ஊருல கிடைக்கலையேங்கற வருத்தமும் இருக்கு" என ஏங்கும் ப்ரீத்தி,

"அப்பறம்... இன்னொரு குட் நியூஸ்! ப்ளஸ் டூ படிக்கற என் தங்கை கார்த்திகேயனியும் செஸ்ல நாற்பது தடவை டிஸ்ட்ரிக், அஞ்சு தடவை ஸ்டேட்னு அவார்டு வாங்கி, இப்போ நேஷனல் லெவலுக்கு முன்னேறியிருக்கா. ரெண்டு வருஷத்துல படிப்பை முடிச்சுட்டு வேலையில சேர்ந்து, அவளோட செஸ் செலவுகளை எங்கப்பாகூட சேர்ந்து நானும் பகிர்ந்துக்கணும்!"

- ப்ரீத்தியின் கண்களில் மின்னல்!

அட்வான்ஸ்டு கோச்சிங், வாரி இறைக்கும் ஸ்பான்சர்கள் என ஏதும் இல்லாமலே வெற்றிகளைக் குவிக்கும் ப்ரீத்தி, கார்த்திகேயனிக்கும் அத்தகைய ஏணிகள் கிடைத்தால்... சானியா, சாய்னா, தீபிகா வரிசையில் தேசமே கொண்டாடும் பெண்களாக உருவெடுப்பார்கள்!

 

'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !
-மோ.கிஷோர் குமார்
படங்கள் சொ.பாலசுப்பிரமணியன்
'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !
'செஸ்'ஸில் அசத்தும் சூப்பர் சிஸ்டர்ஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism