ஒரு பாராட்டு ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், அதில் ஆடிய ஜிப்ஸி நடனம் அனைவரையும் ஈர்த்த ஒன்று. க்ளைமாக்ஸில் வரும் டிரம் டான்ஸ், இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. 'மனோகரா' படத்தில் இவர் ஏற்று நடித்த ‘வசந்தசேனை’ என்ற வில்லி கேரக்டர், இன்றைக்கு... வரலாறு!
ஒரு சம்பவம் அது... 1941. 'தமிழ் சினிமாவின் தந்தை' என்ற புகழுக்குரிய இயக்குநர் கே.சுப்ரமணியம் (பத்மா சுப்ரமணியத்தின் தந்தை), தன்னுடைய 'கச்சதேவயானி' படத்துக்காக கதாநாயகியைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள், நடிகை எஸ்.பி.எல். தனலட்சுமி இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, தனலட்சுமியின் அக்கா மகள் ராஜாயி காபி கொண்டு வர, பார்த்த நொடியே ‘இவர்தான் கதாநாயகி’ என்று முடிவு செய்துவிட்டார் சுப்பிரமணியம். ஆனால், ‘இந்தப் பெண் கதாநாயகியா... உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்று மேக்கப் டெஸ்ட்டின்போது கிண்டலடித்திருக்கிறார் ஒப்பனை நிபுணர்.
|