Published:Updated:

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !

Published:Updated:

 
நாச்சியாள்
சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !
சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம்

'ஒரு சவரன் தங்கத்தின் விலை 15 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது...' என்ற செய்தி.. பலரையும் பெருமூச்சுவிட வைத்துக் கொண்டிருக்கும்போதே... 'இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி கடந்த அக்டோபரில் மட்டும் 65 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது' என்றொரு செய்தி கிளம்பி வந்து ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம்... கலாசாரம், அந்தஸ்து என்று பல்வேறு காரணங் களுக்காக நம்மவர்கள் தங்கத்தை சேமிப்பதுதான்!

பெரும்பாலும் தங்க நகைகளாக சேமிப்பதுதான் இங்கே வழக்கமாக இருக்கிறது. இதற்கு நடுவே, தங்க பிஸ்கட், தங்க நாணயங்கள் மற்றும் தங்க முதலீட்டுத் திட்டங்கள் என்று பல்வேறு வகைகளில் சேமித்து, சேதாரமில்லாமல் லாபம் பார்ப்போரும் தற்போது பெருக ஆரம்பித்துள்ளனர். அத்தகைய முத லீட்டுத் திட்டங்கள் குறித்து இங்கே பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பங்கு சந்தை ஆலோசனை நிறுவனம் 'அனிராம்'&ன் சீஃப் இன்வெஸ்ட்மென்ட் ஆபீஸர் அனிதா பட்.

"ரியல் எஸ்டேட்டுக்கு அடுத்து மக்கள் அதிகமாக இன்வெஸ்ட் செய்-வது தங்கத்தில்தான். காரணம், தங்கத்-தின் விலை இனி எந்தச் சூழ்நிலையிலும் குறைவதற்கு வாய்ப்பில்லை. பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு சேமிக்-கும் நோக்கில் தங்கம் வாங்குபவர்கள், அவற்றை ஆபரணங்களாக இல்லா-மல் பார்களாகவோ, காயின்களாகவோ வாங்கி வைத்துக் கொள்ளலாம். காரணம், இன்று 5 சவரனுக்கு ஒரு ஃபேஷன் நகை வாங்கினால், அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் அது 'அவுட் ஆஃப் ஃபேஷன்' ஆகிவிடுகிறது. அப்போது அந்த நகையை உருமாற்றி இன்னொரு நகையாக செய்யும் போது, செய்கூலி, சேதாரம் என விரயம்தான்.

காயின்களாக வங்கி வைத்துக் கொண்டால், வேண்டிய சமயத்தில் விரும்பிய டிசைன்களில் நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். நகைக்கடைகள், வங்கிகள், தபால் நிலையங்கள் என்று எங்கும் இன்று தங்க காயின்கள் விற்கப்படுகின்றன.

மொத்தமாக தங்கத்தில் முதலீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லாதவர்களுக்கான எளிய வழி, நகைகடை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் சிட்ஸ். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, சம்பந்தப்பட்ட நகைக்கடை நீண்ட வருடங்களாக நிறைய கஸ்டமர்களுடன் இயங்கும் நம்பிக்கையான கடையா என்பது. இரண்டு, சிட்டின் முதல் தவணை செலுத்தும்போது என்ன விலைக்கு தங்கம் விற்கிறதோ, அதே விலைக்கு சிட்டின் முதிர்வின்போது நகை கொடுப்பார்களா என்ற உத்தரவாதம்'' என்று அறிவுறுத்தினார்.

" 'டீமேட் அக்கவுன்ட்' வைத்திருப்பவர்களும், இல்லாதவர்கள் புதிதாக ஒரு டீமேட் அக்கவுன்ட் ஆரம்பித்தும், இ.டி.எஃப். எனப்படும் 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ்' மூலம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். . இதில் ஒரு கிராம் தங்கம் ஒரு யூனிட் எனப்படும். ஒரு யூனிட் தங்கத்திலிருந்து ஆயிரக்கணக்கான யூனிட்கள் வரை கூட வாங்கி டீமேட் அக்கவுன்ட்டில் வைத்துக் கொள்ளலாம். வாங்கிய விலையைவிட அதிக விலைக்குப் போகும்போது விற்றுக் கொள்ளலாம்.

இப்படி இ.டி.எஃப் மூலம் வாங்கப்படும் யூனிட் தங்கத்துக்கு ஆண்டுக்கு 2.5 முதல் 4 சதவிகிதம் வரை 'அசெட் மேனேஜ்மென்ட் கட்டணம்' செலுத்த வேண்டும். கோட்டக், ரிலையன்ஸ், குவான்ட்டம், எஸ்.பி.ஐ., ரெலிகர் உட்பட பல திட்டங்கள் உள்ளன. இதில் இன்வெஸ்ட் செய்வதற்கு முன் உங்கள் பங்குச்சந்தை ஆலோசகரின் அறிவரையையும் கேட்டுக்கொள் வது நல்லது'' என வழிகாட்டிய அனிதா பட்,

"டீமேட் அக்கவுன்ட்டில் தங்கம் சேமிக்கப்படுவதால் வீட்டில் இருக்கும் நகைகள் போல், திருட்டுப் போவதற்கு வாய்ப்பில்லை. செல்வ வரியும் கட்டத் தேவையில்லை என்பது இதன் அட்வான்டேஜ்'' என்று அதன் பலனையும் சொன்னார்.

தொடர்ந்தவர், '' 'கோல்ட் மியூச்சுவல் ஃபண்ட்' திட்டம் மூலமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அரசு அமைப்பான 'செபி' நிறுவனத்தால் அங்கீகரிக்-கப்பட்ட 'ஏ.ஐ.ஜி வோர்ல்ட் கோல்ட் பண்ட்', 'டி.எஸ்.பி கோல்ட் பண்ட்' என இரு திட்டங்கள் உள்ளன. நிதி ஆலோசகரின் ஆலோசனை-யோடு இதில் இறங்குவது நல்லது.

இன்னும் மார்க்கெட்டில் அதிக புழக்கமில்லாத, அதேசமயம் அதிக அட்வான்டேஜ் உள்ள 'இ&கோல்ட்' எனும் திட்டத்தை அரசு அமைப்பான 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்' அறிமுகப்படுத்தி-யுள்ளது.

ஒரு கிராம் தங்கத்திலிருந்து பல நூறு கிராம் வரை வாங்கி டீமேட் அக்கவுன்ட்டில் வைத்துக் கொள்ள-லாம். தங்கத்தை காலையில் வாங்கி, மாலை யில் கூட விற்றுக் கொள்ளலாம். அக்கவுன்ட்டில் 8 கிராம் தங்கம் சேர்ந்த பிறகு தங்கத்தை டெலிவரி எடுத்துக்-கொள்ள முடியும்.

இதில் மிக முக்கியம் உங்கள் புரோக்கிங் நிறுவனம், 'நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்'&ல் பதிவு செய்திருக்க வேண்டும்'' என்று தங்கத்தை முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான, பலமான திசைகளைக் காட்டினர் அனிதா பட்!

சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !
 
சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !
சேதாரமில்லா சேமிப்புக்கு ஆதாரமாக நிற்கும் தங்கம் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism