Published:Updated:

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

நமக்குள்ளே ....

Published:Updated:

 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே !

'உன் நண்பனைச் சொல்... நீ யார் என்று கூறுகிறேன்' என்று பிரபலமான பொன்மொழி இருப்பது உங்களுக்குத் தெரியும்தானே?! அதேபோல, 'அவள் விகடனின் வாசகியர் யார்?' என்பதை உங்கள் ரசனையின் மூலமும், உங்களின் பல்துறை பரிமாணங்களின் மூலமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்.

அப்படியரு சந்தர்ப்பமாக... வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உங்களில் சுமார் 500 பேரை நேரில் சந்தித்தபோது, ஒரு கணம் எங்கள் கண்கள் பெருமையில் கலங்கிவிட்டன.

ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும்கூட இரண்டு நாள் பயிற்சி முகாமுக்கு தேடி வந்து கூடிய உங்கள் அத்தனை பேரின் தன்னம்பிக்கையும், குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக நிலைநிறுத்தும் வேட்கையும் நொடிக்கு நொடி அங்கே பிரதிபலித்தது.

நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் இதழுக்குள்ளே இருக்கின்றன. என் உருக்கமான நன்றியை மட்டும் முன்பாகவே இங்கே சமர்ப்பிக்கிறேன்.

'பசித்தவருக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு'ப்பது தொலைநோக்கான தீர்வு என்ற அடிப்படையில், லட்சக்கணக்கான வாசகியரில் தொடர்ந்து பலரை அடையாளம் காட்டிக்கொண்டே இருக்கிறோம். அப்படி வெவ்வேறு தொழில்கள் மூலம் வெற்றிக் கொடி நாட்டிய உங்களில் ஆறு பேர் அந்த நிகழ்வில் மேடையில் வந்து நின்றபோது எப்படி ஒரு கரகோஷம் செய்தீர்கள் நீங்கள் அத்தனை பேரும்!

தொழில்முனைவோருக்கான ஆரம்பப் புள்ளியாக அமைந்த அந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, இன்னும் எப்படியெல்லாம் உங்களுக்கு ஆக்கபூர்வமாக நாங்கள் தோள் கொடுக்க முடியும் என்பதை எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

உங்கள் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் ஒளியாக எங்கள் மீது நீங்கள் பாய்ச்சிக் கொண்டிருக்கும் வரையில், நமது நட்பின் ஜொலிப்பு மேலும் மேலும் பிரகாசமாவதற்கு கேட்கவா வேண்டும்!

கைக்குழந்தையோடு வந்து அந்தப் பயிற்சியில் பங்குபெற்ற தோழியே, உனக்கொரு தனி சல்யூட்!

உரிமையுடன் உங்கள்


ஆசிரியர்

நமக்குள்ளே ....
 
நமக்குள்ளே ....
நமக்குள்ளே ....
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism