Published:Updated:

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

Published:Updated:

இனி எல்லாம் சுகப்பிரசவமே !
ரேகா சுதர்சன்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய்க்கட்டும் இனிய ஆரம்பம் !

குழந்தைக்கு பால் புகட் டும் நெறிமுறைகள் பற்றி கடந்த இதழில் பேசிக் கொண்டிருந்தோம். எத்தனை மணி நேர இடைவெளியில் பால் புகட்டுவது என்கிற கேள்வி எழும்போது, இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டியது அவசியம் என்கிறோம். ''இந்த இரண்டு மணி நேர இடைவெளியின்படி ஒரு நாளுக்கு 12 முறை பால் தர வேண்டும் என்பதுதான் கணக்கு. ஆனால், பகல் நேரங்களில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக்கூட குழந்தை அசந்து தூங்கும்தானே..? கூடவே, இரவு நேரத்தில் குழந்தையும் நாங்களும் அசதியாக தூங்கிவிடுவோமே..? இதனால் அந்த '12' தவணைகள் குறையும்போது, குழந்தைக்கு போதுமான பால் கிடைத்துவிடுமா..?'' என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.

பகலோ, இரவோ... அசந்து தூங்கும் குழந்தையை எழுப்பக்கூடாதுதான். காரணம், குழந்தை தூங்குகிறபோதுதான் ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து, அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், அந்த வளர்ச்சிக்கான ஊட்டச்சத்தை வழங்குவது தாய்ப்பால்தான் என்பதையும் மறந்து விடாதீர்கள். எனவே, குழந்தை தூங்கும்பட்சத்தில் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுத்தாலும் பிரச்னை இல்லை.

மூன்று மணி நேரத்துக்கு மேல் குழந்தை அசந்து தூங்கினால், தூக்கம் கெடாதபடி புகட்டுவது அவசியம். எப்படி..? குழந்தையின் பாதத்தைச் சுரண்டியோ, முதுகில் அடித்தோ, தலையைக் கோதிவிட்டோ... குழந்தையை எழுப்புவது வேண்டாம். மார்புக் காம்பை குழந்தையின் கீழ் உதட்டின்மேல் வைத்து மெதுவாக தேய்த்தாலே போதும்... குழந்தை அதுவாகவே பாலைச் சுவைக்கத் தொடங்கிவிடும். இரவு நேரங்களிலும் இதைப் பின்பற்றலாம். தவிர, சாதாரணமாகவே மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை உடலை அசைத்தால், அது ஒருமுறை சிணுங்கும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டும் பால் புகட்டலாம்.

இப்படி ஒவ்வொரு முறை பால் புகட்டும்போதும் குறைந்தது இருபது நிமிடங்கள் கொடுப்பது நல்லது. முதல் பத்து நிமிடங்கள் தரும் பாலை 'ஃபோர் மில்க்' (Fore Milk) என்போம். இது நீர்ச்சத்து மிகுந்தது. அடுத்த பத்து நிமிடங்கள் தரும் பாலை 'ஹிண்ட் மில்க்' (Hindu milk) என்போம். இது ஊட்டச்சத்து மிகுந்தது. ஒவ்வொரு முறையும் இடது, வலது மார்பகம் என்று உங்களுக்கு எது அந்த நேரத்துக்கு வசதியாக இருக்கிறதோ... அதற்குத் தகுந்தாற்போல் தொடர்ந்து இருபது நிமிடங்கள் பால் புகட்டும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

அடுத்து, வேலைக்குச் செல்லும் பல தாய்மார்களுக்கு எழும் கேள்வி. அதாவது, 'வொர்க்ல ரீஜாயின் பண்ற நேரம் நெருங்கிட்டு இருக்கு. என் குழந்தைக்கு தாய்ப்பாலை சேமித்து வெச்சு கொடுக்க முடியுமா..?'

இன்றைய சூழ்நிலைக்கு இது முக்கியமான கேள்வி. இந்த நவீன யுகத்தில் பாலைச் சேமித்து வைத்து குழந்தைக்கு புகட்டும் பழக்கம் பரவலாகி வருகிறது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே இதைப் பயன்படுத்துவது நல்லது. எப்படி தாய்ப்பாலைச் சேமிப்பது என்பதை சொல்லித் தர நிறைய மருத்துவ ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் முறையைப் பின்பற்றி பாலைச் சேமித்து வைக்கலாம்.

'ஹாண்ட் எக்ஸ்பிரஸ்ஸிங்' (Hindu milk) என்றொரு முறையும் இருக்கிறது. பாலை நீங்களாகவே எடுத்து வைத்து, தேவையானபோது உபயோகப்படுத்திக் கொள்ளும் முறை இது. இப்படிச் சேமித்து வைக்கப்படும் பால், சாதாரண சூழ்நிலையில் இரண்டு மணி நேரத்துக்கு கெட்டுப் போகாது. ஃப்ரிட்ஜில் பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல் பாதுகாப்பாக இருக்கும். குழந்தைக்கு இந்தப் பாலை புட்டியில் வைத்துப் புகட்ட வேண்டாம். காரணம், தாய்க்கும் புட்டியில் பயன்படுத்தும் ரப்பருக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து பால் குடிப்பதை குழந்தை மறுக்கவும் வாய்ப்புஇருக்கிறது. எனவே, சுத்தப்படுத்திய பாலாடை (சங்கு) அல்லது கப் ஸ்பூன் பயன்படுத்தி புகட்டலாம்.

சரி, குழந்தைக்குப் பால் புகட்டி, வளர்த்தாகிவிட்டது. பாலை நிறுத்தும் வயது வந்துவிட்டதே... என்ன செய்யவேண்டும்?

வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் என்று கசப்பான விஷயங்களை மேற்கொள்வதுதான் பெரும்பாலும் வழக்கத்தில் இருக்கிறது. தயவுசெய்து அதெல்லாம் வேண்டாம். சாதாரணமாகவே திட உணவைக் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தை சாப்பிட பழகிக் கொள்ளும்போது, பால் குடிக்கும் பழக்கமும் தானாகவே குறைந்துவிடும், மறந்துவிடும். அந்த நேரத்தில் படிப்படியாக உங்களுக்கும் பால் சுரக்கும் தன்மை குறையும். இயற்கையாகவே இப்படிப்பட்ட தகவமைப்பு தாயின் உடலுக்கு இருக்கிறது. ஒருவேளை நாட்கள் தாண்டியும் பால் சுரப்பு நிற்காதவர்கள், மருத்துவர்களை நாடலாம்.

ஆக, குழந்தை கருவானதில் இருந்து அது கைகளில் தவழ்வது வரை அதை அழகாக வளர்த்துவிட்டோம். தொடரின் உயிரோட்டமான அதே வார்த்தைகளை வலியுறுத்தி விடை பெற விரும்புகிறேன்...

கரு தரித்த நாள் முதல் உங்கள் குழந்தையைப் பெற்றெடுத்து அமுதூட்டுகிற காலம் வரை உங்கள் மனம் தாய்மையை உணர்ந்து பூரிக்கட்டும்; டென்ஷன் வேண்டவே வேண்டாம். பிரசவம் பற்றி உங்கள் மனதுக்குள் உருள்கிற அச்சங்களையும், அதை வலுப்படுத்தும் மற்றவர்களின் வார்த்தைகளையும் காதில், மனதில் வாங்காதீர்கள். நல்ல உணவு, உடற்பயிற்சி, உள்ளப்பூரிப்பு என்று இருங்கள்... அதுதான் இனிய ஆரம்பம் சுகப்பிரசவத்துக்கு!

பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
வாழ்த்துக்கள்!
தொகுப்பு நாகராஜகுமார்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
பாரம்பரியத்தை புரிய வைக்கும் பிராக்டிகல் தொடர்
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism