Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் !

Published:Updated:

 
குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
உங்கள் குழந்தையும் இனி நம்பர் !
உங்கள் குழந்தையும் இனி நம்பர் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருவிலிருந்து வளர்த்தெடுப்பதே புத்திசாலித்தனம் !

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

நறுமுகை... இந்தக் குட்டிச் செல்லத்தை இன்றெல் லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அத்தனை அழகு! ஆனால், எட்டு வயதாகும் அந்த ஏஞ்சலைப் பார்த்து நீங்கள் சிரித்தால்... அவள் திரும்பச் சிரிக்க மாட்டாள். "க்யூட்டா இருக்கியே..." என்று தூக்கி வைத்துக் கொஞ்சினால்... அதற்கும் எந்த முகபாவமும் காட்டாமல் அப்படியேதான் இருப்பாள்.

இப்படி இரண்டொரு சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல... சந்தோஷம், சங்கடம் என்று எப்போதுமே எந்த உணர்ச்சிகளின் பிரதிபலிப்பும் இருக்காது அவள் முகத்தில். பதறிய பெற்றோர், டாக்டரிடம் சென்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன்... எல்லா டெஸ்ட்டுகளையும் முடித்துவிட்டு, "அவ உடம்புல, வெளித்தோற்றத்துல எந்தக் குறையும் இல்ல. ஆனா, மூளையில ஏற்பட்ட பாதிப்பால செயல்திறன் (Funtional activity) பாதிக்கப்பட்டிருக்கு. அவள் செய்ற ஒவ்வொரு விஷயத்துலயும் இது பிரதிபலிக்கும். உதாரணமா, சிரிக்கும்போது அவளோட முகத்தசைகள் அசைவற்று இருக்கும்" என்று விளக்கினார்கள் டாக்டர்கள்.

"பொறந்ததுல இருந்து பொத்திப் பொத்திதானே பாதுகாக்கறேன்... அவளுக்கு எப்படி இப்படி..?" என்று புலம்பினார் அம்மா. ஆனால், குழந்தையின் இந்தக் கோளாறு அவள் பிறப்பதற்கு முன்பு, கருவாக தன் தாயின் வயிற்றில் இருந்தபோதே உருவாகியிருந்தது அந்தத் தாய்க்கு புரிய வைக்கப்பட்டது.

ஆம்... குழந்தை வயிற்றில் இருக்கும்போது சில கர்ப்பிணிகள் செய்கிற தவறுகள்தான் இம்மாதிரியான பிரச்னைகளுக்குக் காரணம். எனவே, தன் குழந்தை ஆரோக்கியமாக, அன்பாக, பொறுப்பாக, திறமையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள்... அதற்கான விஷயங்களை குழந்தை பிறந்து பிறகு செய்வதை விடவும் புத்திசாலித்தனம்... கருவாக உருவெடுத்த கணத்திலேயே ஆரம்பிப்பதுதான்! காரணம், ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து கரு உருவான முதல் 3 மாதங்களில் உருவாகும் முதல் உறுப்பு... மூளை. பிறகுதான் மற்ற அனைத்து உறுப்புகளும்!

மூளை உருவாக ஆரம்பிக்கும் காலகட்டத்தில் உணவு, சூழ்நிலை மற்றும் மனநிலை ஆகிய மூன்று விஷயங்கள் மிகச் சரியாக இருந்தால்... குழந்தையின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

ஆரோக்கியமான சமச்சீரான உணவு... 'காலையில சாப்பிடறதுக்கு நேரமே இல்ல... அவசரமா ஓடினாத்தான் பஸ்ஸ புடிச்சு கரெக்ட் டைமுக்கு வேலைக்குப் போக முடியும்' என்று அரைகுறையாக சாப்பிட்டால்... கருவின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து போய்ச் சேராது. ஜங் ஃபுட், 'கார்பனேடேட்' வகை குளிர்பானங்கள் கருவின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, எந்த அவசரத்திலும், அவதியிலும் சத்தான உணவை எடுத்துக்கொள்வது, தங்கள் கருவின் மூளை வளர்ச்சிக்கு கர்ப்பிணிகள் செலுத்தும் முதல் அக்கறை.

சூழ்நிலை என்பது அக்கம்பக்கம், வீடு, அலுவலகம், சமூகம், சொந்தக்காரர்கள் என அனைத்தையும் உள்ளடக்கியது. அலுவலகத்தில் உயர்அதிகாரியுடன் பிரச்னை, வீட்டில் நாத்தனாருடன் சண்டை, தண்ணீர் பிடிக்கும்போது பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என எதையெல்லாமோ மனதில் சுமந்துகொண்டு படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் பாதித்தால்... கருவின் மூளை வளர்ச்சி பாதிப்படையலாம்.

"என் பொண்ணு சூப்பரா படிப்பா. ஆனா, பவர்கட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்குகூட டென்ஷனாவா..." என்று சொல்லும் அம்மாக்கள், ஒரு நிமிடம் ஃப்ளாஷ்பேக் ஓட்டினால், அவர்கள் குழந்தையைச் சுமந்து கொண்டிருந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தால் மன அமைதி பாதிக்கப்பட்டு அதீத பதற்றத்துடனும், (Anxiety) மன அழுத்ததுடனும் (Depression) இருந்திருப்பார்கள். அந்தச் சமயத்தில் கார்டிசால், நார்-எபிநெப்ரைன் போன்ற நியூரோ ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து, கருவின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். எனவே, கர்ப்ப காலத்தில் அமைதியான மனநிலையும் முக்கியம்.

கருவுற்ற முதல் 3 மாதங்களில் அந்த தாய்க்கு எந்தத் தொற்றுநோய் வராமலும், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்காமலும் இருக்க வேண்டும். தனக்குத் தெரிந்த மாத்திரைகளை மெடிக்கல் ஷாப்பில் வாங்கிப் போடுவதை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். அதைவிட முக்கியம், உடலில் பெரிய அளவிலான உள்காயமோ, வெளிக்காயமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வது.

இந்த அத்தனை முன்னெச்சரிக்கையிலும்தான் ஆரம்பமாகிறது உங்கள் குழந்தையை நம்பர் 1 ஆக்கும் சூட்சமம். அதுதான்... குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. மூளையின் ஓவ்வொரு கட்ட வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் குழந்தையின் குணம், திறமை, அறிவு, ஆற்றல் ஆரோக்கியம், மனநலம் அத்தனையையும் கட்டமைக்கிறது.

'400 கிராம் மூளை வளர்ச்சியடைவதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா..?!' என்று ஆச்சர்யப்படுகிறீர்களா..! அந்த மூளை வளர்ச்சியடையும் விதம், செயல்படும் விதம், அதன் மூலம் உங்கள் சுட்டியை கெட்டிக்காரனாக்கும் வித்தை என்று இன்னும் இன்னும் பிரமிப்பு... ஆச்சர்யங்கள் வரிசையாக காத்திருக்கின்றன!

- வளர்ப்போம்...

உங்கள் குழந்தையும் இனி நம்பர் !
 
உங்கள் குழந்தையும் இனி நம்பர் !
உங்கள் குழந்தையும் இனி நம்பர் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism