Published:Updated:

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

என் டைரி 238 - சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

Published:Updated:

-சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி - 239
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-'நானே எனக்கு பகையானேன் !

வாசகிகள் பக்கம்

வீட்டின் மூத்த மகள் நான். ஒரு தம்பி, இரண்டு தங்கைகள். விபத்தில் தந்தை இறந்துவிட, குடும்பமே வறுமையின் பிடியில். அதனால், ப்ளஸ் டூ முடித்த கையோடு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்துவிட்டேன். குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தலையில் சுமக்க ஆரம்பித்து... தம்பி, தங்கைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய கம்பெனியில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியில் சேர்ந்தார். கலகலப்பான நபரான அவர், எப்போதும் நட்புடன் பேசுவார். பண்பாக நடந்துகொள்வார். தாயாருடன் தனியாக வீடு எடுத்து தங்கியிருப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள சொல்லி, அம்மா வற்புறுத்துவதாகவும் சொல்வார்.

இப்படி... வந்த நாள் முதலாகவே நட்பு ரீதியில் அவர் பேசிக் கொண்டிருக்க... நானோ, அந்த நாள் முதலாகவே என்னையும் அறியாமல் அவர்மீது ஒருவித ஈர்ப்பை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டேன். அது மெள்ள... அளவிடமுடியாத காதலாகவும் மாறிப்போனது.

என் குடும்ப விஷயம் முதல் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நான், அந்தக் காதலை மட்டும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் மனதில் உள்ள காதலை சொல்லி, அவர் என்னை வெறுத்துவிடுவாரோ என்று பயமே என்னை வாட்டி வதைக்கிறது. நாசூக்காக சொல்லிப் பார்த்தபோது, அதை அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இதற்கு நடுவே, எங்களுடன் பணிபுரியும் சக தோழியிடம் அவர் மிகவும் அதிக நெருக்கம் காட்டுவது தெரிந்தபோது... தூக்கிவாரிப் போட்டது எனக்கு. தோழியிடம் நேரடியாகவே சண்டைபோட... அவர்களுடைய நெருக்கம் அதிகமாகி... நானும் அவளும் விலக வேண்டியதாகிவிட்டது.

என்னால் அவரை யாருக்கும் விட்டுத் தரமுடியாது. இப்போது, நட்பைவிட, என் காதல்தான் எனக்குப் பெரிதாகத் தெரிகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இதுவரை ஒரு ஆணையும் ஏறெடுத்து பார்க்காத நான், இப்போது ஏன் காதலில் விழுந்தேன்? இந்த வயதில் திருமணம் தேவையா? என் குடும்பத்தைப் பார்ப்பதா? என் வாழ்க்கையைப் பார்ப்பதா? என்று ஆயிரம் கேள்விகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன. எனக்கே என்மீது வெறுப்பாக உள்ளது. தீர்வு சொல்லுகள் தோழிகளே...

ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி

பிசாசுகளைப் பிரிவதே நல்லது !

என் டைரி 238ன் சுருக்கம்...

" 'வசதியான குடும்பம், ஒரே பையன். சீர் செனத்தி எதுவும் வேண்டாம். ஆனால், மாப்பிள்ளைக்கு நரம்புத் தளர்ச்சி நோய் மட்டும் இருக்கு' என்று வந்த வரனை, எனக்கு முடித்தனர் என் ஏழை பெற்றோர். அவரும், அவருடைய குடும்பத்தாரும் ஏதோ கடனே என்றுதான் என்னை அந்த வீட்டில் வைத்திருந்தனர். இரண்டு மாதத்தில் நான் கருவுற்றபோது, குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தாலும், என் மீது ஒருவரும் பரிவு காட்டவில்லை. தாய்வீட்டுக்கு வந்து குழந்தையைப் பெற்றெடுத்த சமயத்தில் எனக்கு வந்தது டைவர்ஸ் நோட்டீஸ். நரம்புத் தளர்ச்சி நோய் இருப்பதால், குழந்தை பிறக்குமா என்பதை சோதித்து பார்க்கவே, என்னை மணமுடித்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. என்னை சோதனை எலியாக்கிய அந்த வஞ்சகக் குடும்பத்தை என்ன செய்வது?''

என் டைரி 238-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

மனிதர்கள் வாழும் குடும்பம் தானா அது..? இதற்குப் பிறகும் அந்த சுயநலப் பிசாசுகளிடம் சிக்கி சீரழிவதைவிட, அவர்களே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியது நல்லதென்று நினைத்துக் கொள். உன் நல்வாழ்வுக்கும் உன் குழந்தையின் எதிர்காலத்துக்கும் தேவையான பணத்தை கோர்ட்டு மூலம் பெற முயற்சி செய். உனக்கு ஏற்ற ஏதாவது வேலையை தேடிக்கொண்டு, உன் துணையான குழந்தையின் வளர்ச்சியில் மனதை செலுத்தி அமைதியைத் தேடிக்கொள்.

ஆர்.பிரேமா, பெங்களூரு

உன் நிலை நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. இதற்குக் காரணம்... உன் ஏழ்மைதான். முடிந்தால் காந்திய வழியில் சமாதானமாகச் செல்ல முயற்சி செய். பயனற்றுப் போனால், பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக பொங்கி எழு. டைவர்ஸ் என்பது அவர்கள் வீட்டு கிள்ளுக் கீரை அல்ல. இலவச சட்ட உதவி மையம் மூலம் 'ஏற்க முடியாது' என்று பதிலடி கொடு. நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைப் பாசம் வலிமை மிக்கது. அதுவே அவர்கள் மனதை மாற்றவும் செய்யலாம்.

வசந்தா பரமசிவம், புனலூர்

தேவைப்பட்டால் வைத்துக் கொள்ளவும், தேவையில்லைஎன்றால் தூக்கி எறியவும், நீ விளையாட்டு பொம்மையல்ல. சட்டத்தின் துணையுடன் அவனுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த இல்லறம் இனிக்காது. உன் குழந்தையின் வருங்கால நன்மைக்காகவும், மனைவி என்ற உரிமைக்காகவும் சட்டப்படி உனக்குச் சேரவேண்டியதை வழக்கறிஞர் மூலமாக கேட்டுப்பெற்று, பிறகு விவாகரத்துக்கு அனுமதி கொடுத்துவிடு. நடந்ததை கெட்ட கனவாக நினைத்து உன் குழந்தையுடனும், தாயுடனும் நிம்மதியாக வாழ்க்கையை நடத்து.

நாகை சந்திரா, நாகப்பட்டினம்

என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
 
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
என் டைரி 238 -  சிநேகிதிக்கு.. சிநேகிதிக்கு..
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism