Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

Published:Updated:

ஓவியங்கள்: சேகர், ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

200 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கிதமற்ற இதயங்கள்!

என் உறவினரின் மகளுக்கு எத்தனையோ வரன் பார்த்தும் எதுவும் சரிப்படவில்லை. இதனால், அவளுடைய குடும் பத்தினர் அனைவரும் நொந்து போயிருந்தார்கள். 'வய தாகிக் கொண்டிருக்கிறதே... இன்னும் திருமணம் ஆக வில்லையே...’ என்று அவளும் வருத்தத்தில்தான் இருந்தாள். ஒரு நாள் அவளுடன் நான் ஷாப்பிங் சென்றிருந்தேன். அப் போது அங்கு வந்த எங்கள் இருவரின் உறவுக்கார பெண் ஒருத்தி, ''என்ன... எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?'' என்று சத்தமாகக் கேட்க, அந்தப் பெண் பதில் சொல்ல முடியாமல் வேதனையுடன் தவித்தாள்.

'இங்கிதம் என்றால் கிலோ என்ன விலை?’ என கேட்கும் இதுபோன்றவர்கள், மற்றவர்களை சங்கடப்படுத்தும் கேள்விகளை பொது இடங்களில் சத்தமாக கேட்கக் கூடாது என்பதை எப்போதுதான் உணர்ந்துகொள்வார்கள்?!

- விஜயா சீனிவாசன், திருவெறும்பூர்

பாராட்டுக்கு பஞ்சம் எதற்கு?

சமீபத்திய விநாயகர் சதுர்த்தி விழா, எங்கள் பகுதியில் உள்ள கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம், முசிறி, 'இறை ஒளி’ என்ற ஆதரவற்றோர் காப்பகத்தைச் சேர்ந்த 'தேன் இன்பச்சாரல்’ எனும் திரைப்பட இன்னிசைக் குழுவிலுள்ள இருவர், தாமாக முன்வந்து விழா மேடையில் பக்திப் பாடல்களை இன்னிசை மழையாகப் பொழிந்தனர். விழித்திறன் அற்ற மாற்றுத்திறனாளிகளான அவர்கள், தமது குறையை நினைத்து முடங்கிடாமல், குரல் வளத்தால் பிறரை மகிழ்விக்கும் வேலையைச் செய்து வருகின்றனர். ஆனால், கூட்டத்தினர் ஒட்டுமொத்தமாக கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தாமல், சிலர் மட்டுமே உற்சாகப்படுத்தினர். இது, என் மனதை வருத்தியது. பாராட்டப்பட வேண்டியவர்களை, தக்கசமயத்தில் பாராட்டுவதுதானே மனிதநேயம்!

- லலிதா சண்முகம், உறையூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

10 ஆயிரம் ரூபாய் செலவு வைத்த 10 ரூபாய் பொம்மை!

கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழியின் கணவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். இடுப்பு எலும்பு விலகியிருப்பதாகவும் சர்ஜரி செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளதாகவும் தோழி தெரிவித்தாள். கையால் அமுக்கினால், வழுக்கிக்கொண்டு ஓடும் விளையாட்டுப் பொம்மையை, நான்கு வயது மகன் கீழே வைத்திருந்ததைக் கவனிக்காமல், அதன் மேல் தவறுதலாகக் காலை வைத்ததால், 'சர்’ரென்று வழுக்கி, பேலன்ஸ் தவறி தோழியின் கணவரை தரையில் விழச் செய்திருக்கிறது. கவனமின்மையால்... 10 ரூபாய் பொம்மை 10,000 செலவையும், கூடுதலாக வலியையும் கொண்டுவந்துவிட்டது! இனி, சிறிய விஷயங்களிலும், உரிய கவனம் செலுத்துவோமா தோழிகளே!

- ம.ஜெயமேரி, சிவகாசி

ஐம்பது பர்சன்ட் டிஸ்கவுன்ட்... அடாவடி சேல்ஸ்!

பிரபல டிபார்மென்ட்டல் ஸ்டோர் ஒன்றுக்கு சென்றிருந்தேன். '50% டிஸ்கவுன்ட்' என்று போர்டு வைக்கப்பட்டு, பிரெட், முந்திரி, காம்ப்ளான் உட்பட நிறைய பொருட்கள் அதன் கீழே வைக்கப்பட்

டிருந்தன. 'எப்படி 50% தள்ளுபடியில் இவர்களால் கொடுக்க முடிகிறது’ என்ற சந்தேகத்துடன் 'எக்ஸ் பயரி டேட்’ பார்த்தால்... சில பொருட்கள் 2, 3 நாட்களில் முடிபவையாக இருந்தன. பிரெட் அன்றுடன் காலாவதியாவதாக இருந்தது. 2, 3 நாட்களில் பால் பவுடர், காம்ப்ளான் போன்றவற்றை உபயோ கிக்க முடியுமா? மிகப் பெரிய நிறுவனங்களே... இப்படி ஏமாற்றுவதை என்னவென்று சொல்வது? இதுபோன்ற விஷயங்களில் நாம்தான் மிகமிக உஷாராக இருக்க வேண்டும். பொருட்கள் வாங்கும் போது கவனமாக காலாவதி தேதியைப் பார்த்து வாங்கினால்... பணமும் வீணாகாது, டாக்டர் செலவும் இருக்காது.

- சுப்பலஷ்மி சந்திரமௌலி, மடிப்பாக்கம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism