Published:Updated:

அலைபாயும் நெஞ்சினிலே! - 1

உண்மைகளை உரசும் உணர்ச்சித் தொடர் இயக்குநர் சுசீந்திரன், படம்: எஸ்.கேசவசுதன்

##~##

ங்கள் மகன் தினமும் கல்லூரி, வேலை என புறப்பட்டுப் போகிறார். ஆனால், தினமும் அங்கேதான் போகிறார் என்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா?

உங்கள் மகளுக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்தது ஒரு செல்போன். ஆனால், அவரிடம் இன்னும் இரண்டு, மூன்று செல்போன்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி, நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். உங்கள் மகன் அல்லது மகள் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

காதல்...... காதல்... காதல்!

இந்த வார்த்தையைக் கடக்காதவர், இங்கே இருக்க முடியாது. காதல், தவறில்லை. ஆனால், அதைத் தேர்ந்தெடுக்கும் 'ரெண்டுங்கெட்டான் வயசு'தான் தவறாக இருக்கிறது.

அலைபாயும் நெஞ்சினிலே! - 1

வீட்டு வரவேற்பறையிலேயே 24 மணி நேரமும் காதல் பாடம் நடத்துகின்றன தொலைக்காட்சிகள். விளைவு... மீசை முளைப்பதற்குள்ளாகவே காதல் பற்றி தெரிந்துகொள்ளும் ஆசை முளைத்து... பத்து, பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே காதல் தேடல் ஆரம்பமாகிவிடுகிறது.

சரியான வயதில் காதல் வந்தாலும், அத்தனை காதல்களுமே... கல்யாணத்தில் கனிகின்றனவா? அப்படியே கனிந்தாலும், காதலித்த காலத்தில் பேசிய 'ஈருடல் ஓருயிர்' டயலாக் உயிரோடுதான் இருக்கின்றதா?

காதல் இயற்கையானது. ஆனால், அதை செயற்கையாக தூண்டும் சக்திகள், அதீத ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது, பெற்றோர்களுக்கும்... இளம் பருவத்தினருக்கும் விடுக்கப்பட்டிருக்கும் சவால்தான்! வளரிளம் பருவக் காதல், தற்கொலை... என்று எல்லாவற்றிலும் பெற்றோருக்கும் பொறுப்பு இருக்கிறது - நிறையவே!

அதற்காக, 'நம்ம பொண்ணும் காதலிப்பாளோ...', 'நம்ம பையனும் சிக்கியிருப்பானோ' என்று ஏதாவது அதிரடியில் இறங்கிவிடாதீர்கள். அக்கறையையும் கவனத்தையும் மட்டுமே அவர்கள் மீது பதியுங்கள் பெற்றோர்களே!

இளசுகளே...'என்ன இது, சுசீந்திரன் காதலையே எதிர்ப்பார் போலிருக்கிறதே!' என்று நினைத்துவிடாதீர்கள்.

அலைபாயும் நெஞ்சினிலே! - 1

காதலுக்கு நான் எதிரியல்ல. ஆனால், காதலைப் புனிதப்படுத்தி மட்டுமே திரைக்கதையில் சொல்லிக் கொண்டிருப்பதிலும் எனக்கு விருப்பம் இல்லை. யதார்த்த நிலையைப் படம் பிடிக்கவே விரும்புகிறேன். படம் பார்த்தவர்களில் குறைந்தபட்சம் இரண்டு சதவிகிதத்தினர், 'காதல் என்பது இதுதான்' என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டாலே... போதும்.

எல்லோருக்குமே புரிதல்கள் இருந்துவிட்டால், வாழ்க்கைப் பக்கத்தை எளிதாகப் புரட்டலாம். சுற்றியுள்ள மனிதர்களைப் படிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அப்படி, நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களிடம் படித்தவற்றை இனி அவள் (விகடன்) தோறும், உங்களிடம் பேசப் போகிறேன்!

கேளுங்கள்... விவாதியுங்கள்... முடிவெடுங்கள்!

- அலைபாயும்...