Published:Updated:

வீட்டுத்தோட்டம்... ஆஸ்பத்திரி செலவை பாதியா குறைக்கும்!

ஆர்.குமரேசன் , படங்கள்: மு.லலித் குமார்

வீட்டுத்தோட்டம்... ஆஸ்பத்திரி செலவை பாதியா குறைக்கும்!

ஆர்.குமரேசன் , படங்கள்: மு.லலித் குமார்

Published:Updated:
##~##

'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ எனும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு, இம்முறை திருச்செங்கோடு, செங்குந்தர் திருமண மண்டபத்தில் செப்டம்பர் 29 அன்று களைகட்டியது. திருச்செங்கோடு, ரெட்ராக் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம் மற்றும் பாரத ஸ்டேட் பாங்க் ஆகியவற்றுடன் இணைந்து, 'அவள் விகடன்’, 'பசுமை விகடன்’ இதழ்களின் சார்பில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமரன், தலைமையேற்று நிகழ்வைத் தொடங்கி வைக்க... ''உங்கள் மாத பட்ஜெட்டில் காய்கறிச் செலவை மட்டுமல்ல, மருத்துவ செலவையும் கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல், வீட்டுத்தோட்டத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் சில மூலிகை மற்றும் அழகுத் தாவரங்களை வளர்த்து விற்பனை செய்வதன் மூலமாக கணிசமான வருமானத்தையும் பெற முடியும்'' - என்று எடுத்த எடுப்பிலேயே ஒட்டுமொத்தக் கூட்டத்தின் கவனத்தையும் ஈர்த்தார்... முன்னோடி வீட்டுத்தோட்ட விவசாயி 'கோயம்புத்தூர்’ வின்சென்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டுத்தோட்டம்...  ஆஸ்பத்திரி செலவை பாதியா குறைக்கும்!

''அந்த காலத்துல யாருங்க ஆஸ்பத்திரிக்கு போனா? இப்போ, சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு ஓடுறோம். ஒவ்வொரு வீட்டுலயும் துளசி, மருதாணி, கீழாநெல்லி... மாதிரியான சில குறிப்பிட்ட மூலிகை செடிகளை வளர்த்தா, ஆஸ்பத்திரி செலவுல பாதியைக் குறைச்சுடலாம். அழிஞ்சுட்டு வர்ற நம்ம பாரம்பரிய மூலிகைகளைக் காப்பாத்தி, அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கற திருப்தியும் கிடைக்கும். வீட்டுல காய்கறிகளை வளக்கறது மூலமா, கழிவுகளை உரமாக்கலாம். விஷமில்லாத காய்கறிகளை விளைய வெச்சு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இயற்கை பத்தின புரிதலையும் ஏற்படுத்தலாம்'' என்று பட்டியலிட்ட வின்சென்ட், வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறைகளைப் பற்றி விரிவாகச் சொல்லிக் கொடுத்தார்.

தொடர்ந்து, 'தேனீ வளர்ப்பு’ தொடர்பான பயிற்சியை திருச்செங்கோடு நடேசன், 'காளான் வளர்ப்பு’ பற்றிய செய்முறை விளக்கத்தை 'திண்டுக்கல்’ கவிதா மோகன்தாஸ் அளித்தனர். அரை நாளில் கிடைத்த அருமையான பயிற்சிக்கு, நன்றி சொல்லிக் கலைந்தனர் அனைவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism