Published:Updated:

“ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டேன்!''

அலப்பறை கொடுக்கும் 'தேனடை’ மதுமிதா..! பொன்.விமலா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டேன்!''

அலப்பறை கொடுக்கும் 'தேனடை’ மதுமிதா..! பொன்.விமலா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

''ஐய்யய்யோ...ஆளை விடுங்க சாமிகளா!''னு அலறினபடி துண்டைக்  காணோம்... துணியக் காணோம்னு நம்ம 'அடை... தேனடை' மதுமிதா ஓடி வந்திருக்காங்கனு ஒரு சேதி காத்து வாக்குல வந்து சேர...

'யாரோ ஒரு பயபுள்ளை கிட்ட சிக்கிருச்சு போல இந்த தேனடை. அவள் 16-ம் வருஷ சிறப்பிதழுக்கு காமெடி பீஸு யாராச்சும் சிக்குவாங்களானு தேடிட் டிருந்தோமே... பார்ட்டியை அமுக்கி, விஷயத்தைக் கறந்துட வேண்டியது தான்’னு நினைச்சு, விசா ரணையைப் போட்டா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அட, அந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா’'னு கலகலனு சிரிக்கறாங்க 'தேனடை'.

''விகடன் டெலிவிஸ் டாஸோட 'அழகி' சீரியல்ல மதி கேரக்டர்ல நடிக்கற ஷாலுவும் நானும் ஒரு தரம் ஷூட்டிங் ஸ்பாட்ல ஜாலியா பேசிட்டு இருந்தோம். திடீர்னு ஷாலு கொண்டு வந்த டிபன் பாக்ஸை பிடுங்கி, ஓபன் பண்ணதும் சும்மா ஜிவ்வுனு சுண்டி இழுத்துச்சு, மீன் கொழம்பு வாசம்! நான், ஏற்கெனவே நான்-வெஜ் பைத்தியம். இதுல மீன் கொழம்பு வாசம், மூக்கைத் துளைக்க... நாக்கு நாலு இன்ச் வெளியில தள்ளிருச்சு. கபால்னு ஒரு மீனை எடுத்து, அப்டியே ஸ்லோமோஷன்ல மண்டையை மல்லாக்க சாச்சுக்கிட்டு 'முதல் மரியாதை’ ராதா மாதிரி, இன்ச் பை இன்ச்சா வாய்க்குள்ள விட்டுட்டு பாத்தா... நாக்கு நாண்டுக்கிச்சு. 'என்ன கொடும ஷாலு?’னு மைண்ட் வாய்ஸ்ல அவளை திட்டினாலும்... உள்ளாற போன மீனை துப்பவா முடியும்?

“ரெண்டு ஆஸ்கர் வாங்கிட்டேன்!''

கொழம்பு ருசியா இல்லாததைக் கூட பொறுத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு முன்ன, 'நான் வெக்கிற மீன் கொழம்ப, யாராலும் அடிச்சுக்கவே முடியாது’னு ஷாலு கொடுத்த பில்டப்பைத்தான் தாங்கிக்க முடியல. 'வாரன்ட் இல்லாம வாய்தாவுக்கு வந்தா, வர்றதை சந்திச்சுத்தானே ஆகணும்’னு மனசுல நினைச்சுக்கிட்டே, 'எப்படி தப்பிக்கிறது?’னு யோசிச்சேன். பக்கத்துல இருந்த அம்மா கேரக்டரை கூப்பிட்டு, 'வாங்க... வாங்க இந்த ஃபிஷ் செம டேஸ்ட்டா இருக்கு’னு சொல்லி, அவங்க தலையில கட்டிட்டு 'ஆள விடுங்க சாமிகளா’னு...’ துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடி வந்துட்டேன்.

இன்னிக்கும் நாங்க மூணு பேரும் ஒண்ணா சேர்ந்தா... அந்த மீன் கொழம்பு காமெடியச் சொல்லிச் சொல்லி சிரிச்சுப்போம்''

- நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே சொன்ன தேனடை, திடீர்னு முகத்தை சீரியஸா வெச்சுக்கிட்டு... ''எனக்கு ஆஸ்கர் அவார்டு கிடைச்சுருக்கு’'னு சொல்ல, இப்ப நாம 'கபகப'னு சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்.

''சும்மா சிரிக்காதீங்க... உங்களுக்கு இன்னும் நியூஸ் வந்து சேரலங்கறதுக்கு நான் பொறுப்பா..! நீங்க லேட் பிக்கப். 'தேனடை’, 'ஜாங்கிரி’ இந்த ரெண்டும்தான் எனக்கு கிடைச்ச ஆஸ்கர் அவார்ட்ஸ். குட்டி பசங்க தொடங்கி, பல்லு போன பெரிசுக வரைக்கும் இதை சொல்லித்தான் என்னை கூப்பிடறாங்க.  இது எனக்குக் கெடைச்ச ரெட்டை ஆஸ்கர் அவார்ட்ஸ் இல்லையோ!''னு சொல்லி, மறு படியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க தேனடை!

''என்னோட அடுத்த படம்... 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. கெட்டப்ப மாத்தி, செட்டப்ப மாத்தி ஒரு கலக்கு கலக்கியிருக்கேன் பார்த்து ரசிச்சிருப்பீங்க. அதுக்கடுத்து 'முனி பார்ட்-3’, விஜய் சாரோட 'ஜில்லா’னு என்னோட ரவுசு ரவுண்ட் ஆரம்பமாயிருச்சு''னு சொன்னவங்க,

''விஜய் சாரை, உம்மணாமூஞ்சினுதான் சொல்வாங்க. ஆனா, அவரைப் போல கலகல பார்ட்டியை பாக்க முடியாது. ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாரும் ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருந்தோம். அவரு மட்டும் ஒரு வேன் மேல ஏறி நின்னுட்டு பரிதாபமா பாத்துட்டு இருந்தார். 'ஏன் சார் இப்படி உம்முனு இருக்கீங்க?’னு கேட்டேன். 'ஏம்மா, என்ன பாத்தா காமெடியா இருக்கா உனக்கு? நீங்க கீழ இருந்து வேலை பாக்கறீங்க. நான், அந்தரத்துல வேலை பாக்குறேன். நீயும் மேல ஏறி வந்து நின்னு பாரும்மா. உலகமே தலைகீழா தெரியும். இதான் லாஜிக்’னு சொல்லிட்டு, 'ம்... பயத்த கன்ட்ரோல் செய்றதுக்கு என்னவெல்லாம் பண்ணி சமாளிக்க வேண்டியதா இருக்கு’னு அவரு முனங்கியதும்... ஷூட்டிங் ஸ்பாட்டே செம கலகல!'' - முத்துப் பல் மொத்தமாக தெரிய சிரிச்ச மதுமிதா,

''நான் நெனச்சா எப்ப வேணும்னாலும் சி.எம் ஆகலாம்’'னு அடுத்த பிட்டை அசால்டா தூக்கி போட்டார்.

என்னது சி.எம்மா£££..?

''அட, ஆமாங்க... ஸ்கூல்ல நான்தான் வாயாடிப் பொண்ணு. சுட்டுப் போட்டாலும் சுத்தமா படிப்பு வராது. பத்தாவதோட படிப்புக்கு 'குட் பை’ சொல்லிட்டேன். அதுக்கப்புறம் கனவுலதான் காலேஜ் படிச்சேன். இப்ப என்ன குடியா முழுகிப்போச்சு... டாக்டர், வக்கீல், கலெக்டர்னு எந்த ரோல் வேணும்னாலும் பண்ணலாம்ல. அதேமாதிரி சி.எம் ரோல் கூட பண்ணலாம்ல!'' - சொல்லிட்டு அவர் சிரிச்ச சிரிப்புல...

''ஐய்யய்யோ... ஆளை விடுங்க சாமி'’னு 'துண்டை காணோம் துணியை காணோம்’னு ஓட்டமெடுத்துட்டேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism