Published:Updated:

வெஜ் ஆர்ட்

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

வெஜ் ஆர்ட்

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##

''வெஜிடபிள் கார்விங்... இன்னிக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கக்கூடிய பிஸினஸா வடிவெடுத்துட்டு இருக்கு. கத்துக்கணும்ங்கிற ஆர்வம் மட்டும்தான் இதுக்கு முதல் முதலீடு. அது மட்டும் இருந்துட்டா... மத்த எல்லாமே தன்னால அமைஞ்சுடும்'' என்று சொல்லும் ரஜினி, சென்னை, சாய் இன்ஸ்டிட்யூட்டில் 'கார்டு மேனேஜர்' (Garde manger) எனும் உணவு அலங்கரிப்பு படிப்பை முடித்திருப்பவர். சென்னை, காட்டுப்பாக்கத்தில் இருக்கும் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேடரிங் டெக்னாலஜி-யில், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக, உணவு அலங்கரிப்பது தொடர்பான பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

''சாதாரணமா 500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி கார்விங் டிசைன் செய்து கொடுத்தா... 1,500 ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். பிறந்தநாள், நிச்சயதார்த்தம், திருமணம் இப்படி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கார்விங் டிசைன்கள் மூலமா வெரைட்டியா டெக்கரேட் பண்ணலாம். இன்னிக்கு நிறைய பேர் ஃப்ரூட்ஸ் அலங்காரத்தையும் விரும்பறாங்க. பெண்கள் அதிக அளவுல ஈஸியா இந்த பிஸினஸுல இறங்கலாம்'' என்று வரவேற்பு சொல்லும் ரஜினி, இங்கே வெஜி டபிள் பென்குயின் கார்விங்கை உங்களுக்காக செய்து காண்பிக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெஜ் ஆர்ட்

பென்குயின் கார்விங்

தேவையான பொருட்கள்: பெரிய கத்திரிக்காய் (முற்றலாகவோ.. பிஞ்சாகவோ இருக்கக் கூடாது) - 1, கேரட் - 1, கார்விங் நைஃப், பல்குத்தும் குச்சி.

செய்முறை: கத்திரிக்காயின் அடிப் பாகத்தில் ஒரு ரூபாய் நாணயம் வடிவில் கட் செய்யவும் (படம் 1).

கத்திரிக்காயின் இருபக்கங்களிலும் கீழிருந்து மேலாக (பென்குயின் பறவையின் கை போன்ற அமைப்பு கிடைப்பதற்காக) படத்தில் காட்டியுள்ளது போல், கட் செய்யவும் (படம் 2). முழுமையாக கட் செய்யக்கூடாது.  

கட் செய்திருக்கும் கத்திரிக்காயின் அடிப்பாகத்தை சுற்றி 'வீல் பற்கள்’ வடிவத்தில் 'கட்' செய்யவும். படத்தில் இரண்டு கால்களைப் பிரித்துக் காட்டியிருப்பது போலவும் கட் செய்யவும் (படம் 3).

வெஜ் ஆர்ட்

கத்திரிக்காயின் வயிற்றுப்பகுதியில் முட்டை வடிவில் 'கட்' செய்யவும். பின்பு, கழுத்துப் பகுதியில் அரை இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வட்டமாக கட் செய்யவும் (படம் 4).  

கேரட்டை தோல் சீவி, குல்ஃபி ஐஸ் வடிவத்தில் தயார் செய்து, பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தி கத்திரிக்காயின் மேல் பகுதியில் செருகிவிடவும் (படம் 5) இப்போது கண்களைக் கொள்ளைகொள்ளும் பென்குயின் ரெடி!

என்ன... உங்க வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இப்படி கலக்கலாக உபசரிக்க தயாராக இருக்கீங்கதானே?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism