Published:Updated:

"சின்ன வயசுக்கே போயிட்டேன்...''

கரூரைக் கலக்கிய 'அசத்தல் பெண்கள்’! பி.கமலா, படங்கள்: வீ.சிவக்குமார், ஜா.கிளாட்வின்  

"சின்ன வயசுக்கே போயிட்டேன்...''

கரூரைக் கலக்கிய 'அசத்தல் பெண்கள்’! பி.கமலா, படங்கள்: வீ.சிவக்குமார், ஜா.கிளாட்வின்  

Published:Updated:
##~##

 குழந்தைப் பருவத்து விளையாட்டுகளும், ஆடிப்பாடிய ஆனந்தமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்று மணல் ஊற்று போல இருந்துகொண்டே இருக்கும். 'மீண்டும் அந்த சந்தோஷ தருணம் வாய்க்காதா..?' என்கிற ஏக்கம்... 'எனக்கில்லை' என்பவர்கள்... இங்கே யாருமே இருக்க முடியாது. அந்த சந்தோஷத்தை வாசகிகளுக்கு மறுபடியும் கொண்டு வரும் வகையில்... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கூடவே அசத்தலான மதிய விருந்து என ஒரு நாள் முழுக்க கரூரைக் கலக்கியது... 'அசத்தல் பெண்கள்' நிகழ்ச்சி!

அவள் விகடன் மற்றும் ஜுவல் ஒன் நிறுவனம் இணைந்து வழங்கிய இந்நிகழ்ச்சி... செப்டம்பர் 29 அன்று கொங்கு திருமண மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது. இதில் பங்கேற்க... தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்தனர் வாசகிகள்! சக்தி நர்ஸிங் கல்லூரி மாணவிகளில் 40 பேர், தன்னார்வலர்களாக பங்கேற்று நிகழ்ச்சி அழகாக நடந்தேற உதவினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்டுக்கு நடனம், மெஹந்தி, ஸ்கிப்பிங், பக்கெட் பால், மியூசிக்கல் சேர், பாட்டுக்குப் பாட்டு, பந்தடித்தல் போன்ற பல போட்டிகளையும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பானுமதி ஒருங்கிணைக்க... பங்கேற்ற வாசகிகள், மாலை வரை உற்சாகம் குறையாமல் கலக்கினர். எதிர்பாராத பரிசுப் போட்டியாக நீளமான தலைமுடி உள்ளவர்களில் மூன்று பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது. ஜுவல் ஒன் நிறுவனத்தின் ஒரு ஜோடி தோடு மற்றும் நெக்லஸின் உத்தேச விலையைச் சொன்ன மூன்று தோழிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

"சின்ன வயசுக்கே போயிட்டேன்...''

'அனைத்துப் போட்டிகளிலுமே பங்கேற்க வேண்டும்’ என்கிற ஆர்வத்தோடு பெரும்பாலானோர் வந்திருந்தாலும், நேரம் குறைவாக இருந்ததால், வாய்ப்புக் கிடைக்காத தோழிகளில் சிலருக்கு ஏகத்துக்கும் கோபம். நம்முடைய வருத்தத்தைப் பதிவு செய்ததும்... புரிந்துகொண்டு சமாதானமாகினர்.

தாய், மகள், பேரக்குழந்தைகள் என மூன்று தலைமுறையும் மேடையேறி குத்தாட்டம் போட்டது, கண்கொள்ளாக் காட்சி! மேட்டுப்பாளையத்திலிருந்து வந்திருந்த 63 வயதான பாலாமணி, ''என்னோட சின்ன வயசுக்கே போயிட்டேன்'' என்றபோது, துளிர்த்தது ஆனந்தக் கண்ணீர்.          

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism