Published:Updated:

இன்றும் தொடரும்... 16 வயது ஏக்கம்!

எம்.குணா, படம்: கே.ராஜசேகரன்

இன்றும் தொடரும்... 16 வயது ஏக்கம்!

எம்.குணா, படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

'படைத்தானே...
பிரம்ம தேவன்...
பதினாறு வயதுக் கோலம்'

வாழ்க்கைப் பாடம் புரிந்தும் புரியாமலும் தடுமாறும் வயதுக் கோலம் அது. ஆணோ... பெண்ணோ... இருவருக்குமே உற்சாக உலகின் ஆரம்ப வயது அது. அலையடிக்கும் அந்த 16 வயதில் 'அலைகள் ஓய்வ தில்லை' படத்தில் அறிமுகமாகி, தமிழில் முன்னணி நடிகையாக உலா வந்தவர் ராதா. தற்போது... கார்த்திகா, துளசி என இரு டீன் ஏஜ் நடிகைகளுக்கு அம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் 'பதினாறு வயதுக் கோல' நினைவுகள் பற்றி இங்கே பேசுகிறார் ராதா.

''நான் 9-ம் கிளாஸ் படிக் கும் போதுதான்... கதாநாய கியை தேடி பாரதிராஜா சார் கேரளாவுக்கு வந்தார். அவ ருடைய தேடல்... 16 வயது பெண். கிட்டத்தட்ட அந்த வயதைத் தொட்டிட்டிருந்த என்னை சட்டுனு தேர்ந்தெடுத் துட்டார். 'அலைகள் ஒய்வ தில்லை’ படத்தில் நடிக் குறப்ப.... 16 வயசு.

சினிமா, அது தரப்போற புகழ்னு கற்பனைகள் எல்லாம் எனக்குள்ள எழுந் தாலும்... டீன் ஏஜ் வயசுக்குரிய பல விஷயங்களையும் மிஸ் பண்றோமேங்கற கவலைதான் அதிகமா இருந்துச்சு. அப்போ வெல்லாம் ஸ்கூல்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க ஏகப் பட்ட கண்டிஷன் போடுவாங்க. சின்னத் தப்பு செய்தாலும்... உடனே அம்மா, அப்பாவை ஸ்கூலுக்கு வரச் சொல்லி, அவங்க முன்ன நம்மள நிக்க வெச்சு, கேள்வியா கேட்டு பயமுறுத்துவாங்க. பிராக்ரஸ் ரிப் போர்ட்னு ஒண்ணக் கொடுத்துடுவாங்க. அதுல அப்பாகிட்ட கையெழுத்து வாங்கறது இருக்கே... பெரும்பாடுதான்.

இன்றும் தொடரும்...    16 வயது ஏக்கம்!

இந்தத் தொல்லையெல்லாம் இல்லாம இருக்கறதுக்காக.. 'எப்படா காலேஜுக்கு போவோம்'னு மனசு ஏங்கித் தவிக்கும். 'காலேஜ் போயிட்டா... யாரும் கேள்வி கேட்கமாட்டங்க. நம்ம இஷ்டத்துக்கு நடக்கலாம்னு ஏகப்பட்ட கற்பனை செய்து வெச்சுருந் தேன். என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் காலேஜுக்குப் போக... நான் மட்டும் எதிர்பாராதவிதமா சினிமாவுக்கு வந்துட்டேன். அதனால தோழிகளை ரொம்பவே மிஸ் பண்றோம்ங்கிற ஏக்கம்... இன்னிக்கும்கூட வாட்டி வதைக்குது. கூடவே, காலேஜுல சேர்ந்து படிக்க முடியலையேங்கற ஏக்கமும்'' என்று சொல்லி, கண்கள் மூடித் திறக்கும் ராதா,

''டீன் ஏஜ்ல என்னென்னவெல்லாம் நான் இழந்தேனோ... அது எதையும் கார்த்திகா, துளசி ரெண்டு பேருமே மிஸ் பண்ணக் கூடாதுங்கறதுல ரொம்பத் தெளிவா இருக்கேன். சினிமாவுல நடிச்ச அனுபவம் இருக்கறதால, ரெண்டு பேரையும் கரெக்ட்டா வழி நடத்திட்டிருக்கேன்னுதான் சொல்லணும். 'சினிமா புகழ்ல சிக்கி மத்த எதையும் அவங்க இழந்துடக் கூடாது... யதார்த்த வாழ்க்கை யோட நிதர்சனம் அவங்களுக்கு புரியணும்'னுதான்... பொது நிகழ்ச்சிகள், ஹோட்டல், ஷாப்பிங் எல்லா இடங்களுக்கும் தவறாம அழைச்சுட்டு போறேன்.

முன்னயெல்லாம் பெரும்பாலான அம்மாக்கள்... தங்களோட பொண்ணுங்கள தூரத்துல வெச்சுதான் பார்ப்பாங்க. பாட்டி, அத்தை, பக்கத்து வீட்டு அக்கா இப்படித்தான் பொண்ணுங்க நெருக்கமா இருப்பாங்க. அந்தச் சூழல் இப்போ மாறிட்டிருக்கு. அம்மா மட்டுமில்ல, அப்பாவும் பொண்ணுங்கள ஃப்ரெண்ட்ஸ் மாதிரி நடத்துறது அதிகரிச்சுட்டு வருது. இது ரொம்ப ரொம்ப நல்ல மாற்றம். இப்படி ஓப்பனா பழகுற அப்பா, அம்மாகிட்ட... டீன் ஏஜ் பொண்ணுங்களும் ஓப்பனா மனம்விட்டு பேசும்போது... அது நிச்சயமா பொண்ணுங்களோட தைரியத்தை வளர்த்தெடுக்கும். இதுக்கு என் பொண்ணுங்களே உதாரணம்தான்'' என்று பெருமிதப் பார்வையை வீசுகிறார்.

தொடர்ந்த ராதா, ''டீன் ஏஜ் பொண்ணுங்களே... 16 வயசுலயே காலம்பூராவும் இருப்போம்னு கனவு காணாதீங்க. கண்மூடி திறக் கறதுக்குள்ளே... அஞ்சு வருஷம் காணாமப் போயிடும். மனைவி, அம்மா, பாட்டினு ஏகப்பட்ட பருவங்கள் இருக்குங்கறத எப்பவும் மனசுக்குள்ள நினைச்சுட்டே இருக்கணும்.

டீன் வயசுல கரெக்ட்டா... கட்டுப்பாடா இருக்கற பொண்ணுங்க... பிற்காலத்துல கணவனுக்கு நல்ல மனைவியா, மகளுக்கு நல்ல அம்மாவா, பேத்திக்கு நல்ல பாட்டியா இருப்பாங்க. மத்தபடி அந்த வயசுல எப்படி வேணும்னாலும் ஜாலியா இருக்கலாம்னு வாழற பொண்ணுங்களோட நிலை, பிற்காலத்துல எல்லாரும் கேலி பேசுற அளவுக்குகூட மாறுறதுக்கு ரொம்பவே வாய்ப்பிருக்கு'' என்று அழகான அட்வைஸ் சொன்னார்... இரு மகள்களின் பொறுப்பான தாயாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism