Published:Updated:

காசு... பணம்... துட்டு... மேரேஜ் மேரேஜ்!

பி.ஆரோக்கியவேல்

காசு... பணம்... துட்டு... மேரேஜ் மேரேஜ்!

பி.ஆரோக்கியவேல்

Published:Updated:
##~##

 'ஒருவேளை ஏதாவது காரணத்தினால் எதிர்காலத்தில் இருவரும் பிரிய நேர்ந்தால், ஏஞ்சலினா ஜோலி சம்பாதித்த 900 கோடி ரூபாய் சொத்துக்கள், ஏஞ்சலினாவிடமே இருக்கும். பிராட்பிட் சம்பாதித்த ஆயிரத்து நூறு கோடி ரூபாய் சொத்துக்கள், பிராட்பிட்டிடமே இருக்கும். ஒருவர் சொத்தில் மற்றொருவர் சொந்தம் கொண்டாட மாட்டோம். ஆனால், பிள்ளை களை வளர்ப்பது... இருவரின் கூட்டுப் பொறுப்பு'

- இப்படி ஓர் ஒப்பந்தத்தை சட்டப் பூர்வமாக பதிவு செய்துகொண்டு, கல்யாணம் கட்டிக் கொள்ளத் தயாராகி விட்டது ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜோலி - பிராட்பிட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மர்லின் மன்றோவுக்கு அடுத்தபடியாக உலகம் நேசிக்கும் தேவதை... ஏஞ்சலினா ஜோலி! ஆஸ்கர், கோல்டன் க்ளோப், உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற அந்தஸ்து! சினிமாவாக இருந்தாலும் சரி, வீடியோ கேமாக இருந்தாலும் சரி... பெண் குழந்தைகளுக்கு ஏஞ்சலினா ஜோலிதான் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹி மேன். எல்லாமே! 'மரபியல் ரீதியில் கேன்ஸர் வரலாம்' என்று தெரிந்த மாத்திரத்திலேயே... கவர்ச்சி நடிகையான அவர், தன் இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டவர்.

காசு... பணம்... துட்டு... மேரேஜ் மேரேஜ்!

'டோம் ரைடர்’ படப்பிடிப்புக்காக கம்போடியா நாட்டுக்குச் சென்றபோது, போரினால் ஏற்பட்ட வடுக்களை நேரில் பார்த்தவர், உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த மக்களின் மீது பெரும் அக்கறை எடுத்துக் கொண்டார். அங்கே, தான் சந்தித்த ஓர் அனாதைக் குழந்தையை தத்தெடுத்தார். பிறகு... எத்தியோப்பியாவில் எய்ட்ஸ் பாதித்த குழந்தை, வியட்நாம் நாட்டில் ஒரு குழந்தை என தத்தெடுத்தார். தனக்கும், நண்பர் பிராட்பிட் டுக்கும் பிறந்த மூன்று குழந்தைகளோடு... தத்து குழந்தைகள் மூன்றையும் ஒரே மாதிரி அன்போடு வளர்க்கிறார்.

இரண்டு பேருமே மிகப்பெரிய நட்சத்திரங்கள். பெரிய நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்துவிட்டவர்கள். இவர்கள் உச்சரிக்கும் சொல், உடுத்தும் ஆடை, சாப்பிடும் உணவு, குடிக்கும் குளிர்பானம், பயணிக்கும் கார், நடிக்கும் சினிமா... என்று எல் லாமே பல ஆயிரம் கோடிகளில் வர்த்தகம் பேசுபவை.

இத்தகைய சூழலில்தான்... திருமண ஏற்பாடுகள். திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றாகும் 'புனித’மான இணைப்பு என்போம் நாம். ஆனால், சாதாரண அமெரிக்க குடிமக்கள்கூட... புனிதம், உன்னதம், பவித்திரம் என பெரிய வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். அப்படியிருக்க, ஏஞ்சலினா - பிராட்பிட் ஜோடி, 'வானும் நிலவும் போல, மலரும் மணமும் போல’ என வார்த்தைப் பொறிகளுக்குள் சிக்குவார்களா என்ன? அதனால்தான்... இப்படியோர் ஒப்பந்தம்.

காசு... பணம்... துட்டு... மேரேஜ் மேரேஜ்!

தற்போதைக்கு இந்த பத்திரத்தை தயாரித்த வக்கீல் மட்டுமே வாய் திறந்திருக்கிறார். ''இது, வெகு பிராக்டிகலான முடிவு. ஏஞ்சலினாவுக்கு 38 வயது. பிராட் பிட்டுக்கு 49 வயது. திருமணத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை இருவருமே அனுபவப்பூர்மாக உணர்ந்தவர்கள். காரணம், இருவருக்குமே இது முதல் திருமணம் இல்லை. அதனால்தான்... 'உன் பணத்துக்காக நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. உனக்காக மட்டும்தான் திருமணம் செய்து கொள்கிறேன். உன்னுடைய வேலையில் நான் தலையிட மாட்டேன். என்னுடைய வேலையில் நீ தலையிடக் கூடாது’ என்று ஒருவருக்கு ஒருவர் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து தம்பதிகள் ஆகப்போகிறார்கள். இதனால், திருமணத்துக்கு பிறகு உறவில் உரசல்கள் வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு'' என்கிறார் அந்த வழக்கறிஞர்.

இதை, 'ப்ரிநாப்ஷியல் அக்ரிமென்ட்' (Prenuptial agreement) என்கிறார்கள் அமெரிக்காவில். திருமண வாழ்கையின்போது தம்பதிகளுக்கு இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும். ஒருவேளை பிரிந்துவிட்டால், இரண்டு பேரின் சொத்துக்களை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதையெல்லாம் தெளிவாக எழுதி பதிவு செய்துவிட்டு, திருமணத்தைப் பதிவு செய்யும் இந்தப் பழக்கம், அமெரிக்காவில் சமீபத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism